ஹைதராபாத்: ராய்துர்காமில் உள்ள பழமையான குதுப் ஷாஹி மசூதியின் கூட்டுக் கணக்கெடுப்பு, தெலுங்கானா மாநில வக்ஃப் வாரியம் மற்றும் ரங்கா ரெட்டி மாவட்ட அதிகாரிகளால் புதன்கிழமை மஸ்ஜித் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் AIMIM எம்எல்ஏ கவுசர் மொகிதீன் முன்னிலையில் நடைபெற்றது. ஆவணங்களை சரிபார்த்த பிறகு, சர்ச்சைக்குரிய சர்வே எண் 82 மசூதிக்கு சொந்தமானது என்பது உறுதி செய்யப்பட்டது.
பள்ளிவாசல் வளாகத்தில் இந்து தெய்வம்:
அதனுடன், குதுப் ஷாஹி மசூதியின் எல்லைச் சுவரைப் புனரமைப்பதற்காக ரூ. 5 லட்சம் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. அக்டோபர் 16 அன்று சுமார் 100-150 நபர்கள் கொண்ட இந்து கூட்டம் மசூதி வளாகத்தின் சுவர்களை உடைத்து அதன் வளாகத்தில் ஒரு இந்து தெய்வத்தின் சிலையை பலவந்தமாக நிறுவியது. இதில் பள்ளிவாசல் பகுதியில் சேதம் ஏற்பட்டது.
கூட்டு கணக்கெடுப்பு:
குதுப் ஷாஹி மசூதியின் சுற்றுப்புறங்களில் உள்ள நில ஆவணங்கள் மற்றும் சர்வே எண்களை அதிகாரிகள் சரிபார்த்து, நிலத்தின் அளவை வக்பு வாரிய அதிகாரிகளுடன் வருவாய்த்துறை அதிகாரிகள் அளவீடு செய்தனர். சந்திரகலா ஆர்டிஓ ராஜேந்திரநகர், டிஎஸ் வக்ப் வாரியத் தலைவர் முஹமத் மசியுல்லாகான், தாசில்தார் காந்திப்பேட்டை மண்டல் மற்றும் பிற அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்து, சர்வே எண் 82ல் உள்ள நிலம் குதுப் ஷாஹி மசூதிக்கு சொந்தமானது என்ற உறுதி செய்தனர்.
சம்பவ இடத்தில் இருந்த போலீசார், கோவில் கமிட்டியினருடன் பேச்சு வார்த்தை நடத்தி, மசூதி நிலத்தில் சமீபத்தில் கட்டப்பட்ட தற்காலிக கட்டமைப்பை, இடம் மாற்ற உள்ளதாக தெரிவித்தனர். இந்துக்களால் சேதப்படுத்தப்பட்ட பள்ளிவாசல் எல்லைச் சுவர்களை மறுகட்டமைப்பு செய்ய ரூ.5 லட்சத்தை வக்ஃபு வாரியம் ஒதுகியுள்ளது. மசூதி முழுவதும் அடையாள குறியீடுகள் நிறுவப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிவாசல் வளாகத்தில் பூஜை நடத்திய இந்துக்கள்:
கடந்த வாரம் அக்டோபர் 16 ஆம் தேதி மல்கம் செருவு ராய்துர்கம் குதுப் ஷாஹி மசூதி நிலத்துக்குள் இந்து கூட்டத்தினர் அத்துமீறி நுழைந்தனர். அங்கு சில இந்து மத சடங்குகள் செய்து ஆடுகளை அறுத்தனர். பின்னர் அங்கு கோவில் வடிவிலான ஒரு தற்காலிக கட்டமைப்பை நிறுவினர். அனைத்தும் லோலீசார் கண் முன்னே நடந்தது.
பின்னர் மல்லகம் செருவில் உள்ள குதுப் ஷாஹி மசூதி ஆக்கிரமிப்பு பிரச்சினையை தீர்க்க சைபராபாத் போலீசார் கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சி மற்றும் ரங்கா ரெட்டி மாவட்ட வருவாய் அதிகாரிகளின் உதவியை நாடினர்.
பள்ளிவாசல் நிலத்துக்குள் அத்துமீறி நுழைந்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நல்ல வேலை அங்கு பாஜக ஆட்சி இல்லை. பாபர் பள்ளிவாசல்/கியன்வாபி பள்ளிவாசல் பாணியில் நடைபெற்ற முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது என இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.