கடந்த நவம்பர் 26 ஆம் தேதி கோவை சீரானைக்கன்பாளையத்தில் நடந்த கும்பல் பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு குற்றவாளிகளை போலீசார் இன்று (30-11-19) கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள மேலும் இருவரை கைது செய்ய காவல்துறை சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது.
ப்ளஸ் 1 படிக்கும் மாணவி ஒருவர் 6 நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். குற்ற சமபவத்தில் ஈடுபட்டவர்கள் இந்த சம்பவத்தை வீடியோக பதிவு செய்துள்ளனர்.
சம்பவத்தன்று பாதிக்கப்பட்ட மாணவி தனது ஆண் நண்பருடன் பார்க்கில் தனது பிறந்த நாளை கொண்டாடி கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் மாணவியுடன் இருந்த ஆண் நண்பரை தாக்கி மாணவியை இழுத்து சென்று தனிமையான இடத்தில வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
பாலியல் வன்புணர்வுக்கு பிறகு மாணவியையும் அவரது ஆண் நண்பரையும் விடுவித்துள்ளனர். அங்கிருந்து மாணவி தனது ஆண் நண்பரின் வீட்டுக்கு சென்று தங்கியுள்ளார். அடுத்த நாள் தனது வீட்டிற்கு சென்ற மாணவி நடந்ததை தாயிடம் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவி ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போக்ஸோ மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 506 (ii) , 354 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து டி.ராகுல் (21), ஆர் பிரகாஷ் (22), எஸ் கார்த்திகேயன் (28) மற்றும் எஸ்.நாராயணமூர்த்தி (30) ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவாகியுள்ள மேலும் இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.