பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் (BHU ) சமஸ்கிருத வித்யா தர்ம் விஜியன் (SVDV) இலக்கியத் துறையில் ஒரு முஸ்லிம் உதவி பேராசிரியரை நியமித்தது கடும் எதிர்ப்பை உண்டாக்கியுள்ளது .
வியாழக்கிழமை (7-11-19) முதல் வர்சிட்டி வளாகத்தில் உள்ள துணைவேந்தர் இல்லத்திற்கு அருகிலுள்ள ஹோல்கர் பவனில் ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் துறையின் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் தங்கள் கோரிக்கையை நோக்கி கவனத்தை ஈர்க்க இசைக்கருவிகள் வாசித்தனர். ‘இந்து அல்லாதவர்’ நியமனம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.
“பல்கலைக்கழக மானிய ஆணையம் (யுஜிசி) விதிகள் மற்றும் தகுதியின் அடிப்படையில் வெளிப்படையான முறையில் பிஹெச்யூ சட்டத்தின் படி தான் ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டுள்ளது” என்று BHU பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
“எஸ்.வி.டி.வி சாகித்யா ’(இலக்கியம்) துறையில் நடைபெற்ற நேர்காணலைத் தொடர்ந்து இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது. யுஜிசி விதிகள் மற்றும் பிஹெச்யூ சட்டத்தின் படி வர்சிட்டி நியமனம் செய்துள்ளது, இதில் சாதி மற்றும் மத அடிப்படையில் பாகுபாடு காண்பதற்கு இடமில்லை. விண்ணப்பதாரரின் தகுதியின் அடிப்படையில் மட்டுமே ஆசிரியர் நியமனம் முழு வெளிப்படைத்தன்மையுடன் செய்யப்பட்டுள்ளது”
என்று பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் சிங் கூறினார்.
புதிய இந்தியாவில் ஒவ்வொரு மூளை முடுக்கிலும் வெறுப்பு பிரச்சாரம் ஆழம் ஆகி கொண்டுள்ளதற்கான சான்றுகளில் ஒன்றாக இந்த சம்பவத்தை நாம் காணலாம்.