Delhi Just In

‘எனது 6ம் அறிவு சொல்கிறது டில்லியில் பாஜக தான் ஆட்சி அமைக்கும்’ – டில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி கருத்து..

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்று தனது “ஆறாம் அறிவு” தன்னிடம் கூறியதாக பாஜகவின் டெல்லி யூனியன் பிரதேச தலைவர் மனோஜ் திவாரி இன்று தெரிவித்தார். யமுனா விஹாரில் உள்ள  வாக்குச் சாவடியில் வாக்களித்த திவாரி, பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் .

அப்போது அவர் “டெல்லி சட்டசபையில் குறைந்தது 50 இடங்களில் வெற்றி பெற்று நாங்கள் ஆட்சியை பிடிப்போம்.. என்னால் அனைத்து தரப்பிலிருந்தும் அதிர்வுகளை உணர முடிகிறது … இந்த முறை பாஜக அரசு தான் அமையும் என இன்று எனது ஆறாம் அறிவு சொல்கிறது” என்று கூறினார்.

இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கடும் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானார், மனோஜ் திவாரி.

முன்னதாக கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தலில் ஆம் ஆத்மீ கட்சி மொத்தமுள்ள 70 இடங்களில் 67 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக வெறும் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.