Kashmir

சற்றுமுன்: காஷ்மீரில் தற்போதுள்ள நிலையை வெளியிட்ட ஷா ஃபைசல்!

கிட்டத்தட்ட 8 முதல் 10 ஆயிரம் மக்களின் உயிரிழப்பு ஏற்படும் என்பதற்கேற்ப அரசு தயாராக உள்ளது என்று பேசப்படுகிறது. எனவே நாம் பகுத்தறிவுடன் செயல்பட வேண்டும். இவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் இருப்பதன் மூலம் கொத்துக் கொத்தாக மக்கள் கொல்லப்படுவதை தவிர்த்திட வேண்டும்.

ஷா ஃபைசல் காஷ்மீரின் முன்னாள் (IAS) மாவட்ட ஆட்சியராக பணி புரிந்தவர். பின்னாளில் காஷ்மீர் மக்களின் உரிமைகளுக்கு போராட பணியை ராஜினாமா செய்து விட்டு, அரசியல் கட்சியை துவங்கினார். இவர் காஷ்மீரின் மக்களின் அடுத்த தலைமுறை தலைவர்கள் பட்டியலில் பிரதானமானவர்.

ஷா ஃபைசல் பின்வருமாறு தனது முகநூல் கணக்கில் பதிவு செய்துள்ளார்.

காஷ்மீர் முன் எப்போதும் கண்டிராத இக்கட்டான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.( பிரபல ) ஜீரோ பாலம் முதல் விமான நிலையம் வரை ஒரு சில வாகனங்கள் மட்டுமே காணக் கிடைக்கின்றன. மற்ற இடங்களில் அனைத்தும் மக்கள் நடமாட்டமே இல்லாமல் உள்ளது. ஊரடங்கு உத்தரவின் போது வெளியே செல்ல பாஸ் கைகளில் வைத்திருக்கும் ஒரு சில நோயாளிகளின் நடமாட்டத்தை மட்டும் காணமுடிகின்றது.

முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா மெகபூபா முப்தி, சஜாத் லோன் போன்றோரின் நிலைகள் அறிய முடியவில்லை. அவர்களை தொடர்பு கொள்ளவும் இயலாது கடுங்காவலில் உள்ளனர்.

மற்ற மாவட்டங்களில் அனைத்தும் ஊரடங்கு உத்தரவு மிகவும் கடுமையாக பின்பற்றப்படுகிறது. காஷ்மீரின் 80 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் சிறைப் பிடிக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய நிலைப்படி உணவு, அத்தியாவசிய பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை அதிகாரிகளுக்கு சாட்டிலைட் போன் வழங்கப்பட்டுள்ளன. அதைத்தவிர வேறு தொடர்பு கொள்ளும் சாதனங்கள் எதுவும் இல்லை.

சற்று முன் வரை ரேடியோ வேலை செய்து கொண்டிருந்தது தற்போது அதுவும் இல்லை. கேபிள் சேவைகள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளன. டிஷ் டிவி வைத்தவர்கள் மட்டும் செய்திகளை காண முடிகிறது.

மருத்துவமனைகள் தங்கள் கொள் அளவிற்கும் மேலாக நிரம்பி வழிகின்றன.

மக்கள் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர். அவர்களுக்கு என்ன நடந்துள்ளது என்று அவர்களால் சுதாரித்து கொள்ள முடியவில்லை. மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

அரசியல் சாசன சட்டம் 370 பிரிவை நீக்கியது ஒருபுறமிருக்க ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தை நீக்கியது தான் கடந்த 70 ஆண்டுகளில் இந்தியா செய்த மிகப் பெரும் துரோகம் என்று மக்கள் என்னிடம் கூறி வருகின்றனர்.

போலீஸ் கடுங்காவலில் இருந்து தப்பிய ஒரு சில தலைவர்கள் தொலைக்காட்சிகளில் தோன்றி மக்களை அமைதி காக்குமாறு கூறி வருகின்றனர்.

கிட்டத்தட்ட 8 முதல் 10 ஆயிரம் மக்களின் உயிரிழப்பு ஏற்படும் என்பதற்கேற்ப அரசு தயாராக உள்ளது என்று பேசப்படுகிறது. எனவே நாம் பகுத்தறிவுடன் செயல்பட வேண்டும். இவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் இருப்பதன் மூலம் கொத்துக் கொத்தாக மக்கள் கொல்லப்படுவதை தவிர்த்திட வேண்டும்.

நாம் உயிரோடு இருந்தால் தான் இவர்களை எதிர்த்துப் போராடி ஜெயிக்க முடியும்.

இங்கு சாரை சாரையாக வந்து குவிந்துள்ள இராணுவத்தினர் மக்களுடன் பழகும் முறை மிகவும் கடின சித்தத்துடன் இருக்கிறது. மக்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

பல்வேறு இடங்களில் காஷ்மீரிகள் மிரட்டபடுவதும், அவமானப்படுத்துவதுமான சம்பவங்கள் நடைபெற்று வருவதாக எனக்கு வாய்வழிச் செய்தியாக வந்து கொண்டுள்ளது. எனினும் இப்படிப்பட்ட கொடுமையான சூழலிலும் காஷ்மீர் மக்கள் அமைதி காப்பது மனதிற்கு நிம்மதி அளிக்கின்றது.

விமான நிலையத்தில் இருந்த காஷ்மீர் இளைஞர்கள் கூட்டமாக என்னை நோக்கி வந்து, அடுத்து நாம் என்ன செய்யவேண்டும்? என்று கேட்டபடி இருந்தனர்.

நான் அதற்கு பதிலாக நாம் உச்சநீதிமன்றத்தை நாடுவோம். இந்த அநீதிக்கு எதிராக நாம் போராடுவோம் என்று கூறினேன்.

காஷ்மீரில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் நம் வரலாறையும், நம் அடையாளங்களையும் ஜனநாயக விரோதமாக அழிக்க நினைக்கும் சக்திகளுக்கு எதிராக ஒன்றிணைந்து உள்ளோம்.

தற்போதைக்கு அது தான் ஒரே நம்பிக்கை. உலக நாடுகளைப் பொறுத்தவரை சர்வதேச சமூகம் கண்களை மூடிக்கொண்டு உள்ளது. எனவே அங்கிருந்து எந்த ஊரு உதவியையும் எதிர்பார்க்க வில்லை.

இதில் சோகமான ஒரு விஷயம் என்னவென்றால் பட்டப்பகலில் எங்களிடமிருந்து திருடி கொள்ளப்பட்டுள்ள எங்கள் செல்வங்களை மீண்டும் ஒருநாள் நரேந்திரமோடி, அமித் ஷா இவர்களால் தான் திருப்பி அளிக்க முடியும்.

இழந்தது இழந்ததுதான். அனைத்தையும் இழந்து விட்டோம். எனினும் மீண்டும் வெகுண்டெழுந்து போராடும் எண்ணத்தை மட்டும் இழக்கவில்லை. அதை ஒரு போதும் இழக்கவும் மாட்டோம்.