கேரளா : முன்னாள் ஆர்.எஸ்.எஸ் செயற்பாட்டாளர் கடவூர் ஜெயன் என்கிற ராஜேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் நேற்று கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. சிறைத் தண்டனையுடன் கூடுதலாக, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தலா ரூ . 1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
தலைமறைவாக இருந்த குற்றம் சாட்டப்பட்டவர்கள் அச்சலமூடு போலீசில் சரணடைந்ததை அடுத்து இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
தண்டனை பெற்ற தொண்டர்கள் ஆர்.எஸ்.எஸ் :
ஜி வினோத், 42; கோட்டம்காராவைச் சேர்ந்த ஜி கோபகுமார், 36; கடவூரைச் சேர்ந்த சுப்ரமண்யன், 39; பிரணவ், 29; எஸ்.அருண், 34; மதிலிலைச் சேர்ந்த ரஜினீஷ், 31; லாலிவிலாவைச் சேர்ந்த தினராஜ், 31; மற்றும் கோபாலசாதனத்தைச் சேர்ந்த ஷிஜு, 36 மற்றும் வைகோமைச் சேர்ந்த பிரியராஜ், 39.
கொலை ஏன் ? :
கடந்த பிப்ரவரி 7, 2012 அன்று, கடவூரில் உள்ள ஒரு கோயில் அருகே ராஜேஷ் ஒன்பது ஆர்.எஸ்.எஸ் அடிப்படைவாதிகளால் வெட்டிக் கொல்லப்பட்டார். கோவிலின் வளாகத்தில் ஆயுதப் பயிற்சியில் பங்கேற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் (கொலை செய்தவர்கள்) மீது ராஜேஷ் புகார் அளித்ததற்காக பழிவாங்கும் செயலாக ராஜேஷ் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்னர்.