கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள சமூக சமையலறைகளில் (Community Kitchens) விநியோகிக்க 13 டன் அரிசி வழங்கியுள்ளார், எம்.பி யும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி.
மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும்இந்த அரிசி சமமாக விநியோகிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அடீலா அப்துல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். வயநாடில் மொத்தம் 51 பஞ்சாயத்துகள் மற்றும் ஐந்து நகராட்சிகள் உள்ளது.
வயநாடு தொகுதியில் உள்ள ஒவ்வொரு பஞ்சாயத்து சமுதாய சமையலறைக்கும் 500 கிலோ அரிசி + 50 கிலோ சனா தால் மற்றும் 50 கிலோ பாசிப்பயறு கிடைக்கும்.
இந்த உதவிகள் அனைத்தும் அவரது சொந்த பணத்தில் செய்யப்படுவதாகவும் பிரபல மலையாள ஊடகம் மாத்யமம் செய்தி வெயியிட்டுள்ளது.
வயநாடில் 3 கொரோனா நோயாளிகள் உள்ளனர் என்றும், 12,647 நபர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர் என்றும் திருமதி அப்துல்லா கூறினார்.
இதேபோல கடந்த ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது 50000 கிலோ அரிசி மற்றும் அதனோடு மளிகை பொருட்களையும் வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.