Fact Check

பீஸ்ஸா தயாரிக்கும் போது முஸ்லிம் ஒருவர் எச்சில் துப்பி தயாரிப்பதாக பொய்யை பரப்பி வரும் கும்பல்..

பீஸ்ஸாவைத் தயாரிக்கும் ஒரு நபர் அதில் எச்சிலை துப்பும் விதத்தில் அமைந்த ஒரு வீடியோவை, வலதுசாரி சிந்தனையாளர்கள் சமூக ஊடக தளங்களில் பரப்பி அதை செய்பவர் முஸ்லீம் என்று கருத்து பதிவு செய்து வருகின்றனர்.

வட இந்தியாவில் முஸ்லீம் சமூகத்திற்குப் பயன்படுத்தப்படும் அவதூறு வார்த்தையான ‘சாந்திடூட்’ என்று பதிவிட்டு மேற்கூறிய வீடியோவை பகிர்ந்து வெறுப்பு பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். இதில் முன்னணியில் உள்ளது ட்விட்டர் பயனர் ஷெபாலி திவாரி ஆவார். இவர் முஸ்லிம்களுக்கு எதிராக பேக் நியூஸ் பதிந்து வருவதில் முதல் இடம் பிடிப்பார் எனலாம்.

“இது லண்டன் உணவகத்தின் காட்சிகள். இந்த அமைதியாளர் (முஸ்லிமை வஞ்சக நோக்கில் குறித்தல்) அல்ஜீரியாவிலிருந்து வந்த அகதி. இந்த உணவகத்தின் உரிமையாளர் யாரென கண்டறிந்து அங்கு உணவு உட்கொள்வதை தவிர்த்து விடவும், இல்லையெனில் உமிழ்நீர் கறைபடிந்த உணவை உண்ணும் அபாயத்தை எதிர் கொள்ளுங்கள் ” என ஷெபாலி வீடியோ பதிவுடன் ட்வீட் செய்தார். நாம் இந்த ஆக்கம் வெளியிடும் இந்த நேரத்தில் இந்த காணொளியை இதுவரை 5200 நபர்களால் பார்வையிட்டுள்ளனர்.

முஸ்லிம்கள் நடத்திவரும் வியாபாரஸ்தலங்களை புறக்கணிக்க இந்த யுக்தி கையாளப்படுவதாக தெரிகிறது.

பேஸ்புக் பயனர் அமித் குமார் திவாரியும் அதே போன்ற கருத்தை கொண்டு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய அந்த காணொளி கடந்த செப்டம்பர் 25, 2018 அன்று யூடியூபில் பதிவேற்றப்பட்ட வீடியோவாகும். இந்த சம்பவம் அமெரிக்காவின் டெட்ராய்டில் நடந்ததாக சிபிஎஸ் மியாமி தெரிவித்துள்ளது.

வீடியோவில் உள்ள நபர் ஜெய்லோன் கெர்லி, அவரது வீடியோ கிளிப் வைரலாகியதும் அவர் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். இருமுறை உணவு பாதுகாப்பு குறித்த விதிமுறைகளை மீறியமையால் நீதிமன்றம் அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

எனவே மூன்று ஆண்டுகள் பழமையான வீடியோவை தற்போது நடந்தது போலவும், அதில் உள்ளவர் முஸ்லிம் போலவும் பொய்யாக சித்தரித்து வெறுப்பு உணர்ச்சியை உருவாக்குவதே பாசிச கும்பலின் நோக்கம் என இதன் மூலம் அம்பலமாகிறது.

நன்றி:ஆல்ட் நியூஸ்.