இந்திய தேசியத்தின் கலாச்சார அமைச்சகம், கோல்வால்கர் ஒரு சிந்தனை சிற்பி, தலைசிறந்த தலைவர், நிகரில்லா ஆளுமை என வாயார புகழ்ந்து ட்வீட் போட்டது தான் தாமதம்…, கனநிமிடத்தில் கடகடவென திரண்டு வந்து கண்டித்த நெட்டிசன்கள். ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் எனப்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் எம்.எஸ்.கோல்வால்கரை இமாலய உயரத்திற்கு புகழ்ந்து, அவரை நினைவு கூர்வதாக கூறியும் வருங்கால ஆட்சியாளர்களுக்கு இவரது கருத்துகளில் வழிகாட்டல்கள் உள்ளது எனவும் இந்திய கலாச்சார அமைச்சகம் ஒரு ட்வீட் போட்டிருந்தது இதில் கலாச்சார […]
ம.பி: 60 வயது பிர்தவ்ஸ் ஹாஜியார் அடித்து கொலை; பாசிச கும்பல் வெறியாட்டம்!
பாஜக ஆளும் மத்தியப்பிரதேச மாநிலம் ஷாஜாபூர் மாவட்டத்திலுள்ளது அகோடியா நகரம், இங்கு வசிக்கும் 60 வயதான முதியவர் பிர்தௌஸ் ஹாஜி, இவர் அங்கு விஷேங்களுக்கு சமையல் செய்யும் தொழில் செய்து வருபவர். சம்பவத்தன்று இருவேறு மதத்தை சேர்ந்த இரு சிறுவர்களுக்கிடையே நடந்த சாதாரண விளையாட்டுச்சண்டை, முதியவர் தாக்கப்பட்டு இறக்கும் அளவிற்கு விபரீதமாகிவிட்டது. கிரிக்கெட் விளையாடுவதில் ஏற்பட்ட சிறு சண்டைக்கு இதை சாக்காக வைத்து முஸ்லிம்களை குறி வைத்து தாக்கியுள்ளது பாசிச கும்பல். இதில் சமபந்தமே இல்லாமல் சமையல் […]
‘பா.ஜ.கவைத் தோற்கடிப்போம் எனும் முழக்கத்தை எடுத்த சில நாட்ககளிலேயே UAPA சட்டத்தின் கீழ் தோழர்கள் கைது!’ – மார்க்ஸ் அந்தோணிசாமி
“பா.ஜ.கவைத் தோற்கடிப்போம்” – எனும் முழக்கத்தை எடுத்த அடுத்த சில நாட்கள் முதல் கொடும் UAPA சட்டத்தின் கீழ் தோழர்கள் கைது செய்யப்படுகின்றனர். அரசியல் கட்சிகள் இன்று நாடு எதிர்கொள்ளும் இந்த ஆபத்தான ஜனநாயக விரோதப் போக்கிற்கு உரிய எதிர்ப்பைக் காட்டவில்லை
உபி: தர்காவில் நுழைந்து பாசிஸ்டுகள் வெறியாட்டம்; முதியவர் தாக்கப்பட்டு விரட்டியடிப்பு ..
உபி மாநிலம் , அம்பேத்கர் நகரில் உள்ளது வரலாற்று சிறப்புமிக்க “ஷாஹ்நூர் பாபா” தர்கா. இந்த பாபாவுடைய தர்கா அப்பகுதியில் மிகப்பிரபலமில்லை என்ற போதும் இந்துக்களும் முஸ்லீம்களும் அங்கே மிக இணக்கமாக சகோதர பாசத்தோடு பழகிவந்துள்ளனர். உரூஸ் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் அங்கு நடக்கப்பெறாது காரணம் அது மிகவும் பின்தங்கிய பகுதியில் இருக்கும் ஒர் இடம் ஆதலாலும் மக்கள் பரவலாக வந்துபோகாத இடம் என்பதாலும் அங்குள்ளவர்கள் மட்டுமே வழிபடுவார்கள். இந்நிலையில் நூற்றாண்டு காலமாக பாபாவின் தர்காவினை பராமரித்து […]
டில்லி: தனியார் பள்ளிகளில் முற்றிலுமாக ஒதுக்கப்படும் முஸ்லிம் குழந்தைகள்- அதிர்ச்சி ரிப்போர்ட்!
புது டில்லியில் உள்ள தனியார் பள்ளிகளில் தொடக்கக் கல்விக்கு முந்தைய (Pre-Primary) நிலையிலேயே முஸ்லிம் குழந்தைகள் திட்டமிட்டு ஓரங்கட்டப்படுவதாக ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. டில்லி பல்கலைக் கழக சமூகப்பணித் துறையின் ஆராய்ச்சி வல்லுநரான ஜன்னத் ஃபாத்திமா ஃபரூக்கி மற்றும் குழந்தை உரிமைப் பாதுகாப்பு ஆணையத்தின் ஆலோசகரான சுகன்யா சென் ஆகியோர் இணைந்து டிசம்பர்-2020ல் சமர்பித்த “இந்தியாவில் தொடக்க நிலை கல்வியில் ஓரங்கட்டப்படும் முஸ்லிம் குழந்தைகள்: டில்லி தனியார் பள்ளிகளில் நர்சரி சேர்க்கை பற்றிய அலசல்” என்ற ஆய்வறிக்கையில் […]
‘நாட்டை காக்க மூன்று யுத்தங்களில் பங்கெடுத்த என்னை தீவிரவாதி என கைது செய்கின்றனர்’ – குர்முக் சிங் வேதனை..
எங்களை விவசாயிகள் என்றோ, வயது மூத்தவர்கள் என்றோ, தேசத்திற்காக ராணுவத்தில் பணியாற்றியவர்கள் என்றோ எவ்வித மரியாதையும் கொடுக்காமல், எங்கள் மீது லத்தி சார்ஜ் செய்தும்,
மாட்டு அறிவியல் குறித்து தேசிய அளவிலான தேர்வை அமைத்து அதை ‘பப்லிசிட்டி’ செய்யமாறு யு.ஜி.சி, பல்கலைக்கழகங்களுக்கு அறிவுரை..
பிப்ரவரி 25 ஆம் தேதி ஆன்லைனில் நடத்தப்படும் இந்தத் தேர்வு, தொடக்க, இடைநிலை , மூத்த இடைநிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பங்குகொள்ளும் விதத்தில் வடிவமைக்க பட்டுள்ளது
போதை பொருள் கடத்திய வழக்கில் பாஜக நிர்வாகி கைது ..
இது குறித்த கருத்து தெரிவித்த மே.வங்க பாஜக தலைவர் சமிக் பட்டாச்சார்யா பேசிய போது, இது திட்டமிட்ட சதி என்றும் பமீலாவின் காரில்..
பிராமண பிரதிநிதிகள் கோரிக்கையை ஏற்று ஆறாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் 2 பக்கங்கள் நீக்கம்!
கர்நாடகாவில் ஆறாம் வகுப்பு சமூகவியல் பாடப் புத்தகத்தில் இருந்து இரண்டு பக்கங்களை பாடத் திட்டத்தில் இருந்து நீக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அப்படி என்ன இருக்கிறது 2 பக்கங்களில்? ‘மதங்களின் பிறப்பு’ என்ற தலைப்பில் அமைந்த அந்த அத்தியாயத்தில் வேதகால சடங்குகளில் விலங்குகள் பலியிடப்பட்டது குறித்தும் மத வழிபாடுகளுக்கு பயன்படுத்தப்பட்ட சமஸ்கிருத மொழியைப் படிக்கும் வாய்ப்பு பெரும்பாலான மக்களுக்கு கிடைக்காமல் இருந்திருக்கிறது பற்றியும் விவரணைகள் இருந்தன. இந்தப் பக்கங்களை இனிமேல் மாணவர்களுக்கு பாடம் எடுக்கக் கூடாது என்று […]
‘பாஜக வை எதிர்க்க சிவ சேனா விடம் பாடம் கற்க வேண்டும்’ – பிரபுகண்ணன் .
எந்த சூழலுக்கும் பாரதீய ஜனதாவின் அடிவருடிகளான வருமானவரித்துறை உள்ளிட்ட அமைப்புக்களுக்கு பயப்படாதீர்கள். சிவசேனா கட்சியினருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பிய போது சிவசேனா கட்சி அவர்கள் அலுவலகத்திற்கு ..
கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே செல்லும் மர்மம் என்ன ?!
ஒரு பேரல் கச்சா எண்ணெயை 110 டாலருக்கு விலை கொடுத்து வாங்கும் போது கூட இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 76 ரூபாய் மட்டுமே. ஆனால் இன்று நிலைமை தலைகீழாக உள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயரும் காரணத்தால் சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. மோடி பிரதமராக வருவதற்கு முன்பு, அதாவது 2013ல் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 109-111 டாலர் வரையில் விற்பனை செய்யப்பட்டது. பெட்ரோல் […]
உபி : திருட்டு பட்டம் சுமத்தி ரேஹான், ஷாரூக் மீது கொலைவெறி தாக்குதல்; ஒருவர் பலி !
உபி மாநிலம் பரேலி பகுதியில் வசிப்பவர்கள் ரேஹான் மற்றும் அவரது நண்பர்ஷாருக், சம்பவத்தன்று நந்தன்சிங் என்பவரது வீட்டுச்சுவற்றில் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்ததை கண்ட நந்தன்சிங்கும் அவரது குடும்பத்தினரும், இருவரும் தங்களது வீட்டிற்கு திருட வந்திருப்பதாக நினைத்து அடித்து உதைக்க தொடங்கியுள்ளனர். அவர்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காத நந்தன்சிங் குடும்பத்தினர் இருவரையும் வலுவான ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ரேஹான், பரேலி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது மேல் சிகிச்சைக்கு வசதிகள் இல்லை என கூறி மருத்துவர்கள் டெல்லிக்கு அனுப்பி […]
நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அமித் ஷாவுக்கு அனுப்பப்பட்டது சம்மன் ..
கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ம் தேதி அன்று, கொல்கத்தாவின் மாயோ சாலையில் பாஜகவின் பேரணியில் வைத்து திரிணாமுல் எம்.பி. அபிஷேக் பானர்ஜிக்கு எதிராக அமித் ஷா அவதூறாக பேசியதாக மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக்கின் வழக்கறிஞர் சஞ்சய் பாசு ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி தாக்கல் செய்த அவதூறு வழக்கு தொடர்பாக பிப்ரவரி 22 ம் தேதி தனிப்பட்ட முறையில் அல்லது ஒரு வழக்கறிஞர் மூலமாக […]
அமித் ஷா பேரணியில் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பை தெரிவித்த பெண்கள் !
மேற்கு வங்காளத்தின் நம்கானாவில் வியாழக்கிழமை, அமித் ஷாவின் பேரணியின் போது, சில பெண்கள் அவருக்கு கருப்பு கொடியைக் காட்டினர், இதனால் நிகழ்ச்சி தாற்காலிகமாக சிறிது நேரம் தடைப்பட்டது. அமித் ஷாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளையும் மீறி ஷாவுக்கு முன்னால் கறுப்புக் கொடிகளுடன் கோஷம் எழுப்பினர் என மேற்கு வங்காள நாளேடான சங்க்பாத் பிரதிடினின் செய்தி வெளியிட்டுள்ளது. பெண்கள் தடைகளையும் மீறி எதிர்ப்பு தெரிவித்ததால் இதை சற்றும் எதிர்பாராத அமித் ஷாஅதிர்ந்து போனார், உடனே நிலைமையை […]
காஷ்மீர் சிறுமியை கடத்த முயன்ற மூன்று பாதுகாப்பு படையினர் கைது..
வடக்கு கஷ்மீரின் பந்திப்பூரா சேர்ந்த சேவா எனுமிடத்தில் ஒன்பது வயது சிறுமியை கடத்தி ஒழித்து வைத்திருந்த வழக்கில் மூன்று இராணுவ வீரர்கள் மீது வழக்கு பதியப்பட்டு கைது செய்யபட்டுள்ளனர். கஷ்மீரின் உள்மாநில பத்திரிக்கையான கஷ்மீர்வல்லா எனும் நாளேட்டில் இதுபற்றி வெளியாகியுள்ள தகவலின்படி அவர்களின் பெயர்கள் சுபேதார் ஹர்பஜன் சிங், நாயக் அமித் தாக்கூர் மற்றும் ஹவால்தார் மன்சூர் அஹமத் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் மீது இபிகோ செக்ஷன் 15/2021ன்படி 341, 363, 511 ஆகிய எண்களின் கீழ் […]