உத்தரபிரதேசத்தில் ரயில் பயணத்தின்போது கேரள கன்னியாஸ்திரிகள் குழுவை பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்கியதற்கு சிரோ மலபார்-சர்ச் கண்டன அறிக்கை வெளியிட்ட ஒரு நாளில், இந்த சம்பவத்தை கண்டித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதி உள்ளார். கடிதத்தில் இந்த தாக்குதலை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார். தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்யுமாறு உள்துறை அமைச்சரை, பினராயி கேட்டுக் கொண்டார். […]
டில்லி முதல்வரின் அதிகாரங்களை பறிக்கும் விதத்தில் மோடி அரசு கொண்டு வந்த சட்டம்?
மத்திய அரசு சமீபத்தில் தில்லி தேசிய தலைநகரப் பகுதி திருத்த சட்டம் ஒன்றை மக்களவையில் நிறைவேற்றி இருக்கிறது. இந்த திருத்த சட்டம் சர்ச்சையாகி இருக்கிறது. ஏற்கனவே தில்லி மாநில அரசிடம் பெரிய அதிகாரம் என்று இருக்கவில்லை. துணை ஆளுநர் வசம்தான் நிறைய அதிகாரங்கள் இருந்தன. சமீபத்திய சட்டம் அந்த அதிகாரங்களை மேலும் அதிகரித்து இருக்கிறது. தில்லி மாநில அரசு ஒரு டம்மி பீஸ் மட்டுமே என்று ஆக்கி இருக்கிறது மோடி அரசு. இந்தத் திருத்த சட்டம் அமுலுக்கு […]
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை வரவேற்போம், இந்தியாவின் புறக்கணிப்பைக் கடுமையாக எதிர்ப்போம் – எஸ்.பி உதயகுமார்
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை வரவேற்போம். இந்தியாவின் புறக்கணிப்பைக் கடுமையாக எதிர்ப்போம் என எஸ்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை கீழே வழங்கப்படுகிறது. ஐ.நா. மன்றத்தின் மனித உரிமைகள் ஆணையத்தில் இன்று நடந்த வாக்கெடுப்பில் ஈழத்தமிழருக்கு எதிராக இலங்கை அரசு நடத்திய மனித உரிமைகள் மீறல் பற்றி பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும். என்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த முக்கியமான தீர்மானத்தை உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் ஒன்றாய் நின்று வரவேற்போம். பனிரெண்டு ஆண்டு […]
கேரளாவில் பாஜக வேகமாக வளராமல் உள்ளதற்கு 90% கல்வியறிவு விகிதமும் ஒரு காரணம் – பாஜக எம்.எல்.ஏ கருத்து !
திருவனந்தபுரம்: கேரளாவின் ஒரே பாஜக எம்.எல்.ஏ வும் பாஜக தலைவருமான ராஜகோபால், கேரள மாநிலத்தில் பாஜக வேகமாக வளராததற்கான காரணங்களை கூறினார். ‘கல்வியறிவு ஒரு முக்கிய காரணியாகும், கேரளாவின் கல்வியறிவு விகிதம் 90%’ என்று அவர் கூறினார். ‘கேரளா ஒரு வித்தியாசமான மாநிலம். இங்கே இரண்டு, மூன்று வெவ்வேறு காரணிகள் உள்ளன. கேரளாவின் கல்வியறிவு விகிதம் 90% ஆகும். அவர்கள் எதையும் சிந்திப்பவர்கள், ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்கிறார்கள், விவாதிக்கின்றனர். இவை படித்தவர்களின் பழக்கம். அதுவும் ஒரு […]
ஜம்மு: பழங்குடியின முஸ்லிம் குடும்பத்தை வழிமறித்து, பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்; குடும்பத்தார் மீது தாக்குதல் !
திலாவர், அவரது தந்தை ரபாக்கத் அலி, அவரது தாயார் மற்றும் அவரது சகோதரி ஆட்டு மந்தையின் பின்னால் நடந்து கொண்டிருந்தபோது ஒரு கார் அவர்கள் வழியில் வந்தது. அதிலிருந்து மூன்று ஆண்கள் இறங்கினர். திலாவரின் சகோதரியை நோக்கி வந்த அவர்கள், சகோதரியைப் பிடித்து காரில் இழுத்து போட முயன்றனர். உடனே திலாவரும் அலியும் மூவரையும் தள்ளி, அவர்களின் பிடியிலிருந்து பெண்ணை விடுவித்தனர். உடனே தாயிடம் ஓடினார் பாதிக்கப்பட்ட பெண். சிறிது நேரத்தில் மூவரும் எங்களை தாக்க ஆரம்பித்தனர்; […]
குஜராத்: இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்டர் வழக்கில் போலீஸ் அதிகாரிகளை தண்டிக்க மாநில பாஜக அரசு அனுமதி மறுப்பு !
அகமதாபாத்: 2004 இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்டர் வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி ஜி.எல். சிங்கால் உட்பட குற்றம் சாட்டப்பட்ட மூன்று காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குத் தொடர குஜராத் அரசு அனுமதி மறுத்துள்ளது என்று மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) சனிக்கிழமை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சிறப்பு நீதிபதி வி.ஆர்.ராவலின் உத்தரவின் பேரில் சிங்கால், தருண் பரோட் மற்றும் அனாஜு சவுத்ரி ஆகியோரைத் தண்டிக்க சிபிஐ மாநில அரசிடம் அனுமதி கோரியது. உத்தியோகபூர்வ கடமையை நிறைவேற்றுவதில் தவறி இருந்தாலும், […]
பிரான்ஸ்: ஹலால் இறைசிக்கு தடை விதிக்கும் வகையில் சுற்றறிக்கை !
பிரெஞ்சு வேளாண்மை மற்றும் உணவு அமைச்சகத்தின் சுற்றறிக்கையின்படி, ஹலால் இறைச்சிகான தடை 2021 ஜூலை முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸ் மசூதி இயக்குனர் செம்செடின் ஹபீஸ் , லியோன் மசூதி கமல் கப்டேன் மற்றும் எவ்ரி மசூதி இயக்குனர் கலீல் மாரூன் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் பிரெஞ்சு அரசாங்கத்தின் “தீவிர அல்ட்ரா செக்குலர்” அணுகுமுறையை விமர்சித்ததோடு, “வேளாண்மை மற்றும் உணவு அமைச்சகத்தின் இச்சுற்றறிக்கை நாட்டின் மிக பெரும் முஸ்லீம் சமூகத்திற்கு எதிர்மறையான செய்தியை […]
கோவை: வெடிபொருட்கள் பதுக்கல் வழக்கில் தேடப்பட்டு வந்த இருவர் கைது !
கோவை: வெடிபொருட்கள் மற்றும் ஆயுத தடுப்பு பிரிவில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் கேரள போலீசாரால் கோவையில் கைது செய்யப்பட்டனர். வெடிபொருள் மற்றும் ஆயுத தடுப்பு பிரிவின் கீழ் தர்ஷன் குமார்(30), ராஜேஷ் (29) ஆகியோர் மீது கேரளா, திருச்சூர், காட்டூர் காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்களை, கேரளா போலீசார் தேடி வந்த நிலையில், கோவை ரயில் நிலையம் அருகே குற்றவாளிகள் பதுங்கி இருப்பதாக, கேரளா போலீசார், கோவை ரயில்வே போலீசாரிடம் தெரிவித்தனர். உடனே களத்தில் இறங்கியே […]
சர்வதேச விண்வெளி நிலையத்தில் கண்டுபுடிக்கப்பட்ட பாக்டீரியாவுக்கு இந்திய விஞ்ஞானி சையத் அஜ்மல் கானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது…
சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐ.எஸ்.எஸ்) நான்கு வகையான பாக்டீரியாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அவற்றில் ஒன்றுக்கு இந்திய பல்லுயிர் விஞ்ஞானி சையத் அஜ்மல் கானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஹைதராபாத் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், நாசாவுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்கள், ஐ.எஸ்.எஸ். கப்பலில் வெவ்வேறு இடங்களிலிருந்து மெத்திலோபாக்டீரியாசி குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பாக்டீரியாக்களைக் கண்டுபிடித்து தனிமைப்படுத்தியுள்ளனர். ஒரு ஸ்டிரைனான மெத்திலோரூப்ரம் ரோடீசியம் பாக்டீரியாவாக முன்னரே கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், மற்ற மூன்று ஸ்டிரைன்கள் முன்னர் கண்டுபிடிக்கப்படவில்லை. தமிழ்நாட்டின் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் சையத் அஜ்மல் […]
‘ஏன் இருவரை மட்டும் பெற்று எடுத்தீர்கள்? இருபது பேரை பெற்றெடுத்து இருந்தால் அதிக ரேஷன் பொருட்கள் கிடைத்திருக்கும்’ – பாஜக உத்தரகண்ட் முதல்வர் கேள்வி!
கொரோனா காலங்களில் உணவு பெற்று கொள்ள போராடும் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் தலா இருபது குழந்தைகள் வரை பெற்றிருந்தால் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் ரேஷன் திட்டத்தின் கீழ் உணவு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை அதிக அளவில் பெற்று இருக்க முடியும் என பாஜக வை சேர்ந்த உத்தரகண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத் மார்ச் 21 ஞாயிற்றுக்கிழமை அன்று தெரிவித்தார். “ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து கிலோ ரேஷன் வழங்கப்பட்டது. 10 பேர் உள்ள வீட்டில் […]
முஸ்லிம்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தவே மே.வங்கத்தில் சிஏஏ வை அமல்படுத்துவோம் என்கிறது பாஜக – ப. சிதம்பரம் விமர்சனம் !
மே.வங்க தேர்தல் அறிக்கையை உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ளார். அதில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) அமல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மூத்த காங்கிரஸ் கட்சி தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ள கருத்து கீழே வழங்கப்படுகிறது. மேற்கு வங்க தேர்தல் அறிக்கையில் பாஜக தனது உண்மையான முகத்தை வெளிப்படுத்தியுள்ளது. பாஜக அரசு அமைக்கப்பட்டு முதல் நாளில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) அமல்படுத்த ஒப்புதல் வழங்குவோம் என பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது. […]
மே வங்கம்: முதியவர் கொலை வழக்கில் பாஜக தலைவர் உட்பட மூவர் கைது !
மேற்கு வங்க பூர்பா பர்தாமன் மாவட்டத்தில் 74 வயது நபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் உள்ளூர் பாஜக தலைவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். இந்த மூவரும் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு சனிக்கிழமை உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்றம் அவர்களை 10 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கியுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மார்ச் 9 ம் தேதி ரெய்னா காவல் நிலைய பகுதியில் உள்ள […]
உபி: கோயில் புனரமைக்க உதவிய முஸ்லிம்களுக்கு, கோயில் செல்ல தடை!
காஸியாபாத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு முஸ்லிம் சிறுவன் தண்ணீர் குடிப்பதற்க்காக கோயிலில் நுழைந்ததற்காக ஷ்ரிங்கி யாதவ் என்பவனும் , அவன் சகாக்களும் அந்த சிறுவனின் தந்தை பெயரையும் , அவன் பெயரையும் கேட்டு அச்சிறுவனை பலமாக தாக்கி அதை வீடியோவும் எடுத்தனர். பின்னர் சிறுவனின் தலையில் ரத்தம் கசிந்து கொண்டிருக்க அவனை கோயிலின் வெளியே தூக்கி வீசி விட்டு சென்றுள்ளனர். இந்த அதிர்ச்சியான காணொளி நடுநிலையாளர்களையும், பாசிசத்திற்கு எதிரான மக்களிடையே கடும் எதிர்ப்பை கிளப்பியது. […]
உபி : கோயிலில் பூசாரி வெட்டி கொலை; மவுனம் சாதிக்கும் இந்துத்துவாவினர் – காரணம் என்ன?
உபி,ஆக்ரா: புதிய ஆக்ரா போலீஸ் அதிகார எல்லைக்குட்பட்ட ஆக்ராவின் மவு கிராமத்தில் 55 வயதான கோயில் பூசாரி ஒருவர் கோடரியால் வெட்டப்பட்டு கொல்லப்பட்டார். காவல்துறையினர் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து, குற்றம் நடந்த சில மணி நேரங்களுக்குள் சந்தேக நபரை கைது செய்தனர். புதன்கிழமை காலை 6:30 மணியளவில் கோயில் வளாகத்தில் ரத்தக் கறை படிந்த நிலையில் உடல் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. காவல்துறை சம்பவ இடத்தை அடைந்து விசாரணையைத் தொடங்கியது. கொலை நடைபெற்ற முந்தைய […]
குஜராத்: தலித் ஆர்டிஐ செயற்பாட்டாளரின் கொலை குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பிய ஜிக்னேஷ் இடைநீக்கம் செய்யப்பட்டார்!
குஜராத்: சட்டமன்றத்தில் சபாநாயகர் அனுமதியின்றி தலித் தகவல் அறியும் ஆர்வலர் ஒருவர் கொல்லப்பட்ட விவகாரத்தை பலமுறை எழுப்பியதை அடுத்து, “ஒழுக்கமின்மை” காரணமாக குஜராத்தைச் சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி, மாநில சட்டமன்றத்தில் இருந்து ஒரு நாள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சபாநாயகர் ராஜேந்திர திரிவேதியின் உத்தரவின் பேரில் அவர் சட்டமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இதே போல கடந்த வியாழக்கிழமையும் இதே காரணத்திற்காக ஜிக்னேஷ் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டார். மார்ச் 2 ம் தேதி போலீஸ்ஸார் […]