கண்ணூர்: பசுவைக் கொன்றது தொடர்பாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாவோடைச் சேர்ந்த 33 வயதான அலேகாண்டி ஏ.கே.சுமேஷ் என்பவரை சக்கரக்கல் போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து நியூஸ் 18 செய்தி வெளியிட்டுள்ளது.
சமீப காலமாக இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ஒருபுறம் அதிகரித்து கொண்டிருக்க இதற்கிடையில் மிருகங்களையும் கூட விட்டுவைக்காமல் சிலர் இழிசெயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். கண்ணூரை சேர்ந்தவர் யூசுப், இவர் மாடுகளை பராமரித்து வருகிறார்.
இவர் பராமரித்து வந்த பசு ஒன்றை மார்ச் 9ம் தேதி இரவு அன்று பாவோ ஸ்ரீ முத்தப்பன் கோயில் அருகே அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளான் சுமேஷ். மாட்டை அருகில் இருந்த மரத்தில் கட்டிய அவன், மாட்டின் கால்களையும் சேர்த்து கட்டியுள்ளான் பிறகு கேடுகெட்ட காரியத்தில் அவன் ஈடுபட மாட்டின் கழுத்தில் சுருக்கு விழுந்து பரிதாபமாக உயிர் இழந்தது.
முன்னர் ஒரு முறை இவன் இவ்வாறே பசுவிடம் அத்துமீறிய போது நிலத்தின் உரிமையாளர் மற்றும் அங்கிருந்த பொது மக்கள் அவனை கையும் களவுமாக பிடித்து உள்ளனர், கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.
சம்பவத்தை தொடர்ந்து ஐபிசியின் 457, 380 மற்றும் 429 பிரிவுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார். விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 11 (1) ன் மீதும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற போலீசார் அங்கிருந்து ஆடைகளை கைப்பற்றினர், மேலும் விசாரணையின் போது, சுமேஷ் பசுவிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.