நோபல் பரிசு பெற்ற ராமகிருஷ்ணன் வெங்கட்ராமன் CAAவை விமர்சித்து பேசி இருக்கிறார். ‘சுமார் 20 கோடிப்பேரிடம் “உங்கள் மதம் இதர மதங்களுக்கு சமமானதில்லை,” என்று சொல்வது தேச ஒற்றுமைக்கு ஆபத்தான விஷயம்,’ என்று கூறி இருக்கிறார். ‘நான் அந்நிய நாட்டில் வசித்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை பேசும் இந்தியா பற்றிய பெருமையில் வாழ்பவன். இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று மனதார விரும்புபவன்,’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
பாகிஸ்தானில் முஸ்லிம்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாவார்களா என்று மக்களவையில் அமித் ஷா எழுப்பிய (அறிவற்ற) கேள்விக்கு பதில் அளிக்கையில் இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானி அப்துஸ் சலேம் அவர்களை உதாரணமாக குறிப்பிட்டு அஹமதியாக்கள் பற்றி ராமகிருஷ்ணன் பேசி இருக்கிறார். (இதே உதாரணத்தை நானும் என் முந்தைய பதிவு ஒன்றில் குறிப்பிட்டு இருந்தேன்.)
இங்கே ஒரே ஆறுதல் என்னவென்றால் அர்பன் நக்சல், 200 ரூபாய் உடன்பிறப்பு என்றெல்லாம் இவர் மேல் சேறு வாரி தூற்ற முடியாது. இவர் நோபல் வென்ற நாளில் இருந்து வருடத்துக்கு ஒரு முறை இந்தியா பயணித்து வெவ்வேறு கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்கள் சென்று உரைகள் நிகழ்த்தி வருகிறார். எனவே தேசவிரோதி பட்டமும் கட்ட முடியாது.
ஆனால் இந்துத்துவர்கள் கற்பனைத்திறன் மிக்கவர்களாயிற்றே. எனவே என்ன சொல்லி இவர் மேல் சேறு அடிக்கப்போகிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.
அது ஒரு புறம் இருக்க, குரல் கொடுப்பதற்கு நன்றி நன்றி ராமகிருஷ்ணன் சார். இன்னும் அதிக குரல்கள் தேவைப்படுகின்றன. வரட்டும்.
ஆக்கம் : ஸ்ரீதர்