Delhi Lynchings

டில்லி: ‘நடுரோட்டில் பாகிஸ்தான் முர்தாபாத்’ என கோஷமிட சொல்லி கொடூரமாக தாக்கியவர் மீது வழக்கு பதிவு !

வடகிழக்கு டெல்லியின் கஜூரி காஸ் பகுதியில் ‘பாகிஸ்தான்/ ஒவைசி முர்தாபாத்’ , ‘இந்தியா ஜிந்தாபாத்’ என்று கோஷமிட கட்டாயப்படுத்தி தாக்கப்படுகிறார்.

https://twitter.com/Newscap_in/status/1374724270429892618

வீடியோவில் உள்ள மஞ்சள் நிற சட்டை அணிந்தவர் அஜய் கோஸ்வாமி பண்டிட். டெல்லி கலவரம் வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டவர். காணொளி வைரல் ஆனதை தொடர்ந்து அஜய் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

வீடியோவில், தாக்கப்படுபவர் சித்திரவதை செய்யப்பட்டு உடல் ரீதியாக தாக்கப்படுகையில் அருகில் உள்ளோர் சிரிப்பதைக் கேட்க முடிகிறது. பாதிக்கப்பட்டவர் கோஸ்வாமியின் கால்களைப் பிடித்து, கருணைக்காக கெஞ்சுகிறார், எனினும் பயங்கரவாதி கோஸ்வாமி அவரை மேலே இழுத்து வேகமாக தரையில் போடுகிறார்..

“கஜூரி காஸ் சம்பவத்தின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்த உடன் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடந்து வருகிறது ”என்று துணை போலீஸ் கமிஷனர் (வடகிழக்கு) சஞ்சய் குமார் டிசிபி மார்ச் 24 இரவு ட்வீட் செய்துள்ளார்.

எதனால் இந்த தாக்குதல் நடைபெற்றது என்பது தெளிவாகத் தெரியவில்லை. தாக்கப்பட்ட நபர் மீது கொலை மற்றும் கொள்ளை வழக்கு உள்ளது என்று போலீசார் தங்கள் பங்குக்கு தெரிவித்துள்ளனர்.