மத்திய பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கு ஆதரவாக பாஜக மற்றும் சங் பரிவார அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் பாஜக வினர் சட்டத்தை மதிக்காமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் எத்தனை சொல்லியும் கேட்கவில்லை. இதனை தொடர்ந்து பாஜக கூட்டத்திற்கும் காவல்துறைக்கும் மோதல் ஏற்பட்டது.
பாஜக வினர் வரம்பு மீறி காவலர்களுடன் நடந்து கொண்டதால் ராஜ்கர் துணை கலெக்டர் பிரியா வர்மா உள்ளூர் பாஜக தலைவர் ஒருவரின் கன்னத்தில் அறைந்தார். அதே போல கலெக்டர் நிதி நிவேதிதாவும் வரம்பு மீறி நடந்து கொண்ட ஒருவரின் கன்னத்தில் அறைந்தார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அராஜகம்:
அதனை தொடர்ந்து பாஜக கூட்டத்தினர் பெண் என்றும் பாராமல் பிரியா வர்மா அவர்களின் முடியை பிடித்து இழுத்துள்ளார், எட்டி மிதித்தும் உள்ளனர். மேலும் பாரத் மாதா கி ஜெ கோஷங்களை எழுப்பினர். முழு சம்பவமும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தங்கள் கடமையை செய்யும் போது முதலில் பாஜக வினர் தான் வரம்பு மீறி நடந்து கொண்டதாகவும் மாவட்ட ஆட்சியர் நிதி நிவேதிதா தெரிவித்தார்.
கருப்பு நாளாம் :
இதனை தொடர்ந்து அம்மாநில முன்னாள் பாஜக முதல்வர் ஷிவ்ராஜ் சிங் எப்போதும் ஒரே அரசு இருக்கும் என்று நினைத்து விடாதீர்கள் என்று மிரட்டல் தொனியில் கூறியுள்ளார். மேலும் இது ஒரு கருப்பு நாள் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.