JNU Students

ஜே.என்.யூ வன்முறை : ‘அரசாங்க ஆதரவுடன் நடந்தது’ – உண்மை கண்டறியும் குழு அறிக்கை !

‘ஜனவரி 5 ஆம் தேதி ஜே.என்.யூ பல்கலை வளாகத்திற்குள் நடந்த தாக்குதல் “அரசாங்க ஆதரவுடன் ” நடைபெற்றுள்ளது. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.ஜகதேஷ் குமாரை உடனே நீக்க வேண்டும், மேலும் அவருக்கு எதிராக குற்றவியல் விசாரணை தொடங்கப்பட வேண்டும்’ எனவும் ஜே.என்.யூ வன்முறை தொடர்பாக நியமிக்கப்பட்ட காங்கிரசின் உண்மை கண்டறியும் குழு பரிந்துரைத்துள்ளது.

நான்கு பேர் கொண்ட குழு நியமனம்:

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யூ) அரங்கேறிய வன்முறை குறித்து விரிவான விசாரணையை மேற்கொள்ள காங்கிரஸ் நான்கு பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை நியமித்தது.

ஜகதேஷ் குமாரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். 27/01/2016 தேதில் இருந்து ஆசிரியப் பணிகளில் உள்ள அனைத்து நியமனங்களும் விசாரிக்கப்பட வேண்டும் மற்றும் இது குறித்து சுயாதீன விசாரணை நடைபெற வேண்டும் எனவும் பரிந்துரைப்பதாக உண்மை கண்டறியும் குழுவின் உறுப்பினர் சுஷ்மிதா தேவ் தெரிவித்துள்ளார்.

Image
உண்மை கண்டறியும் குழு

பல்கலைக்கழக துணை வேந்தர் நீக்கப்பட வேண்டும்:

ஜனவரி 5 ம் தேதி தாக்குதல் நடத்தியவர்களுடன் சேர்ந்து கொண்டு செயல்பட்டதால் ஜே.என்.யூ துணை ஆளுநர், சில ஆசிரிய உறுப்பினர்கள் மற்றும் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு நிறுவனத்தின் மீதும் குற்றவியல் விசாரணை தொடங்கப்பட வேண்டும் என்று மகிலா காங்கிரஸ் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அரச பயங்கரவாதம்?

“ஜே.என்.யூ வளாகம் மீதான தாக்குதல் “அரசாங்க ஆதரவுடன்” நடைபெற்றுள்ளது என்பது தெளிவாகிறது” என்று சுஷ்மிதா தேவ் கூறியுள்ளார். மேலும் ஜே.என்.யு கட்டண உயர்வை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் கோரினார்.

தில்லி போலீசார் மீது குற்றச்சாட்டு:

தில்லி போலீஸ் கமிஷனர் மற்றும் பிற காவல்துறை அதிகாரிகள் தங்கள் பொறுப்பை சரிவர செய்யவில்லை. கடந்த ஜனவரி 5 ம் தேதி மாணவர்கள் மற்றும் ஆசிரிய உறுப்பினர்கள் செய்த அவசர தொலைபேசி அழைப்புகளை ஏற்காதது மட்டுமல்லாமல் போலீசார் குற்றவாளிகளுக்கு வன்முறையில் ஈடுபட தக்கவாறு வசதி செய்து தந்துள்ளனர். இதற்கான முதன்மை ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உண்மை கண்டறியும் குழுவின் உறுப்பினர்கள்:

ஹிபி எடேன் (எம்.பி. மற்றும் முன்னாள் என்.எஸ்.யு.ஐ தலைவர்) சையத் நசீர் உசேன் (எம்.பி. மற்றும் ஜே.என்.யு என்.எஸ்.யு.ஐயின் முன்னாள் தலைவர்) சுஷ்மிதா தேவ் மற்றும்
அமிர்தா தவான்(முன்னாள் என்.எஸ்.யு.ஐ, துசு (DUSU) தலைவர்)