CAA Students

இந்து முஸ்லிம் இணைந்துவிட்டால் நாஸிகளால் என்ன செய்து விட முடியும்?- மாணவரின் மெய்சிலிர்க்க வைக்கும் பேட்டி..

இந்த பதாகையை கையிலேந்திய இரு மாணவர்கள் ஜாமியா போராட்டக்களத்தில் நின்றிருந்தனர். அவர்களை நெருங்கிய ரிப்போர்ட்டர் ஒருவர், நீங்களும் இந்து போலவே தெரிகிறீர்கள், உங்களது பதாகை அதை கூறுகிறது…! முஸ்ல்மான்கள் ஆக்கிரமிப்பாளர்கள் இல்லையா? அவர்களுக்காக எதற்கு இந்த அரசு மீதான எதிர்ப்பு? — என்ற கேள்விக்கு அந்த மாணவர் கூறிய பதில். ( மெய்சிலிர்க்க வைக்கிறது)

இந்த ஜாமியாவில் எனது அப்பா-அம்மா படித்த அதே டிபார்ட்மெண்ட் பேராசிரியர்களிடம் தான் நாங்களும் தற்போது பாடம் கற்கிறோம், சிலர் இடம் மாறிப்போயிருந்தாலும், இன்னும் கவுரவ பேராசிரியர்களாக இங்கே பணிபுரிவோர் எங்களது பெற்றோரை நன்றாகவே நினைவில் வைத்துள்ளனர்.

என் அப்பாவிடம் பேசும் பொழுது ஒருமுறை கூறினார்,
” ……. ( பெயர் கூறும்பொழுது ஒலி மறைக்கப்படுகிறது) அந்த பேராசிரியர் இருக்கிறாரே.. அவர் தான் எனக்கு குரு… தீவிர இஸ்லாத்தை கடைபிடிப்பவர். வக்து தொழுகையை இழக்காதவர். ஒருமுறை அவரிடம் கேட்டேன்…”நீங்கள் இப்படி தீவிரமாக இருந்தால் தான் உங்க இறைவன் உங்களை ஏற்பாரா? என்று. அதற்கு அவர் மிகவும் மென்மையாக இது எனது மனசாட்சி மீதான பக்தி. ஒவ்வொரு நபருக்கும் ஒன்றில் பக்தி இருக்கும்.

ஒருவருக்கு அவர் செய்யும் தொழில் பக்தி, விரும்பும் பொருளின் மீது வரும் பக்தி, அந்த பக்தி தான் நாம் அதன்மீது நேர்மையாக இருக்கிறோம் என்பதற்கான அடையாளம், நான் எனது நம்பிக்கையின் மீது நேர்மையாக இருக்கிறேன், நேரம் கிடைக்கும்போது பக்தியை காட்டிக்கொள்ளலாம் என்ற அசட்டை என்னிடம் இருந்தால் நான் நேர்மையற்றவனாகிவிடுவேன் ” என்றார் .வேறு ஒரு பேராசிரியர் ……. ( பெயர் மறைக்கப்பட்டது) எப்போதும் அவர் பேசும்போது தன்னிடமுள்ள புராண உபநிஷத்துக்களை படிக்க கூறி எங்களை வற்புறுத்துவார். ஆனால் அவரிடம் பக்தியை நான் கண்டதில்லை, மதங்கள் மீது எங்களுக்கு எப்போதும் பிடிப்பில்லை எனவே நாங்கள் அதை வாங்கி படிக்கவும் மாட்டோம்.

ஆனால் முன்பு கூறிய பக்திமான் பேராசிரியர் ஒருதடவை கூட நீ குர்ஆனை படித்துப்பார் என எங்களிடம் கூறியதில்லை. குர்ஆனில் இருப்பதை பற்றி கேட்டாலும் அவை உனக்காக விருப்பம் ஏற்படாதவரை நான் கூறினால் நம்பிக்கை ஏற்படாது. நாளை நீயும் உன் குழந்தைகளை இந்த மதம் தான் வேண்டுமென தேர்ந்தெடுக்க கட்டாயப்படுத்தாதே, எல்லா மதங்களையும் ஆராய்ந்து எதில் மனம் லயிக்கிறதோ அதை தேர்ந்தெடுக்க அறிவுறுத்து என ஒரு ஸ்பிரிச்சுவல் டீச்சர் போல ஆலோசனை வழங்குவார் என என் தந்தை சிலாகித்து கூறுவார்

இப்போது எனக்கும் கூட மதமாச்சர்யங்களில் ஈடுபாடில்லை.. ஜாமியாவில் சகலவிதமான மதத்தினரும் பயில்கிறோம், எங்களை இஸ்லாமிய வழியில் வர யாரும் கட்டாயப்படுத்துவதே இல்லை. முஸ்லிம் நண்பர்கள் தொழுகையின் மீது காட்டும் பக்தியை நினைத்து எனக்கு சிலிர்ப்பு தான் ஏற்படுகிறது.

ஒருவர் முஸ்லிம் என்பதால் அவருக்கு இங்கே எந்த சலுகையும் காட்டப்படாது, என் தந்தை எனக்கு கூறிய அறிவுரையை நாளை நான் என் மகனுக்கும் கூறுவேன்…ஒருவேளை என் மகனும் ஜாமியாவில் படித்து, இஸ்லாத்தை விளங்கி அதை தன் வாழும் கொள்கையாக ஏற்றுக்கொண்டால்…இந்த நாட்டில் ஒரு முஸ்லிமாக என் மகனது நிலை என்னாகும்..? அதை எண்ணியே நான் இந்த போராட்டத்தில் நிற்கிறேன். மதம் அவரவர் உரிமை, அதை காரணம் காட்டி நாட்டு மக்களை துண்டாடுவது தீமை. அதை எதிர்க்கவே நான் இங்கே நிற்கிறேன்” என்றார்.

முஸ்லிம்கள் நாடுபிடிக்க வந்தவர்கள், ஆக்கிரமிப்பாளர்கள், மதத்தை திணிக்க வந்தவர்கள் என பிறர் கூறுவதை நாங்கள் நம்பத்தயாராக இல்லை, காரணம் அவர்களை அப்படி செய்பவர்களாக நாங்கள் காணவில்லை

பிறக்காத மகனுக்காக, அவனது உரிமைக்காக இப்போதே போராட்டத்தில் இறங்கிய அந்த மாணவன் பெருமதிப்பிற்குரியவன்.

கற்றோர்க்கு சிறப்பு கற்றதுபடி நடப்பதாம்.

ஆக்கம்: நஸ்ரத்