Coimbatore Islamophobia Muslims

கோவையில் ‘தீவிரவாதிகள்’! கைது செய்யப்பட்ட 3 முஸ்லிம் அப்பாவி இளைஞர்கள் விடுவிப்பு!

தமிழகத்தில் தீவிரவாத அச்சுறுத்தல் பற்றிய செய்திகள் ஓரிரு நாட்களாக ஊடகங்கள் வாயிலாக முழு வீச்சுடன் பரப்பப்படுகின்றன.அதிலும் குறிப்பாக கோவையில் தீவிரவாதிகள் ஊடுருவல் என்ற செய்திகள் பத்திரிக்கைகள் டிவி சேனல்கள் மூலமாக பரப்பப்பட்டன. ஒருசில ஊடகங்களில் தீவிரவாதிகளுடைய புகைப்படம் மற்றும் வாகன எண் உட்பட பல்வேறுபட்ட அடையாளங்களுடன் செய்திகளை வெளியிட்டன. இது கோவை வாழ் மக்களிடையே பெரும் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

காவல்துறை எந்த புகைப்படத்தையும் வெளியிடவில்லை என மற்றொரு ஊடகத்தில் டி.ஜி.பி. மறுப்பு தெரிவித்த செய்தி வெளியானது. என்ன நடக்கிறது என்றே புரியாத நிலையில் இருக்கும் மக்கள்- இதனை தெளிவு படுத்திட கோரி கோவை அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மாநகர காவல்துறை ஆணையரை சந்தித்தனர். இது போன்ற செய்திகள் இஸ்லாமிய சமூகத்தை பிற சமூகமக்களிடமிருந்து அன்னியப்படுத்தக்கூடிய விதமாக இருக்கிறது என்று கூட்டமைப்பு தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் கேரளாவை சேர்ந்த அப்துல் காதர் ரஹீம் உள்ளிட்ட 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட முஸ்லீம் இளைஞர்களை குறித்த செய்தியை “தீவிரவாதிகள்” என்ற பட்டத்துடன் முழு பரவசத்தோடும் உத்வேகத்தோடும் ஊடகங்கள் பரப்பின.

விசாரணை எல்லாம் நடந்து முடிவதற்கு முன்னதாகவே லஸ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் “மிர்ச் மசாலா” உடன் செய்திகளை வெளியிட்டன. ஆனால் தற்போது போலீசார் விசாரணையின் இறுதியில் மூவரும் அப்பாவிகள் என்று தெரியவந்ததையடுத்து விடுதலை செய்துள்ளனர்.

எனினும் தேவைப்படும்போது போலீசில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதையும் அப்பாவி இளைஞர்கள் ஒப்பு கொண்டு வீடு திரும்பினர். Support us

கைது செய்யப்பட்டதை முழு “பரவசத்துடன் வெளியிட்ட மீடியாக்கள்” அதே பரவசத்துடனும் , முக்கியத்துவத்துடனும் விடுதலை செய்தியையும் வெளியிடுமா மீடியாக்கள் ?