டெல்லி மற்றும் மும்பையில் உள்ள உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களான இந்திரா ஜெய்சிங் மற்றும் ஆனந்த் குரோவர் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வியாழக்கிழமை காலை மத்திய புலனாய்வுத் துறை சோதனை நடத்தியதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.
நிஜாமுதீன் குடியிருப்பு மற்றும் ஜெய்சிங் அலுவலகம், ஜங்புராவில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் மும்பையில் உள்ள ஒரு அலுவலகத்தில் அதிகாலை 5 மணி முதல் இந்த சோதனைகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தனர்.
சிபிஐ இதற்கு முன்பு இருவர் மீதும் வழக்கு தொடுத்தது. வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத்தை மீறியதாக தன்னார்வ தொண்டு நிறுவன வழக்கறிஞர்கள் மீது குற்றம் சாட்டப்ப்பட்டது.
இந்த தம்பதிகள் வெளிநாட்டு நிதி பங்களிப்புகளை தவறாக பயன்படுத்துவதாகவும் நிதியை இந்தியாவுக்கு வெளியே வெளிநாட்டில் செலவழித்ததாகவும் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. 2006-07 மற்றும் 2014-15 க்கு இடையில் ரூ .32.39 கோடிக்கு மேல் வெளிநாட்டு உதவிகளைப் பெற்றுள்ளதாகவும்,முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் 2009 மற்றும் 2014 ஆண்டுகளுக்கு இடையில் இந்திரா ஜெய்சிங் கூடுதல் பொது ஆணையராக இருந்தபோது தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு பங்களிப்பு செலுத்திக் கொண்டிருந்ததாக சிபிஐ குற்றம் சாட்டுகிறது அந்த நேரத்தில் அவரின் வெளிநாட்டு பயணங்களின் செலவுகள் உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் இல்லாமல் தன்னார்வ தொண்டு நிறுவனத்திடமிருந்து வந்ததாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பரப்பப்படும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த தன்னார்வ தொண்டு நிறுவனம் இவ்வழக்கானது எஃப்.சி.ஆர்.ஏ இன் கீழ் உள்ள நடவடிக்கைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்று ஒரு அறிக்கையில் கூறி உள்ளது.
இவர் மோடிக்கு எதிராக பல்வேறு சமயங்களில் வெளிப்படையாக கண்டனம் தெரிவித்து வருபவர் என்பது குறிப்பிட தக்கது.
“இந்தியாவின் தலைமை நீதிபதிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை சுமத்தி இருந்தார். இதில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆதரவாக ஒரு மூத்த பார் கவுன்சில் உறுப்பினராகவும், பெண்கள் உரிமை வழக்கறிஞராகவும் இருக்கும் நிலையில் செல்வி ஜெய்சிங் எடுத்துக் கொண்ட முயற்சிகள் காரணமாக தான் இந்த பழிவாங்கல் என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது”. என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தன்னார்வ தொண்டு நிறுவனர்கள் ஜெய்சிங் மற்றும் க்ரோவர்க்கு ஆதரவாக கடந்த மாதத்தின் பிற்பகுதியில், இந்தியா முழுவதும் உள்ள பல கலைஞர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஒன்று சேர்ந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வக்கீல்கள் கூட்டமைப்பிற்கு தங்கள் ஆதரவைக் தெரிவித்தனர், மேலும் “குற்றவியல் சட்டத்தின் நியாயமற்ற மற்றும் பழிவாங்கும் பயன்பாட்டிலிருந்து சிபிஐ மற்றும் உள்துறை அமைச்சகம் விலக வேண்டும்” என்று கூறினர்.