Indian Economy

பார்லே நிறுவனம் 10,000 நபர்களை பணி நீக்கம் செய்ய முடிவு- தொடரும் கடும் பொருளாதார சரிவு நிலை!

பார்லே நிறுவனம் 1979 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. தற்போது ஏறத்தாழ ஒரு லட்சம் நபர்களுக்கு வேலை வழங்கி வருகிறது. இதில் 10 சொந்த தொழிற்சாலைகள் மற்றும் 125 ஒப்பந்த அடிப்படையிலான அலைகளில் உள்ள தொழிலாளர்களும் அடங்குவர்.

பொருளாதார சரிவான நிலை தொடர்ந்து நிலவும் பட்சத்தில் 10,000  நபர்களை வேலை நீக்கம் செய்ய வேண்டிவரும் என்று நாட்டின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான பார்லே தெரிவித்துள்ளது.

பார்லே நிறுவனத்தின் தலைமை அதிகாரி மாயங்க் ஷா கூறுகையில்.. கிலோவிற்கு 100 ரூபாய் அல்லது அதைவிட குறைவாக விலை மதிப்புள்ள பிஸ்கட்டுகள் ஐந்து ரூபாய் பாக்கெட்டுகள் மூலம் விற்கப்படுகின்றன. இதற்கான சேவை மற்றும் சரக்கு வரியை (gst) அரசு குறைக்க வேண்டும். இந்த உத்வேகத்தையும் அரசு தர தவறினால் நாங்கள் பலரை பணி நீக்கம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவோம்.

பிஸ்கட் மீதான அதிக ஜிஎஸ்டி வரியால் ஒவ்வொரு பாக்கட்களிலும் குறைவான பிஸ்கட்களை தான் எங்களால் வழங்க முடிகிறது . இதனால் அதிருப்தி அடையும் ஏழை வாடிக்கையாளர்கள் பிஸ்கட்டை வாங்குவதில்லை. இதனால் பிஸ்கட் விற்பனையும் கடுமையாக சரிவு அடைந்து விட்டது எனவே உற்பத்தியையும் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று மாயங்க் ஷா தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்” நிலைமை படுமோசமாக உள்ளது. மத்திய அரசு உடனடியாக தலையிட்டு நிலைமையை சீர் செய்யவில்லை என்றால்  8000-10000  நபர்கள் வரை வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.

முன்னதாக அருண் ஜெட்லீ நிதி அமைச்சராக இருந்த போதும் , அவரை சந்தித்து பிஸ்கட் மீதான வரியை குறைக்கும் படி கேட்டு கொண்டது பார்லே நிறுவனம் ஆனால் மத்திய அரசு இதை செவி சாய்க்கவில்லை.

தற்போது இந்தியா கடுமையான பொருளாதார சரிவை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது. மீடியாக்கள் இதுகுறித்து பெரிய அளவில் மக்களிடம் கொண்டு கொள்வதாக தெரியவில்லை. கார் விற்பனையில் இருந்து உள்ளாடை விற்பனை வரை பல்வேறு  தயாரிப்பு நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளை குறைத்து , வேலையாட்களையும் குறைத்து வருகின்றனர். 

கடந்த வாரம் தான் பிரபல “பிரிட்டானியா” பிஸ்கட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வருண் தமது நிறுவனத்தின் விற்பனை குறைந்துள்ளது பற்றி கவலை தெரிவித்திருந்தார்.  வாடிக்கையாளர்கள் 5 ரூபாய் மதிப்புள்ள பிஸ்கட்டைக்கூட வாங்குவதற்குத் தயங்குகின்றனர். 5 ரூபாய் பிஸ்கட் வாங்குவதற்கு ஒரு முறைக்கு இரு முறை யோசித்து வாங்கும் நிலை ஏற்பட்டிருப்பது, பொருளாதாரத்தில் தீவிர பிரச்சினை உள்ளது என்பதை தான் உணர்த்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது