Journalist

2019 ரமோன் மாக்சேசே விருது.. இந்திய பத்திரிகையாளர் ரவீஷ் குமார் பெற்று கொண்டார்!

ஆசியாவின் நோபல் விருது எனும் அளவிற்கு கருதப்படும் ரமோன் மகசேசே 2019 ஆண்டிற்கான விருதுக்கு இந்தியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ரவீஷ் குமார் தேர்வு செய்யப்பட்டு விருதை பெற்றார்.

பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபரான ரமோன் மகசேசே பெயரில், பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் நபர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது. இந்தாண்டு இந்தியாவைச் சேர்ந்த ரவீஷ்குமார் உள்ளிட்ட 5 பேர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பெருமை பட கூடிய ஒரு விஷயமாக இருந்தும் நமது அன்பான(!) இந்திய ஊடகங்கள் இதை முற்றிலுமாக புறக்கணித்து விட்டன. காரணம் இவர் மோதி எதிர்ப்பாளர் என்ற ஒரு பெயரை எடுத்து வைத்துள்ளது தான். ஆனால் உண்மையில் இவர் மோதி எதிர்ப்பாளர் இல்லை. காங்கிரஸ் ஆட்சியின் போது காங்கிரசை கேள்வி எதிர்த்து கேட்டார். பாஜக வின் ஆட்சியின் போது பாஜக வை எதிர்த்து கேள்வி கேட்கிறார். ஆனால் இதை ஒரு சில மாக்களால் பொறுத்து கொள்ள முடியவில்லை.

எனவே கடந்த வாரம் முழுவதும் ரவீஷ் குமார் பேசிய ஒரு பழைய வீடியோவை கட்டிங் பேஸ்டிங் செய்து தவறான கருத்து வருவதை போல பரப்பி மகிழ்ந்தனர்.

எனினும் அது நெட்டிசன்களால் முறியடிக்கப்பட்டது.

ஊடகவியலாளராக இருந்து, குரல் கொடுக்க இயலாத மக்களின் குரலாக ஒலிப்பதாலும் , சமூகப் பிரச்சனைகள் குறித்து விரிவாக விவாதிப்பதாலும் இவ்விருது அவருக்கு வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது.