உலகம் முழுவதும் கொரோனா பரவி வரும் நிலையில், கொரோனா வைரஸ் நோயை எதிர்கொள்ள அற்புதமான வழிமுறையை முன்வைத்துள்ளார் இந்துமகா சபா தலைவர் சக்ரபாணி மகாராஜ்..
“தேநீர் விருந்துகளை ஏற்பாடு செய்வதைப் போலவே, நாங்கள் ஒரு கவ்மூத்ரா(மாட்டு சிறுநீர்) விருந்துக்கு ஏற்பாடு செய்ய முடிவு செய்துள்ளோம், அதில் கொரோனா வைரஸ் என்றால் என்ன என்பதையும், மாட்டில் இருந்து கிடைக்கப்பெறும் பொருட்களை உட்கொள்வதன் மூலம் மக்களை எவ்வாறு காப்பாற்ற முடியும் என்பதையும் மக்களுக்குத் தெரிவிப்போம்” என்று இந்து மகா சபா தலைவர் தெரிவித்துள்ளார்.
“இந்த நிகழ்வில் கவுண்டர்கள் இருக்கும், அதில் மக்களுக்கு மாட்டு சிறுநீர் வழங்கப்படும். மேலும் மாட்டு சாணத்தால் தயாரிக்கப்பட்ட கேக்குகளும் கிடைக்கப்பெறும். சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் அகர்பத்தி மற்றும் இன்னபிற மாட்டில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களும் மக்களுக்காக வழங்கப்படும். இவற்றைப் பயன்படுத்தும்போது, வைரஸ் உடனடியாக இறந்துவிடும்.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முதலில் இந்த பார்ட்டி டெல்லியில் வைக்கப்படும், அடுத்த கட்டமாக நாடு முழுவதும் இவ்வாறான பார்ட்டிகள் நடத்தப்படும் என இந்து மகா சபா தலைவர் அறிவித்துள்ளார்.
கொரோனாவிடம் மன்னிப்பு :
மேலும் தெலுங்கானா மாநிலத்தில் கோழி இறைச்சியை பொதுவில் வைத்து அமைச்சர்கள் சாப்பிட்டதால் தான் கொரோனா வந்து விட்டது. இவர்கள் கொரோனாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டால் கொரோனா போய் விடும் என குழந்தைகளுக்கு கதை சொல்வதை போல உட்டு அடித்துள்ளார் அவர்.
மேலும் சைவ உணவை உண்பவர்களுக்கு கொரோனா தாக்காதாம் , ஆனாலும் கூட முன்னெச்செரிக்கையாக மாட்டு சிறுநீரை குடித்து கொள்ளுமாறும் அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.