நேற்று டில்லி ஸ்ரீ ஃபோர்ட் சாலையில் அமைந்துள்ள கார்கி கல்லூரி நிகழ்ச்சி ஒன்றின் போது குடிபோதையில் உள்நுழைந்த குண்டர்கள் கூட்டம் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நடந்த சம்பவம்:
கார்கி கல்லூரியில் ஆண்டு தோறும் 3 நாட்கள் (Fest) ரெவெரி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கும். அது இந்த ஆண்டும் நடைபெற்றுள்ளது. நேற்று இந்நிகழ்ச்சியின் இறுதி நாளாகும். கல்லூரியில் 2 நுழைவாயில் உள்ளது. ஒன்று மாணவிகளுக்கானது. மற்றொன்று கல்லூரி நிகழ்ச்சிக்கு தலைமை விருந்தினர்களாக கலந்து கொள்ள வரும் ஆண்களுக்கானது. எனினும் மாணவிகளின் கேட் திறந்து விடப்பட்டுளளது.
சிஏஏ ஆதரவு பேரணியில் பங்கேற்ற டிரக் நிறைய இருந்த கும்பல் மாலை 3.30 மணி அளவில் திடீரென கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்துள்ளது. ஜெய் ஸ்ரீ ராம் கோஷங்கள் முழங்கப்பட்டதாகவும், அவர்களில் மாணவர்கள் அல்லாமல் நடுத்தர வயதில் உள்ளவர்கள் குடிபோதையில் பெண்களின் அங்க அவயங்களை தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் கல்லூரி மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
அரங்கேறிய கொடூரம்:
மேலும் ஒரு மாணவி கூறுகையில் “எனது மேல் பகுதியை” ஒருவன் தவறான முறையில் தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறுகிறார். மாணவிகள் யாரும் தங்கள் பெயரை கூற அஞ்சுகின்றனர். மாலை 3.30 மணி அளவில் நுழைந்த அந்த கும்பல் இரவு 9.30 மணி வரை பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளது. பல மாணவர்கள் கழிப்பறையில் அடைக்கப்பட்டு துன்புறுத்த பட்டுள்ளனர்.
கல்லூரி மாணவிகள் முன் சுய இன்பத்தில் ஈடுபட்டுள்ளனர். மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் பெண்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அருகில் வரும் எந்த பெண்ணாக இருந்தாலும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். சிலர் மோசமான ஈவ் டீசிங்கில் ஈடுபட்டுள்ளனர் என மாணவிகள் நடந்த சம்பவங்களை கண்ணீர் விட்டு அழுத நிலையில் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்
போலீசார் வேடிக்கை:
இதில் கொடூரம் என்னவென்றால் சம்பவம் அரங்கேறிய சமயத்தில் சிஆர்பிஎப் படையினர், டில்லி போலீசார் அனைவரும் களத்தில் இருந்ததாகவும், மாணவிகள் உதவி கோரிய போது, “நாங்கள் செயல்பட எங்களுக்கு தடை விதிக்க பட்டுள்ளது” என போலீசார் பதில் கூறியதாகவும் மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
மாணவிகள் குற்றச்சாட்டு:
மாணவிகள் கல்லூரி நிர்வாகம் மீது குற்றம் சாட்டியுள்ளனர். கல்லாரி முதல்வர் பிரோமிளா குமார் இது குறித்து தெரிவித்த கருத்து மிகவும் மோசமாக உள்ளது. கல்லூரி நிகழ்ச்சிகளின் போது பாதுகாப்பாக உணராதவர்கள் கல்லூரி நிகழ்ச்சிகளுக்கு ஏன் வர வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
இது இவ்வாறு நடைபெற்றுள்ளது ஒன்றும் முதல் முறை இல்லை. கடந்த ஆண்டும் இதே போன்ற சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. அப்படி இருந்தும் இந்த ஆண்டு மீண்டும் இவ்வாறான சம்பவம் நடைபெற்றுள்ளது ஆட்சியாளர்களின் லச்சனத்தை தான் காட்டுகிறது என்று சமூக வலைத்தளங்களில் மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பெரும்பான்மை மீடியாக்கள் உறக்கம்:
நாட்டின் தலைநகரான டில்லியில் ஒரு மிக கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது .எனினும் சம்பவம் நடைபெற்று ஒரு நாள் ஆகியும் கூட பெரும்பான்மை ஊடகங்கள் செய்திக்கான உரிய முக்கியத்துவம் வழங்கவில்லை என்பது வருந்ததக்க ஒன்றாகும்.