ரஃபேல் போர்விமானத்தை தயாரிக்கும் டசால்ட் நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்த இடைத் தரகருக்கு 8.62 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளது குறித்து ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது. இது தற்போது அந்நாட்டில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது, எனினும் பெரும்பான்மை இந்திய ஊடகங்கள் இதை ஒரு விவாத பொருளாக கூட ஆக்க முடியாத நிலையில் உள்ளன.
ஒரு ரஃபேல் போர் விமானத்தின் விலை 526 கோடி ரூபாய் என காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது 126 விமானங்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்பிறகு பா.ஜ.க தலைமையிலான ஆட்சி அமைக்க, 126 விமானங்களுக்குப் பதிலாக ஒரு விமானத்தின் விலையே 1,670 கோடி ரூபாய் என்று 36 விமானங்கள் வாங்குவதற்கு 2016-ம் ஆண்டு செப்படம்பர் மாதம் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தம் போடப்பட்டதில் ஊழல் நடைபெற்றுள்ளது என்று நடுநிலை மக்கள் கடுமையாக குற்றம்சாட்டினர். பிரதமர் மோடியை திருடன் என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்தார். இந்தநிலையில், ரஃபேல் விவகாரம் மீண்டும் எழுந்துள்ளது.
அகஸ்டாவெஸ்ட்லேண்ட் வழக்கில் சிபிஐ விசாரணையில் வளையத்தில் உள்ள பாதுகாப்பு முகவர் சுஷென் குப்தாவுடன் இந்திய பாதுகாப்பு நிறுவனத்தின் உரிமையாளர்கள் நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ளனர் என்பது மேலும் புருவங்களை உயர்த்த வைக்கிறது.
பிரான்ஸ் ஊழல் தடுப்பு அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வில், ‘இந்தியாவைச் சேர்ந்த டெஃப்சிஸ் நிறுவனத்துக்கு 8.62 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது. இருப்பினும், டசால்ட் நிறுவனம் மீது அந்த நாட்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தவில்லை. இதுகுறித்து ஃபிரான்ஸ் நாட்டைச் சேரந்த ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது. இது இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செய்தி வெளியான நிலையில் மோடி அரசின் மீது காங்கிரஸ் குற்றம் சாட்டிவருகிறது.எனினும் தொலைகாட்சி ஊடகங்கள் இதை குறித்து பேசாமல் கோமா நிலையில் உள்ளதை காணமுடிகிறது,
டெஃப்சிஸ் நிறுவனம் இந்தியாவில் டசால்ட் நிறுவனத்தின் துணை ஒப்பந்ததார நிறுவனமாகும். மேலும், இந்த நிறுவனத்தின் சுசேன் குப்தாவின் மீது விவிஐபிக்களுக்கான விமானம் வாங்கும் விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாக அகஸ்டாவெஸ்ட் லேண்ட் வழக்கில் இவர் மீது சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துவிசாரணை செய்துவருகிறது.
ரஃபேல் ஊழல் குறித்து தி இந்து ராம், அக்குவேறு ஆணிவேராக அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்து ஊழல் நடைபெற்றதை அம்பலப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.