2 ரூ டாக்டர் – மருத்துவர் இஸ்மாயில் உசேன்:
ஆந்திரா மாநிலம் கர்னூலில் மிகவும் பிரசித்தி பெற்ற அதேசமயம் மக்களின் படங்களை வென்றவர் மருத்துவர். கே.எம்.இஸ்மாயில் உசேன். அவர் மருத்தவராக பணிபுரிய தொடங்கிய நாளிலிருந்து தனது வேலையை ஒரு மக்கள் சேவையாக தொடர்ந்து கொண்டிருந்தவர். அவரது வீட்டு வாசலில் எப்போதும் மக்கள் வரிசையில் நின்று கொன்டிருப்பார்கள். அவரும் சலிக்காமல் வைத்தியம் பார்த்துக்கொண்டிருப்பார். கோவிட் பீதி காரணமாக அவர் சில தினங்களாக தன் சேவையை நிறுத்தி வைத்திருந்தார்.
ஆனால் சிலபல கட்டாயத்தின் காரணமாக மீண்டும் தனது பணியை தொடர மருத்துவமனைக்கு சென்று பணியாற்றினார். கடந்த ஏப்ரல் 19, அன்று அவர் மரணிக்கும் தருவாய் வரையிலும் மக்கள்பணியில் ஈடிபட்டிருந்தார். மக்கள் தொடர்பின்றி இருந்த அவர் திடீரென இறப்பெய்தியது எப்படி என கண்டறிந்தபோது , கோவிட் Red Zone என அறிவிக்கப்பட்டிருந்த கொரோனா தொற்று தீவிரமடைந்திருந்த பகுதியில் பணி செய்த அவருக்கு ஒரு நோயாளி மூலமாக தொற்று ஏற்பட்டது தெரியவந்தது.
பரிதாமான நிலையில் இறுதி சடங்கு:
கடந்த 2019 டிசம்பரில் தான் அவருக்கு 76 வயது பூர்த்தியானது. அவரை பற்றி தெரியாதவர் என கர்னூல் மாத்திரமன்றி சுற்றுப்பட்டுள்ள அனைத்து கிராம மக்களுக்கும், தெலங்கானாவில் காட்வால் பகுதியில் இருந்தும் கர்நாடகாவின் ராய்ச்சூர் நகரிலிருந்தும் வரும் மக்களுக்கு அவரது முகம் அத்துப்படியாகும் அளவிற்கு ஏழை மக்களிடையே பிரபலமாக இருந்த அவரது மரணம் அவரது குடும்பத்தாரை விடவும் அவரிடம் சிகிச்சை பெற வந்த ஏழை மக்களையே அதிகம் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் ஆளாக்கியது.
தன்னலமற்ற சேவை:
பணம் என்பதை குறிக்கோளாக கொள்ளாமல் தன்னை நாடி வைத்தியத்திற்காக வரும் மக்களின் நலனுக்காக உழைத்தவர் என அவரை குறித்து புகழாரம் சூட்டுகிறார் மருத்துவர் இஸ்மாயிலின் 45 வருடகால நண்பரான இமாம் அப்துல் ரவூப்.
80-90 களில் பல ஏழைகளுக்கு இலவசமாகவும் , மருத்துவ தொகை பெறுவதாக இருந்தால் வெறும் 2 ரூபாய் மட்டும் பெற்றுக்கொண்டு சிகிச்சை செய்து அனுப்புவார்.. இதனால் அவரது பெயரே இரண்டு ரூபாய் டாக்டர்என்றானது என்கிறார் ரவூப். இப்போது வரை யாரிடமும் வைத்தியத்திற்கான காசு எதுவும் வாங்கமாட்டார். வருபவர்கள் 10 , 20 கொடுத்தால் மனம்கோணாமல் வாங்கிக்கொள்வார். எனக்கு இவ்வளவு ஃபீஸ் என எந்த தொகையும் அவர் ஃபிக்ஸ் செய்தது இல்லை.
அருமையான நடைமுறை:
அவருடைய டிஸ்பன்சரியில் ஒரு பெட்டி வைக்கப்பட்டிருக்கும் அதில் சிகிச்சைக்கான பணத்தை போட்டு, அதற்கான மிச்சத்தையும் மக்களே எடுத்துக்கொள்வார்கள் அந்தளவுக்கு மக்களிடையே சிநேகம் வளர்த்தார் அவர் என்கிறார் மற்றோரு நண்பரான கல்குரா சந்திரசேகர் என்பவர்.இவர் கர்னூலில் வரலாற்றாய்வாளரும் அரசியல் விமர்சகருமாவார்.
ஹைதராபாதில் இருக்கும் நான், எதுவும் வியாதி, வைத்தியம் செய்ய வேண்டுமெனில் கர்னூலுக்கு இஸ்மாயிலிடம் தான் வருவேன் என்கிறார் அவரது பால்யகால நண்பரான ஷபாத் அஹமது கான் எனும் தெலங்கானா மாநிலத்தின் பிரபல வழக்குறைஞர். கர்னூலில் இருக்கும் முஸ்லிம் குடும்பங்களையும் தாண்டி நூற்றுக்கணக்கான மார்வாரி மற்றும் ஜெயின் இனத்து குடும்பங்களுக்கு இலவச சிகிச்சை செய்து அவரது உயிர்களை காப்பாற்றியுள்ளார்.
கர்னூல் மெடிக்கல் காலேஜில் தனது எம்பிபிஎஸ் ,எம்டி படிப்பை முடித்தது முதல் கடந்த 25 ஆண்டுகாலமாக அதே மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தான் பணிபுரிகிறார். அவருக்கான தனி மருத்துவமனை அல்லது க்ளினிக் எதுவும் வைத்துக்கொள்ளவில்லை அவரது வீட்டில் இருக்கும் டிஸ்பன்சரி மட்டும் அவருக்கு உண்டு. அங்கு இரவு இரண்டு மணிக்கு ஒரு நோயாளி வந்தாலும் கூட முகசிளிப்பின்றி அவருக்கு வைத்தியம் செய்து அனுப்புவார் அதற்கான பணம் கூட வசூலித்துக் கொள்ளமாட்டார் என மருத்துவர் இஸ்மாயிலின் மேன்மையை கூறுகிறார் அவரது நண்பர் ரவூப்.அவருக்கு மனைவியும் 3 மகள்களும், 1 மகனும் உண்டு.