Gaumata Kerala States News

பாஜக MP க்கு சொந்தமான மாட்டு கொட்டகையில் மாடுகள் கடும் பட்டினியால் எழும்புகள் வெளியே தெரிய, சுகாதாரமற்ற நிலையில் பராமரிக்கப்படாது இருந்ததை அம்பலப்படுத்திய கேரள அமைச்சர்

Facebook ல் அம்பலப்படுத்திய கேரள அமைச்சர் கடகம்பல்லி சுரேந்திரன்

ககடகம்பல்லி சுரேந்திரன் என்பவர் கேரள அரசின் ஒத்துழைப்பு, சுற்றுலா மற்றும் தேவஸ்வோம் துறை அமைச்சராக இருந்து வருபவர்.

அவர் பின் வருமாறு தனது facebook பக்கத்தில் பதிவு செய்துள்ளார் ..

ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயில் அருகே பாஜக சார்பு தனியார் அறக்கட்டளை நடத்தி வரும் மாட்டு தொழுவம் ஒன்றில் மாடுகள் கொடுமை படுத்தப்படுவது குறித்து எனது கவனத்திற்கு வந்ததையடுத்து நேற்று நேரடியாக நானே சென்றேன் . அங்கு ஏறக்குறைய 30 பசுக்கள் மற்றும் கன்றுகள் கடும் பட்டினியாக , எழும்புகள் வெளியே தெரிய எழுந்து கூட நிற்க இயலாத வகையிலும் , மிகவும் சுகாதாரமற்ற நிலையிலும் உள்ளதை காணமுடிந்தது.

Credit : Facebook Pic

கடும் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்ட இந்த விலங்குகளை மீட்டு ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவிலில் ஒப்படைக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தல் வழங்கப்படும். மேற்குறிப்பிட்ட தனியார் அறக்கட்டளையின் அலுவலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். பரிதாபகரமான சூழ்நிலையில் போதுமான தீவனம் மற்றும் சரியான தங்குமிடம் மற்றும் பாதுகாப்பு இல்லாமல் மாடுகள் இருப்பதை ஒருக்காலும் அனுமதிக்க முடியாது. உடனடி நிவாரண நடவடிக்கையாக, இந்த விலங்குகளுக்கு உடனடியாக உணவு வழங்குமாறு கோவிலின் நிர்வாக அதிகாரிக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்.

இந்த தனியார் அறக்கட்டளையின் நிர்வாகிகளில் பாஜக மாநிலங்களவை எம்.பி. சுரேஷ் கோபி என்பவரும் ஒருவர் என்பது ஊடகங்களில் இருந்து தெரிந்து கொள்ளமுடிகிறது. பசு பாதுகாப்பு மற்றும் கோமாதாக்கள் பற்றிப் பேசுபவர்கள் குறைந்தபட்சம் இந்த மாடுகளுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்படுவதை உறுதிசெய்ய முயற்சிக்க வேண்டும். என்று கூறியுள்ளார்.