கொரோனா வைரஸ் நோய்க்கு சிகிச்சையளிக்க பசு சிறுநீர் மற்றும் மாட்டு சாணம் பயன்படுத்தலாம் என்று இந்து மகாசபாவின் தலைவர் சுவாமி சக்ரபாணி மகாராஜ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
மேலும் “கொரோனா வைரஸைக் கொல்லவும், உலகில் அதன் விளைவுகளை முடிவுக்குக் கொண்டுவரவும் ஒரு சிறப்பு யாகம் செய்யப்படும்” என்றும் அவர் கூறினார்.
“பசு சிறுநீர் மற்றும் மாட்டு சாணத்தை உட்கொள்வது தொற்றிவரும் கொரோனா வைரஸின் விளைவைத் தடுக்கும். ஓம் நம சிவாயா என்று கூறிக்கொண்டு உடலில் மாட்டு சாணத்தைப் பூசும் ஒருவர் கொரோனா வைரஸின் பாதிப்பில் இருந்து காப்பாற்றப்படுவார். கொரோனா வைரஸைக் கொல்ல ஒரு சிறப்பு யாக சடங்கு விரைவில் செய்யப்படும்” என்று சக்ரபாணி கூறினார்.
இப்படிப்பட்ட தீர்வை இவர் முன் வைத்ததும் மருத்துவ உலகமே பிரமிப்பில் உள்ளது. அதுமட்டுமின்றி இவர் கூறியுள்ள மருத்துவமுறையை உடனே சீனாவுக்கு தெரிவிக்க செய்து மக்களை காப்பாற்றுமாறும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.