Gujarat Islamophobia Muslims

குஜராத் மாடல்: நூர்ஜஹானின் 2 வயது குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல விடாமல் ஆம்புலன்ஸை தடுத்து நிறுத்திய போலீசார் !

நூர்ஜஹான் ஷேக் தனது இரண்டு வயது நோய்வாய்ப்பட்ட மகள் அய்மனுடன் புதன்கிழமை காலை ஆம்புலன்ஸில் சென்று கொண்டிருந்தார், சோதனை சாவடி ஒன்றில் அவர்களை தடுத்து நிறுத்திய குஜராத் போலீசார் கொரோனா வைரஸ் பரப்புவதாக குற்றம் சாட்டி, அவர்களை செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் எல்லிஸ்பிரிட்ஜின் கிழக்குப் பகுதியில் உள்ள விக்டோரியா கார்டனில் இருந்து பல்டியில் உள்ள மருத்துவமனைக்கு நடந்தே செல்ல வேண்டியதாயிற்று.

குஜராத்: ஆம்புலன்சில் அவசரமாக சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்ட, இரண்டு வயது குழந்தை அய்மனின் வாகனத்தை போலீசார் செல்ல அனுமதிக்கவில்லை. இந்த வாகனத்தில் மதுபானம் கடத்தி செல்லப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலே இதற்கு காரணம்

இதனால் ஆற்றின் மறுபுறுத்தில் அமைந்துள்ள எஸ்.வி.பி மருத்துவமனைக்கு நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதில் கொடுமை என்னவென்றால் ஆம்புலன்சில் மதுபானம் உள்ளதாக போலீசாருக்கு கிடைத்த தகவல் பொய்யானது என்ற செய்தி போலீசாருக்கு தெரிந்த பிறகும் போலீசார் அம்புலன்ஸ் செல்ல அனுமதிக்கவில்லை.

குஜராத் மாடல் போலீசார் :

தரியாபூரிலிருந்து வந்த ஆம்புலன்ஸ் ஜமியத் உலமா-இ-ஹிந்த் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு சொந்தமானது. எஸ்ஆர்பியைச் சேர்ந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வினோத் சொராதியா வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தார். அவர் ஆம்புலன்ஸ் டிரைவருடன் மிகவும் மோசமான முறையில் நடந்து கொண்டதாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கூறுகிறார். ஆம்புலன்ஸை செல்லவிடாமல் போலீஸ் அதிகாரி தடுத்து நிறுத்தியதால் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒரு வழக்கறிஞரை அனுப்பியது.

சம்பவ இடத்தை வந்தடைந்த வழக்கறிஞர் இர்ஷாத் மன்சூரி, “ஆம்புலன்ஸ் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் எந்த வித காரணமின்றி தடுத்து வைக்கப்பட்டது. மேலும் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஓட்டுநரை கடுமையாக நிந்தித்துள்ளார், (முஸ்லீம்) ஓட்டுநர் கொரோனா வைரஸ் பரப்புவதாக கூறியுள்ளார். இந்த போலீஸ் அதிகாரி மீது புகார் அளிக்க முடிவு செய்துள்ளோம். ” என கூறினார்.

லைவ் டிவி நிருபரின் தைரியம்:

மனிதாபிமானம் இல்லாமல் போலீசார் இவ்வாறு நடந்து கொண்டிருக்க சம்பவ இடத்திற்கு விரைந்தது லைவ் டிவி ஊடகம். கொரோனா வைரஸ் பரப்புவதாக பொய்யாக கூறி, ஆம்புலன்ஸை செல்லவிடாமல் தடுத்த போலீசார் அதிகாரிகள் ஒவ்வொருவரையும் மைக் முன் கேள்வி கேட்டு கடும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளார். போலீசார் பதில் சொல்ல முடியாமல் மழுப்பும் காணொளியை கீழே காணலாம்.

நிருபர் கேள்வி கேட்டு கொண்டிருக்கையிலேயே சிறிய ஆம்னி மாடல் ஆம்புலன்சில் 5 பேர் உள்ளிருக்க அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள், எனினும் அதை விட குறைவான நபர்களுடன் பெரிய ரக வழமையான ஆம்புலன்ஸ் ஒட்டி சென்ற முஸ்லீம் ஓட்டுநரின் வாகனம் அனுமதிக்கப்படவில்லை. இதையும் கேள்வியாக கேட்கிறார் அந்த நிருபர், ‘அதற்கு போலீஸ் அதிகாரி அப்படியா? அது எனக்கு தெரியாது ‘ என மழுப்புவதை அந்த காணொளியில் காண முடிகிறது. இதுதான் குஜராத் மாடலா என்றும் அந்த நிரூபர் காணொளியில் கேட்பதை காண முடிகிறது.

போலீசார் மீது நடவடிக்கை:

ஏ.சி.பி சாகர் சம்ப்தா கூறுகையில், “நாங்கள் பி.எஸ்.ஐ.க்கு எதிராக விசாரணையைத் தொடங்கியுள்ளோம், அவரை வேறு பதவிக்கு மாற்றியுள்ளோம். ஆம்புலன்சில் அமர்ந்திருந்தவர்கள் மாஸ்க் அணியாததால் அதிகாரி அவ்வாறு நடந்திருக்கிறார். ” என கூறினார்.

ஆம்புலன்ஸ் டிரைவர் உஸ்மான் குரேஷி கூறுகையில், “போலீசார் ஆம்புலன்ஸ் சோதனை செய்தனர், அச்சமயம் பி.எஸ்.ஐ என்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கடுமையாக ஏசினார். முகமூடிகளை அணியாமல் மக்களை ஏற்றிச் சென்றதற்காக அவர் என்னை திட்டினார். குழந்தையை பால்டியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது, ஆனால் போலீசார் செல்லவிடாததால் அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு நடந்தே சென்றனர்.

கல்நெஞ்சு கொண்ட போலீஸ் அதிகாரி?:

“நானும் என் சகோதரியும் பால்டியில் உள்ள டாக்டர் ஹஸ்முக் ஷா மருத்துவமனைக்கு என் குழந்தையை அழைத்து சென்றோம்” என்கிறார் நூர்ஜஹான்.

காவல்துறை அதிகாரி எங்களின் எவரது பேச்சையும் கேட்கத் தயாராக இல்லை. நோய்வாய்ப்பட்ட குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தது, ஆனால் காவல்துறையினர் அதை சற்றும் பொருட்படுத்தவில்லை. நீண்ட நேரம் காத்திருந்த பிறகு, நானும் என் மனைவியும் மருத்துவமனைக்கு நடக்க முடிவு செய்தோம்” என்று ஆரிஃப் ஷேக் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.