கர்நாடகா : மகாத்மா காந்தி, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பற்றிய பாடங்கள் நீக்கப்பட்டு ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிகளான விநாயக் சாவர்க்கர் மற்றும் கேபி ஹெட்கேவார் ஆகியோரின் பாடங்கள் பாடப்புத்தகங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. அசர்ச்சைக்குரிய வலதுசாரி சொற்பொழிவாளர் ரோஹித் சக்ரதீர்த்தா தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்ட பள்ளி பாடப்புத்தகங்களுக்கு எதிராக கர்நாடகாவில் உள்ள முற்போக்கு குழுக்கள் ஏன் போராடுகின்றன? இந்த நூல்களில் எந்தெந்தப் பிரிவுகள் திரிக்கப்பட்டிருக்கின்றன, எந்தெந்தப் பகுதிகள் காவி மையமாக்கப்பட்டுள்ளன, எந்த முற்போக்குக் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன? சர்ச்சை தொடங்கியதில் இருந்து முதன்முறையாக, […]
Students
லட்சத்தீவு :அரைக் கை சட்டையும் பாவாடையுமாக மாறும் பள்ளி சீருடை ..
லட்சத்தீவில் உள்ள மக்கள் கடந்த வாரம் புதிய பள்ளி சீருடை வழங்குவதற்கான டெண்டர் ஆவணம் சமூக ஊடகங்களில் பரவியதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். ஆவணத்தின்படி, ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டு வரையிலான பெண் மாணவர்களுக்கு, சல்வார் உடைகள் ( stitched divided skirts ) தைக்கப்பட்ட பிரிக்கப்பட்ட பாவாடைகளாகவும், முழுக் கை சட்டைகள் அரைக் கைகளாகவும் மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லட்சத்தீவில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லீம்கள், உயர் வகுப்புகளில் படிக்கும் பெண் மாணவிகள் அடக்கமாக உடை அணியப் பழகியதால் என்ன நடக்கிறது என்று […]
கர்நாடகா: ஹிஜாப் அணியும் மாணவிகளின் பெயர், விலாசம், தொலைபேசி எண்ணை வெளியிட்ட கல்லூரி..
ஆலியா அசதி பிப்ரவரி 9 புதன்கிழமை அன்று நாள் முழுவதும் ராங் நம்பர் தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. கர்நாடகாவின் உடுப்பியில் சலசலக்கும் வாட்ஸ்அப் குழுக்களில் தொலைபேசி எண்கள், பெற்றோரின் பெயர்கள் மற்றும் வீட்டு முகவரி உட்பட தனது தனிப்பட்ட விவரங்கள் பகிரப்பட்டதை 17 வயது சிறுமி சில மணிநேரங்களில் உணர்ந்தார். கர்நாடகாவின் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதைத் தொடரும் போராட்டங்களில் முன்னணியில் இருந்த உடுப்பியின் அரசுப் பெண்களுக்கான அரசுப் பல்கலைக்கழகக் கல்லூரியின் ஆறு முஸ்லிம் மாணவர்களில் ஆலியா […]
நர்ஸிங், சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி பயில நீட் நுழைவுத்தேர்வு! – மே 17 இயக்கம் கண்டனம்
எம்பிபிஎஸ் படிக்கவும், பல் மருத்துவ படிப்பிற்கும் ஏற்கனவே நீட் (NEET) என்னும் தேசிய நுழைவுத் தேர்வு உள்ள நிலையில், வரும் கல்வியாண்டு முதல் நர்ஸிங், சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி உள்ளிட்ட அனைத்து மருத்துவம் சார்ந்த படிப்பிற்கும் நீட் நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கியுள்ளது மோடியின் பாஜக அரசு. இது ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் மருத்துவம் பயில்வதை அடியோடு தடுத்தும் நிறுத்தும் செயலாகும். இந்திய ஒன்றிய பாஜக அரசின் இந்த செயலை மே பதினேழு இயக்கம் […]
டெல்லி: ஜாமியா மாணவி சஃபூரா கைது; ஊரடங்கின் போது அடுத்தடுத்து கைது செய்யப்படும் முஸ்லிம்கள்!
டெல்லியில் CAA,NRC,NPR சட்டங்களை திரும்ப பெற கோரி போராட்டத்தை இந்திய முழுவதும் கொண்டு செல்ல காரணமானவர்கள் டெல்லி ஜாமியா மாணவர்கள் அதில் குறிப்பாக யார் எல்லாம் முன் எடுத்தார்களோ அவர்களை இப்போது டெல்லி காவல்துறை திட்டமிட்டு கைது செய்து வருகிறது நான்கு நாட்களுக்கு முன்பாக சகோதரர் மீரான் ஹைதர் கைது செய்ய பட்ட நிலையில்.. நேற்று சனிக்கிழமை மாலை போராட்டத்தை பெண்கள் மத்தியில் மிக வேகமாக முன் எடுத்து சென்ற ஜாமியா பல்கலைக்கழக மாணவி சகோதரி சஃபூரா […]
ஜாமியா மாணவ மாணவிகளின் அந்தரங்க உறுப்புகளில் தாக்கிய டில்லி போலீஸ் !அரச பயங்கரவாதமா ? என மக்கள் கேள்வி ..
“10 கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் அந்தரங்க பாகங்களில் தாக்கப்பட்டுள்ளனர். சிலர் மிகவும் மோசமான முறையில் தாக்கப்பட்டுள்ளனர், எனவே அவர்களை நாங்கள் அல் -ஷிஃபா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம் ” என மருத்துவர்கள் கூறியுள்ளனர். பாராளுமன்றத்தை நோக்கி பேரணி பாராளுமன்றத்தை நோக்கிய CAA எதிர்ப்பு அணிவகுப்பில் பங்கேற்ற ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தின் 10 க்கும் மேற்பட்ட மாணவர்கள், அந்தரங்க பாகங்களில் தாக்கப்பட்டதில் ஜாமியா சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். “சில மாணவர்கள் லத்திகளால் மார்பில் தாக்கப்பட்டதால் உள் காயங்கள் […]
டில்லி: ஜெய் ஸ்ரீ ராம் கோஷங்கள், மாணவிகள் முன் சுய இன்பம், பாலியல் சீண்டல் என அரங்கேறிய கேவலம் ! சிஏஏ ஆதரவாளர்கள் மீது குற்றச்சாட்டு..
நேற்று டில்லி ஸ்ரீ ஃபோர்ட் சாலையில் அமைந்துள்ள கார்கி கல்லூரி நிகழ்ச்சி ஒன்றின் போது குடிபோதையில் உள்நுழைந்த குண்டர்கள் கூட்டம் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். நடந்த சம்பவம்: கார்கி கல்லூரியில் ஆண்டு தோறும் 3 நாட்கள் (Fest) ரெவெரி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கும். அது இந்த ஆண்டும் நடைபெற்றுள்ளது. நேற்று இந்நிகழ்ச்சியின் இறுதி நாளாகும். கல்லூரியில் 2 நுழைவாயில் உள்ளது. ஒன்று மாணவிகளுக்கானது. மற்றொன்று கல்லூரி நிகழ்ச்சிக்கு தலைமை விருந்தினர்களாக கலந்து கொள்ள வரும் ஆண்களுக்கானது. எனினும் […]
டில்லியில் 4 நாட்களில் மீண்டும் 3வது துப்பாக்கி சூடு சம்பவம் – அமித் ஷா பதவி விலக கோரி இந்திய அளவில் ட்ரெண்டிங் !!
டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் கேட் எண் 5 க்கு வெளியே ஞாயிற்றுக்கிழமை இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பி.டி.ஐ தெரிவித்துள்ளது. காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் தொடர் போராட்டங்களுக்கு மத்தியில் டெல்லியில் கடந்த நான்கு நாட்களில் இது மூன்றாவது துப்பாக்கிச் சூடு சம்பவமாகும். ஒரு நாட்டின் தலைநகரில் இவ்வாறு தொடர்ந்து நடைபெற்று வருவது, உள்துறை அமைச்சரின் செயலற்ற தன்மையை காட்டுகிறது. அமித் ஷா நாட்டு […]
“கோட்ஸேவை போல ஜாமியா மாணவர் மீது துப்பாக்கி சூடு நடத்தியவரும் ஒரு தேசியவாதியே” – இந்து மகா சபா அறிவிப்பு..
ஜாமியா மாணவர்கள் மீது துப்பக்கிசூடு நடத்திய பயங்கரவாதிக்கு விரைவில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்படும் என இந்து மகா சபா இன்று அறிவித்துள்ளது. மேலும் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டவன் கோட்ஸேவை போல ஒரு உண்மையான தேசியவாதி எனவும் புகழாரம் (!) சூட்டியுள்ளது இந்து மகா சபா. “ஜாமியா வில் நடைபெறும் தேசவிரோத செயல்பாடுகளை ஒடுக்கும் விதமாக ஜாமியா மாணவர்களுக்கு (துப்பாக்கி சூடு மூலம்) உடனடி அஸாதியை வழங்கிய வாலிபரை குறித்து நாங்கள் பெருமை கொள்கிறோம்” என்று இந்து மகாசபாவின் செய்தித் […]
போலீசார் வேடிக்கை பார்க்க, ஜெய் ஸ்ரீ ராம் கோஷங்களுடன் பயங்கரவாதி கோபால் ஜாமியா மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு !
தெற்கு டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா அருகே குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் குடிமக்களின் தேசிய பதிவுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சற்று முன் தீவிரவாதி ஒருவன் கையில் துப்பாக்கியுடன் போலீசார் சூழ்ந்த நிற்கும் இடத்தில, மாணவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளான். அதில் மாணவர் ஒருவருக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்திய தீவிரவாதி, 31 வயதானவன் என கூறப்படுகிறது. அவனது பெயர் ராம் […]
உபி : சமஸ்கிருத பல்கலையில் போட்டியிட்ட 4 சீட்டுகளிலும் ஏபிவிபி படுதோல்வி!
உபி வாரணாசியில் உள்ள சம்பூர்நாடு சமஸ்கிருத விஸ்வவித்யாலயாவில் நடைபெற்ற மாணவர் சங்கத் தேர்தலில் பாஜக வின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) இந்திய தேசிய மாணவர் சங்கத்திடம் (என்எஸ்யுஐ) தோல்வியடைந்தது. முன்னதாக 2019 தேர்தலில் 4 சீட்டுகளிலும் வெற்றி பெற்ற ஏபிவிபி தற்போது அனைத்து சீட்டுகளையும் இழந்துள்ளது. வாரணாசி என்பது பிரதமர் மோடியின் சொந்த தொகுதியாகும், கூடுதலாக இந்துத்துவ ஆதித்யநாத் ஆளும் மாநிலமாகவும் இருப்பதால் இது இந்துத்துவாவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏபிவிபி […]
ஜே.என்.யூ வன்முறை : ‘அரசாங்க ஆதரவுடன் நடந்தது’ – உண்மை கண்டறியும் குழு அறிக்கை !
‘ஜனவரி 5 ஆம் தேதி ஜே.என்.யூ பல்கலை வளாகத்திற்குள் நடந்த தாக்குதல் “அரசாங்க ஆதரவுடன் ” நடைபெற்றுள்ளது. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.ஜகதேஷ் குமாரை உடனே நீக்க வேண்டும், மேலும் அவருக்கு எதிராக குற்றவியல் விசாரணை தொடங்கப்பட வேண்டும்’ எனவும் ஜே.என்.யூ வன்முறை தொடர்பாக நியமிக்கப்பட்ட காங்கிரசின் உண்மை கண்டறியும் குழு பரிந்துரைத்துள்ளது. நான்கு பேர் கொண்ட குழு நியமனம்: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யூ) அரங்கேறிய வன்முறை குறித்து விரிவான விசாரணையை மேற்கொள்ள காங்கிரஸ் நான்கு பேர் […]
குஜராத்: CAA வுக்கு ஆதரவாக கடிதம் எழுத கட்டாயப்படுத்தி பிறகு எதிர்ப்பால் பின்வாங்கிய பள்ளி நிர்வாகம்!
குஜராத்தின் அகமதாபாத் கங்காரியா பகுதியில் உள்ள லிட்டில் ஸ்டார் பள்ளியில் 5 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களிடம் CAA வுக்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தபால் அட்டைகளை எழுதுமாறு மாணவர்கள் கட்டாயப்படுத்த பட்டுள்ளனர். கல்லூரி நிர்வாகம் அராஜகம் : “வாழ்த்துக்கள். இந்திய குடிமகனான நான், CAA (குடியுரிமை திருத்தச் சட்டம்) கொண்டு வந்ததற்காக பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியை வாழ்த்துகிறேன். நானும் எனது குடும்பத்தினரும் இதை ஆதரிக்கிறோம்.” என்ற வாசகத்தை ஆசிரியர்கள் […]
JNU : பேராசிரியர் படுக்கை அறை வரை சென்று மிரட்டிய குண்டர்கள்!
ஜே.என்.யுவில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடந்த தீரவிரவாத தாக்குதலின் போது மாணவர்கள் மட்டுமின்றி பல்வேறு பேராசிரியர்கள், அவர்களது வீடுகள், குடும்பத்தினர் என குறிவைத்தது தாக்கபட்டுள்ளனர். பல்கலை பேராசிரியர்கள் தங்கியிருக்கும் வீடுகளில் இரவு 7.30-8 மணி அளவில் முக மூடி அணிந்த குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நடைப்பயணத்தின் போது பயங்கரம்: முன்னாள் ஜே.என்.யூ ஆசிரியர் சங்கத்தின் (ஜே.என்.யு.டி.ஏ) செயலாளர் பிக்ரமாதித்ய சவுத்ரியின் மனைவி குமாரி நீலு, இரவு 7.30 மணியளவில் நடைபயிற்சிக்காக தனது வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அப்போது தூரத்தில் […]
JNU: கண் தெரியாத சமஸ்கிருத மாணவரையும் தாக்கிய பாசிச பயங்கரவாதிகள்!
ஞாயிற்றுக்கிழமை மாலை, டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருத ஆராய்ச்சி மாணவர் சூர்யா பிரகாஷ் தனது வாசிப்பில் மூழ்கி இருந்த சமயம்.. பார்வை குறைபாடுள்ள சூர்யா பிரகாஷ், JNU சபர்மதி ஹாஸ்டலின் அறை எண் 051 ல் இருந்து வருகிறார். இரவு 7 மணியளவில், முகமூடி அணிந்த ஆண்களும் பெண்களும் இரும்பு கம்பிகள், லத்திகள் மற்றும் பிற ஆயுதங்களைக் கொண்டு விடுதி வளாகத்திற்குள் நுழைந்துள்ளார். விடுதி கட்டணம் அதிகரிக்க பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை […]