உபி மாநிலம் பரேலி பகுதியில் வசிப்பவர்கள் ரேஹான் மற்றும் அவரது நண்பர்ஷாருக், சம்பவத்தன்று நந்தன்சிங் என்பவரது வீட்டுச்சுவற்றில் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்ததை கண்ட நந்தன்சிங்கும் அவரது குடும்பத்தினரும், இருவரும் தங்களது வீட்டிற்கு திருட வந்திருப்பதாக நினைத்து அடித்து உதைக்க தொடங்கியுள்ளனர். அவர்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காத நந்தன்சிங் குடும்பத்தினர் இருவரையும் வலுவான ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ரேஹான், பரேலி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது மேல் சிகிச்சைக்கு வசதிகள் இல்லை என கூறி மருத்துவர்கள் டெல்லிக்கு அனுப்பி […]
Uttar Pradesh
உ.பி : கை, கால் கட்டப்பட்ட நிலையில் 2 தலித் சிறுமிகளின் உடல்கள் சடலமாக மீட்பு..
தலைமை பூசாரி ஆளும் மாநிலமான உபி யில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த வரிசையில் உபி உன்னாவோவில் புதன்கிழமையன்று வயலில் இறந்த நிலையில் இரு தலித் சிறுமிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் வழங்கிய புகாரின் அடிப்படையில் மிகுந்த போராட்டத்திற்கு பின்னர், உ.பி. காவல்துறை இச்சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர். உன்னாவ் மாவட்டத்தில் அசோஹா காவல் நிலையத்தின் கீழ் உள்ள பாபுரா கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. […]
கூகுல் சுந்தர் பிச்சை மீது வழக்கு தொடர்ந்த உபி காவல்துறை !
பிரதமர் நரேந்திர மோடியை குறித்து வீடியோ ஒன்றில் அவதூறு உள்ளதாக கூறி, உத்தரபிரதேச வாரணாசியில் உள்ள காவல்துறையினர் கடந்த வாரம் கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சாய் மற்றும் 17 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர், பிறகு இது குறித்த செய்தி வெளியானதும் மேற்குறிப்பிட்டோரின் பெயர்களை எஃப்.ஐ.ஆரில் இருந்து காவல்துறை அதிகாரிகள் நீக்கினர். இந்த வழக்கில் “சம்பந்தப்படவில்லை” என்று கண்டறியப்பட்ட பின்னர் சுந்தர் பிச்சை மற்றும் மூன்று கூகிள் உயர் அதிகாரிகளின் பெயர்கள் நீக்கப்பட்டன, […]
சிஏஏ க்கு எதிராகப் போராடியதாக அலிகர் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது ..
உபி : அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் சமூகசெயல்பாட்டிற்கான படிப்பில் முதுநிலை இறுதியாண்டு பயிலும் ஃபர்ஹான் ஜூபேரி, அதே துறையில் இளநிலை பயிலும் ரவிஷ் அலிகான் என்ற இரு மாணவர்கள் CAA-வுக்கு எதிராகப் போராடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு,கடந்த 28 ஆம் தேதி வியாழக்கிழமை உ.பி போலீஸால் கைது செய்யப்பட்டனர். நள்ளிரவு 12 மணியளவில் கைது செய்யப்பட்ட ரவிஷ் அலிகான் பிறகு விடுவிக்கப்பட்டாலும், பர்ஹான் சிறையில் அடைக்கப்பட்டார். ஊரடங்கில் கைது வேட்டை: கொரோனாவுக்காக நான்காம் கட்ட ஊரடங்கை நாடு எதிர்கொண்டுள்ள […]
அடுத்த ஆறு மாதங்களுக்கு வேலை நிறுத்த போராட்டங்கள் கூடாது – உபி முதல்வர் உத்தரவு ..
அத்தியாவசியப் பணிகள் பராமரிப்புச் சட்டம் (ESMA)-வை நிறைவேற்றியதன் மூலம் அரசு நிறுவனங்களும், துறைகளும் ஆறு மாத காலத்திற்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு தடை விதித்துள்ளது அம்மாநில பாஜக அரசு. இதை மீறுவோரை வாரண்ட் இல்லாமலே யாரை வேண்டுமானாலும் கைது செய்யும் அதிகாரம் காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆளுநர் ஆனந்தி பென் படேல் அவர்களின் ஒப்புதலோடு, கூடுதல் தலைமைச் செயலாளர் முகுல் சிங்கால் அவர்களால் வெளியிடப்பட்ட குறிப்பாணையில் இது பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கான பஞ்சப்படி உயர்வு கடந்த மாதம் […]
பசுவைக் கொன்றதாக பரவிய வதந்தியின் பேரில் முஸ்லிம் கிராமவாசிகளைக் கொடுமை செய்த உபி போலீசார்!
உ.பியிலுள்ள ஃபரித்பூர் காஜி என்னும் ஊரைச் சேர்ந்த 7 முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ள விபரம்: கடந்த மே 8 ஆம் தேதி கிட்டத்தட்ட நோன்பு திறக்கும் இஃப்தார் சமயத்தில் வந்த காவல்துறையினர் அவர்களை வசை பாடியதோடு, அவர்களது வீட்டுகளையும் தாக்கினார்கள். குறிப்பாக சமையல் பொருட்களை சேதப்படுத்தி, பாத்திரங்களை உடைத்து, மீதமிருந்த உணவுப் பொருட்களை சிதறடித்தனர். மேலும் அங்கிருந்த ஆண்களைத் தாக்கியதோடு, 3 பேர்களை கைது செய்து சில கி.மீ தூரத்திலுள்ள பிஜ்னோர் நகரிலுள்ள கோட்வாலி காவல் […]
பாப்ரி பள்ளி இடித்த இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு நன்கொடை அளிப்போருக்கு வருமான வரி விலக்கு; மோடி அரசு அறிவிப்பு !
பொதுவாக வருமான வரிச்சட்டம் பிரிவு 80G-ல் இருந்து அனைத்து மத அறக்கட்டளைகளுக்கும் விதிவிலக்கு அளிக்கப்படுவதில்லை. ஒரு தொண்டு நிறுவனமோ அல்லது மத சம்பந்தமான அறக்கட்டளையோ வருமான வரிச்சட்டம் பிரிவு 11 மற்றும் 12-ன் கீழ் விண்ணப்பித்தால் மட்டுமே அவற்றின் நன்கொடையாளர்களுக்கு 80G பிரிவின் கீழ் வருமானவரிச் சலுகை அளிக்கப்படும். எனினும் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி அமைக்கப்பட்ட “ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த் ஷேத்ரா” என்ற அறக்கட்டளைக்கு கொடையளிக்கும் நன்கொடையாளர்களுக்கு 2020-21ஆம் நிதியாண்டிலிருந்து வருமானவரிவிலக்கு அளிக்கப்படும் என […]
உபி: காசி விஸ்வநாத் கோவில் அர்ச்சகர்கள் நடுரோட்டில் கூட்டமாக ஒன்றுகூடி பூஜை; வழக்கு பதியப்படுமா?
நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவி வருகிறது. அதை கட்டுப்படுத்த மாநில அரசாங்கங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் கோரக்பூர் தலைமை பூசாரி அஜய் பிஷ்த் சிங் ஆளும் உபி மாநிலத்தில் புகழ்பெற்ற காசி விஸ்வநாத கோவில் அர்ச்சகர்கள் நடுரோட்டில் கூட்டமாக பூஜை செய்தனர். கொரோனா ஊரடங்கு நாடு முழுவதும் அமலில் உள்ளது. மத்திய அரசு மத ரீதியான எந்த ஒரு ஒன்று கூடலுக்கும் தடை விதித்துள்ள நிலையில் இவ்வாறு சட்ட விரோதமாக பல […]
உபி : ‘இனி இந்தபக்கமே வர கூடாது’, மகன் கண் முன்னே முஸ்லீம் வியாபாரியை மிரட்டி, இழிவுபடுத்திய பாஜக எம்.எல்.ஏ !
உத்தரபிரதேசத்தில் ஒரு பாஜக எம்எல்ஏ முஸ்லிம்களிடமிருந்து காய்கறிகளை வாங்க வேண்டாம் என்று மக்களிடம் கூறிய செய்தி வெளியான ஓரிருநாட்களில் மீண்டும் ஒரு உபி மாநில பாஜக எம்எல்ஏ முஸ்லீம் வியாபாரி ஒருவரை இழிவாக பேசி மிரட்டியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான மத வெறுப்பு பிரச்சாரம், பொய்யான அவதூறு சுமத்தல் ஆகியவற்றில் இந்தியாவில் முதலிடம் உ.பி என்று விமர்சனம் செய்யப்படும் நிலையில் அதற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டாக, ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ள […]
‘முஸ்லீம் வயோதிகர் பாட்டிலில் சிறுநீர் கழித்து அதை வாழைப்பழங்களில் தெளித்து விற்கிறார்’ என பொய் பரப்பிய சங்கிகள்
உபி, பிஜ்னோர்: கடந்த இரண்டு தினங்களாக பாஜக ஆதரவாளர்களால் இரண்டு வீடியோக்கள் உயர்வாக பகிரப்பட்டு வருகின்றன. முதல் வீடியோவில் ஒரு வயதான முஸ்லிம் பழ வியாபாரி தள்ளுவண்டி அருகில் நின்று கொண்டிருக்கிறார். அவரை நோக்கி “பாட்டிலில் ஏன் சிறுநீர் கழிக்கிறாய் ? “என்று கேட்கப்பட “வீணான பேச்சுக்கள் பேசாதீர்கள்” என்று கூறியவர் அவர் சென்று விடுகிறார். இரண்டாம் வீடியோவில் அதே முஸ்லிம் வியாபாரி தவறு நடந்து விட்டது என்னை மன்னித்துவிடுங்கள் எனக் கூறி தோப்புக்கரணம் போடுவதாக அமைந்துள்ளது. […]
உபி : கொரோனா நோய் தொற்று உள்ளதாக சந்தேகிக்கப்படும் தப்லீகி ஜமாத்தினரை சிறைகளில் அடைக்க உபி முதல்வர் முடிவு ..
உபி : டெல்லி நிஜாமுதீன் மர்கஸில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் எவருக்கேனும் கொரோனா நோய்த்தொற்று உள்ளது உறுதிசெய்யப்பட்டாலோ அல்லது சந்தேகிக்கப்பட்டாலும் கூட அவர்களை தற்காலிக சிறைகளில் அடைத்து வைக்குமாறு உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் அஜய் பிஷ்த் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பிடிஐ தெரிவித்துள்ளது. டெல்லியில் நிஜாமுதீன் மர்க்கஸில் பங்கெடுத்த பின்னர் உத்தரபிரதேசத்திற்கு வந்த 3,000 தப்லீகி ஜமாஅத் உறுப்பினர்களை மாநில காவல்துறை அடையாளம் கண்டுள்ளது என தலைமைச் செயலாளர் […]
உபி : பசிக்கு பிஸ்கட் வாங்க சென்ற ரிஸ்வான்(22);கொடூரமாக தாக்கிய போலீஸ் – இளைஞர் உயிர் இழப்பு !
தினகூலித் தொழிலாளியான ரிஸ்வான் அகமது 22, உபி மாநிலத்தின் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் சனிக்கிழமையன்று இறந்தார், லாக்டவுன் காலத்தில் வீட்டில் இருந்து வெளியேறிய சமயத்தில் போலிஸாரால் கொடூரமாக தாக்கப்பட்டதில் உயிர் இழந்துள்ளதாக ரிஸ்வானின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். இது குறித்து தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. தனது பொலிஸ் புகாரில், ரிஸ்வானின் தந்தை இஸ்ராயீல், ஏப்ரல் 15 ம் தேதி மாலை 4 மணியளவில் அம்பேத்கர் நகரில் உள்ள சஜ்ஜாப்பூர் வட்டாரத்தில் அத்தியாவசிய வீட்டு பொருட்களை வாங்குவதற்காக சென்றதாக […]
உபி : ரேஷன் பொருட்களை விநியோகிக்க சென்றவர், பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்!
உத்திர பிரதேசத்தின் ஷாம்லி மாவட்ட ரேஷன் கடையில் பணிபுரியும் ஒருவன், 30 வயதான திருமணமான பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதை, கடந்த புதன் கிழமையன்று உபி பொலிஸார் உறுதிப்படுத்தினர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். அதில் தான் ரேஷன் கடைக்கு பொருட்களை வாங்க சென்றதாகவும், அப்போது ரேஷன் கடையில் இருந்தவர் நான் வீட்டிற்கே வந்து உங்களுக்கு பொருட்களை தருகிறேன் நீங்கள் வீட்டிற்கு செல்லுங்கள் என கூறியதாகவும். பிறகு வீட்டிற்கு வந்த ரேஷன் கடை ஊழியர் […]
பாசிசத்தை தோலுரிக்கும் பிரபல ‘தி வயர்’ ஊடகத்தின் ஸ்தாபகர் மீது யோகி அரசு எப்.ஐ.ஆர்; 3,500க்கும் அதிகமான பிரபலங்கள் எதிர்ப்பு !
பொதுவாக பெரும்பாலான ஊடகங்கள் பாஜகவுக்கு சாதகமான செய்திகளை பிரசுரிக்கும் நிலையில், அதற்கு மாற்றமாக ஒரு சில குறிப்பிடத்தக்க ஊடகங்களே பாசிசத்திற்கு எதிராக பணிகள் தொய்வின்றி மிகவும் சிறப்பான முறையில் செய்தி வெளியிட்டு வருகின்றன, அதில் ஒரு இணைய தள ஊடகம் தான் தி வயர். இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தை ஆளும் கோவில் தலைமை பூசாரியான யோகி ஆதித்யநாதின் அரசாங்க காவல்துறை (எனும் அஜய் பிஷ்த் சிங்) தி வயர் ஊடகத்தின் ஸ்தாபகரான சித்தார்த் வரதராஜன் மீது கிரிமினல் […]
உபி: ‘முஸ்லிம் என்பதால் ஏசிபேசி, காய்கறிகளை விற்க அனுமதிப்பதில்லை’; தொடரும் அவலம் !
முஸ்லிம் என்ற காரணத்தால் நிந்தனை செய்யப்பட்டதாகவும் காய்கறிகளை விற்க தடை செய்யப்பட்டதாகவும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் மகொபா மாவட்டத்தைச் சேர்ந்த 5 காய்கறி வியாபாரிகள், மாவட்ட நிர்வாகத்திடம் எழுத்து வடிவிலான புகார் அளித்துள்ளனர். அவர்களில் ஒரு வியாபாரி கூறுகையில் “நீங்கள் தப்லீக் ஜமாத்தை சேர்ந்தவர்கள் . நீங்கள் குரோனோ வைரஸை பரப்ப வந்துள்ளீர்கள்” என கூறியதாக தெரிவித்தார். கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி கிராமங்களுக்குச் சென்று காய்கறிகளை விற்பனை செய்ததாகவும், அப்போது மக்கள் முண்டியடித்துக்கொண்டு காய்கறிகளை வாங்கியதாகவும், திடீரென […]