ஹைதராபாத்: ராய்துர்காமில் உள்ள பழமையான குதுப் ஷாஹி மசூதியின் கூட்டுக் கணக்கெடுப்பு, தெலுங்கானா மாநில வக்ஃப் வாரியம் மற்றும் ரங்கா ரெட்டி மாவட்ட அதிகாரிகளால் புதன்கிழமை மஸ்ஜித் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் AIMIM எம்எல்ஏ கவுசர் மொகிதீன் முன்னிலையில் நடைபெற்றது. ஆவணங்களை சரிபார்த்த பிறகு, சர்ச்சைக்குரிய சர்வே எண் 82 மசூதிக்கு சொந்தமானது என்பது உறுதி செய்யப்பட்டது. பள்ளிவாசல் வளாகத்தில் இந்து தெய்வம்: அதனுடன், குதுப் ஷாஹி மசூதியின் எல்லைச் சுவரைப் புனரமைப்பதற்காக ரூ. 5 லட்சம் […]
Telangana
தெலுங்கானா: பாஜக எம்எல்ஏ டி.ராஜா நபிகளார் குறித்து இழிவாக பேசிய நிலையில், வெறுப்புப் பேச்சுக்களை நாங்கள் ஆதரிப்பதில்லை என மாநில பாஜக விளக்கம் !
ஹைதராபாத்: நபிகள் நாயகம் குறித்து பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏ ராஜா சிங் கூறிய இழிவான கருத்துக்களில் இருந்து தெலுங்கானா மாநில பாஜக விலகியுள்ளது. “எங்கள் கட்சி அனைத்து மதங்களையும் மதிக்கிறது, இதற்கு மாறாக யாரும் பேசியிருந்தால், நாங்கள் அதைக் கவனிப்போம்” என்று பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் கிருஷ்ண சாகர் ராவ் தெரிவித்துள்ளார். கோஷாமஹாலைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ஜெய் ஸ்ரீ ராம் சேனலில் யூடியூப்பில், திங்கள்கிழமை இரவு வெளியிட்ட காணொளியில் நபிகளார் குறித்து இழிவான […]
தெலங்கானா: நபிகளாரை இழிவுபடுத்தி பேசிய பாஜக எம்.எல்.எ, டி.ராஜா கைது !
ஹைதராபாத் : முகமது நபியை அவதூறாகப் பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே, தொடர் வெறுப்பு பேச்சுகளுக்கு பெயர்போன பாஜக எம்எல்ஏ ராஜா சிங்கை ஐதராபாத் போலீஸார் சற்று முன் கைது செய்தனர். நபிகளாரை இழிவாக பேசியதற்காக பாஜக எம்எல்ஏ ராஜா சிங்கிற்கு எதிராக ஹைதராபாத்தில் போராட்டங்கள் வெடித்தன, மேலும் அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. உள்ளூர் காவல்துறையினர் மற்றும் கமிஷனர் அதிரடிப்படை குழு மங்கள்ஹாட்டில் உள்ள எம்.எல்.ஏ […]
தெலுங்கானா: நபிகளாரை இழிவுபடுத்தும் வகையில் பேசிய பாஜக எம்.எல்.ஏ. ராஜா; போராட்டங்கள் வெடித்தன, போலீசார் குவிப்பு !
ஹைதராபாத்: கோஷாமஹால் பாஜக எம்எல்ஏ ராஜா சிங், நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் வீடியோவை வெளியிட்டதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை நள்ளிரவிலும், பின்னர் செவ்வாய்கிழமை காலையிலும் நகர காவல் ஆணையர் சிவி ஆனந்த் அலுவலகம் முன்பும் நகரின் பிற பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்தன. நகைச்சுவை என விளக்கம் : பிரச்னை பெரிதானதும் பாஜக எம்எல்ஏ ராஜா சிங், தனது பேச்சை “நகைச்சுவை” என்று என விளக்கம் அளித்துள்ளார். நகைச்சுவையாளர் முனாவர் ஃபரூக்கியின் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்ற இரண்டு நாட்களுக்குப் […]
பாஜக வின் தமிழக தேர்தல் அறிக்கையை தெலுங்கானா விவசாயிகள் எரித்து போராட்டம் !
தெலுங்கானா மாநிலத்தில் மஞ்சள் வாரியம் அமைக்க மத்திய பாஜக அரசு திட்டவட்டமாக நிராகரித்துள்ள நிலையில் தேர்தல் நடக்கவுள்ள தமிழ் நாட்டில் மஞ்சள் வாரியம் அமைப்போம் என பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதால், தெலுங்கானாவின் மஞ்சள் விவசாயிகள் கடும் கோபத்தில் உள்ளனர். நிஜாமாபாத் மாவட்டத்தின் ஆர்மூர் நகரில், மஞ்சள் விவசாயிகள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏப்ரல் 6 ம் தேதி நடைபெறவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையின் நகல்களை அவர்கள் எரித்தனர்.பாஜக வின் நிஜாமாபாத் மக்களவை […]
தெலுங்கானா கலவரம்: 150 இந்து வாகினி அமைப்பினர் கைது; பாஜக எம்பி கைதுக்கு கண்டனம் – மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என மிரட்டல் !
தெலுங்கானா: கடந்த மார்ச் 7 ஆம் தேதி பைன்சாவில் நடந்த இனக் கலவரத்தைத் தூண்டியது வலதுசாரி அமைப்பான இந்து வாகினி என்று தெலுங்கானா மாநில காவல்துறை (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது. இத்தீவிர இந்துத்துவா அமைப்பின் உறுப்பினர்களான தோட்டா மகேஷ் மற்றும் டட்டு படேல் ஆகிய இருவரால் கலவரம் தொடங்கி வைக்கப்பட்டதாக தெரிகிறது. மார்ச் 7 ம் தேதி பைன்சா நகரில் வன்முறை வெடித்தது, இதில் மூன்று காவல்துறை அதிகாரிகள் உட்பட 12 பேர் காயமடைந்தனர். நான்கு வீடுகள், 13 […]
தெலுங்கானா: பழங்குடியின கர்ப்பிணியை மருத்துவமனையில் சேர்க்க காடுகளின் வழியே 70 கி.மீ பயணித்த மருத்துவர் முஹம்மது முக்ரம் !
தெலுங்கானாவில் பிரசவ வலியில் துடித்த பழங்குடியின கர்ப்பிணியை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக காடுகளின் வழியே 70 கி.மீ காரில் கொண்டு சென்ற மருத்துவர். முஹம்மது முக்ரம் ஒரு மனிதநேயமிக்க மருத்துவர். இவர் பிரசவ நேரத்தை நெருங்கிய ஒரு பழங்குடியின கர்ப்பிணியை , ஒரு ஆஷா(ASHA) பணியாளரின் உதவியோடு தனது காரில் ஏற்றி காடுகளின் வழியாக கொண்டு சென்று உரிய மருத்துவமனையில் சேர்த்து பிரசவம் நடக்க தக்க தருணத்தில் உதவியுள்ளார். அதிகப்படியான கொரோனா தொற்று நோயாளிகளைக் கையாளுவதில் பெரும் சிரமத்தை […]
தெலுங்கானா: கோவில் பூசாரி மற்றும் ஊழியர்களுக்கு உதவிய இஸ்லாமியர்கள் !
ஒரு புறம் பாசிச பயங்கரவாதிகளும், மோடியாக்களும் முஸ்லிம்கள் கொரோனா பரப்புவதாக பொய்யான மத வெறுப்பு பிரச்சாரத்தை செய்து வந்தாலும், பாதிப்புக்கு உள்ளாக்கப்படும் முஸ்லீம் சமூகத்தை சேர்ந்தவர்கள் சேவை செய்வதில் இருந்து ஒருபோதும் பின்வாங்குவதாக தெரியவில்லை, அதற்கு காரணம் சராசரி இந்து மக்கள் வேறு, பாசிச பயங்கரவாதிகள் வேறு என்று அவர்கள் அறிந்து வைத்துள்ளது தான். அந்த வகையில் தெலுங்கானா மாநிலம், கோத்தகுடெம் பிரிவு ஜமாத் இ இஸ்லாமி ஹிந்த் (JIH) இயக்கத்தை சேர்ந்தவர்கள் அப்பகுதியில் உள்ள பஜன் […]
ஹைதிராபாத்: அக்கம்பக்கத்தினரால் கைடவிடப்பட்ட ஏழை இந்து; இறுதி சடங்கு மற்றும் உணவு ஏற்பாடு செய்த முஸ்லீம்கள்…
ஹைதிராபாத்: ஐந்து முஸ்லீம் நண்பர்கள் ஒன்றிணைந்து காசநோயால் இறந்த இந்து ஆட்டோ டிரைவர் ஒருவரின் இறுதி சடங்குகளை மேற்கொண்டனர். இறந்தவரின் அக்கம்பக்கத்து வீட்டார் இது கோவிட் -19 மரணம் என்று அஞ்சினர். கைராதாபாத்தைச் சேர்ந்த வேணு முதிராஜ் (50) ஏப்ரல் 16 ஆம் தேதி OGH மருத்துவமனையில் இறந்தார், அவரது இறுதிச் சடங்கிற்காக மறுநாள் அவரது குடும்பத்தினர் உடலை வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளனர் எனினும் அக்கம்பக்கத்து வீட்டார் எந்த உதவியும் செய்ய மறுத்துள்ளனர், எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முதிராஜ் […]
வாகன ஓட்டிகளை சோதனையிட ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களுக்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை- தெலுங்கானா கமிஷ்னர் அறிவிப்பு ..
சோதனைசாவடிகளில் சோதனை மேற்கொள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு எந்த வித அனுமதியும் வழங்கப்பட வில்லை என தெலுங்கானா காவல்துறை தெரிவித்துள்ளது. ஹைதராபாத்தின் புறநகர் நெடுஞ்சாலையில் ஆர்.எஸ்.எஸ் சீருடையில் சிலர் லத்திகளை கொண்டு நிற்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது. “ஆர்.எஸ்.எஸ் தன்னார்வலர்கள் தெலுங்கானாவின் யாதத்ரி புவனகிரி மாவட்ட சோதனைச் சாவடியில் தினமும் 12 மணி நேரம் காவல் துறைக்கு உதவுகிறார்கள்.” என்று செய்தியுடன் @friendsofrss என்ற கணக்கில் இருந்து இந்த புகைப்படங்கள் முதலில் ட்வீட் செய்யப்பட்டது. இந்த […]
கேரளாவை போல தெலுங்கானாவிலும் என்.பி.ஆருக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் – மாநில காங்கிரஸ் கோரிக்கை ..
கேரள அரசு மற்றும் வேறு சில மாநிலங்களின் நடவடிக்கையை பின்பற்றி தெலுங்கானா மாநிலத்தில் தேசிய மக்கள் தொகை பதிவு (என்.பி.ஆர்) தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்குமாறு காங்கிரஸ் தெலுங்கானா பிரிவுத் தலைவரும் மக்களவை உறுப்பினருமான என் உத்தம்குமார் ரெட்டி ஞாயிற்றுக்கிழமை முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவை கேட்டுக்கொண்டுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ), என்.பி.ஆர் மற்றும் குடிமக்களின் தேசிய பதிவு (என்.ஆர்.சி) ஆகியவற்றிற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்ற மாநில அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கையை அவர் வரவேற்றார். […]
‘என்னிடமே பிறப்பு சான்றிதழ் இல்லை, என் அப்பாவிடம் எப்படி இருக்கும்?’ தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ..
‘என்னிடமே பிறப்பு சான்றிதழ் இல்லை. என் அப்பாவிடம் எப்படி இருக்கும்?’ என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சட்டசபையில் கூறி இருக்கிறார். ‘நாங்கள் நிலவுடமைக் குடும்பம்தான். ஆனால் ஒரு கிராமத்து வீட்டில்தான் நான் பிறந்தேன். ஊர்ப்பெரியவர் ஒருத்தர் “ஜென்ம நாமா” என்று எழுதிக் கொடுத்தார். அதில் அரசு சீல் எல்லாம் எதுவும் இல்லை. சும்மா ஒரு காகிதம்தான். எனக்கே இப்படி இருக்கும் பொழுது கிராமத்தில் வசிக்கும் தலித், பழங்குடி மற்றும் ஏழைகளை எப்படிப் போய் ஆவணம் கேட்பேன்?‘ […]
ஹைதிராபாத்: குடியுரிமை நிரூபிக்குமாறு ஆதார் ஆணையத்தில் இருந்து பலருக்கு நோட்டீஸ்..
ஹைதராபாத்தில் வசிக்கும் சத்தார் கானுக்கு கடந்த பிப்ரவரி 3 ம் தேதி ஆதார் ஆணையம் (யுஐடிஏஐ-இந்திய தனித்துவ அடையாள ஆணையம்) ஒரு கடிதம் அனுப்பியுள்ளது, அதில் அவர் ஒரு இந்திய குடிமகனா என்று கேள்வி எழுப்பட்டுள்ளது. மேலும் சத்தார் பொய் பித்தலாட்டங்களின் மூலம் ஆதார் அட்டையைப் பெற்றதாகவும், பொய்யான கூற்றுக்கள் மற்றும் பொய்யான ஆவணங்களை சமர்ப்பித்ததாகவும் யுஐடிஏஐ அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் சத்தார் ஒரு இந்திய நாட்டவர் அல்ல என்று யார் புகார் அளித்தது என்ற […]
தெலுங்கானா: பாஜகவும் காங்கிரஸும் கூட்டணி – மக்கள் அதிர்ச்சி !
ஹைதிராபாத்: மணிகொண்டா நகராட்சியில் டி.ஆர்.எஸ் வெற்றி பெறுவதை தடுக்க பாஜகவும் காங்கிரசும் கைகோர்த்துள்ளன. மொத்தமுள்ள 20 நகராட்சி வார்டுகளில், காங்கிரஸ் எட்டு, பாஜக ஆறு, டிஆர்எஸ் ஐந்து, சுயேட்சை வேட்பாளர் ஒன்று என வெற்றி பெற்றுள்ளனர். பாஜக-காங்கிரஸ் கூட்டணி மாநில அரசியல் வட்டாரங்களில் பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது. மணிகொண்டா நகராட்சிக்கான காங்கிரஸ் பாஜக கூட்டணியின் படி தலைவர் பதவி காங்கிரசுக்கும், துணை தலைவர் பதவி பாஜக வுக்கு என இருண்டு கட்சிகளும் சமரசமாகி உள்ளன. அமங்கலில் பாஜக […]
Swiggy : முஸ்லிம் டெலிவரி பாயா ? உணவை பெற்று கொள்ள முடியாது!
ஹைதராபாத்: அஜய் குமார் என்பவர் உணவு விநியோக தளமான ஸ்விக்கியில் (Swiggy) அசைவ உணவு(Chicken 65) ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். உணவை கொண்டு வந்து கொடுப்பவர் முஸ்லிம் (டெலிவரி பாய் ) என்று அறிந்து கொண்ட அவர், உணவை பெற்று கொள்ள மறுத்துள்ளார். அலியாபாத்தைச் சேர்ந்த அஜய் குமார், ஃபாலக்னுமாவில் உள்ள கிராண்ட் பவர்ச்சி உணவகத்தில் இருந்து ஸ்விக்கி மூலம் சிக்கன் -65 ஆர்டர் செய்துள்ளார். அத்துடன் “உணவில் காரம் கம்மியாக இருக்கனும்.. உணவை ஒரு இந்துவிடம் மட்டுமே கொடுத்து […]