திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு மீட்டர்கேஜ் காலகட்டத்திலிருந்து இயக்கப்பட்டு வரும் (திருநெல்வேலி – சென்னை எழும்பூர்) நெல்லை விரைவு ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் எண்ணிக்கையை ரயில்வே நிர்வாகம் கணிசமான அளவில் குறைத்துள்ளது. இவ்வாறு குறைக்கப்பட்ட முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பாதி பெட்டிகள் இந்திய அஞ்சல் துறை ஆர்எம்எஸ் சேவைக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் நெல்லை விரைவு ரயிலில் முன்பதிவு செய்யப்படாமல் பயணிக்கும் ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே அனைத்து முக்கிய ரயில்களும் 24 […]
Tamil Nadu
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்திற்கு அருணா ஜெகதீசன் ஆணையம் பாராட்டு!
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பொதுமக்களின் நலனை விரும்பி சேவையாற்றிய தமுமுகவிற்கு பாராட்டு துன்பத்தைப் பொருட்படுத்தாமல் சாதி, இனம், சமூகம் அல்லது மதம் ஆகியவற்றைப் பாராமல் மனித நேயத்தைக் கருத்தில் கொண்டு அவர்கள் (TMMK) செய்த விலைமதிப்பற்ற சேவை ஆகும். எந்தப் பக்கமிருந்தும் உதவி வருவதற்குரிய அறிகுறிகள் எதுவும் இல்லா நிலையில் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் அரசு இயந்திரம் முற்றிலும் வெறும் பார்வையாளராக இருந்த நேரத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் […]
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரை..
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. ஆணையத்தின் பரிந்துரைகளை முழுமையாக ஏற்றது ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது, மாவட்ட ஆட்சியராக இருந்தவர் மீது நடவடிக்கை எடுக்க ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. 17 காவல்துறையினர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க விசாரணை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. மேலும் இறந்துபோன ஜஸ்டினின் உயிரிழப்பை, துப்பாக்கிசூட்டில் உயிரிழந்த 13 நபர்களுக்கு […]
பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு!
தமிழகத்தில் 1-5ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 12ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சி அக்டோபர் 10 முதல் 12 வரை நடப்பதால் விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அக்டோபர் 6 முதல் 8 வரை எண்ணும் எழுத்தும் பயிற்சி என அறிவிக்கப்பட்டு அக்டோபர் 9 வரை விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 1 […]
ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு தடைக்கோரி விசிக தலைவர் திருமாவளவன் மனு!
ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் : திருமாவளவன் மனு “மத நல்லிணக்கத்தை குலைத்து, பிரித்தாளும் கொள்கையை பின்பற்றுவது ஆர்எஸ்எஸ். அதை சேர்ந்த கோட்சே, மகாத்மா காந்தியை கொலை செய்த போது இனிப்பு விநியோகித்து கொண்டாடியது. பாஜக விளம்பரத்துக்காக தங்கள் வீடுகளின் முன் குண்டுகளை வீசி வரும் சம்பவங்கள் நடைபெறும் சூழலில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கினால் அது பொதுமக்கள் நடமாட்டத்திற்கு ஆபத்தாக முடியும். மேலும் நீதிமன்ற நிபந்தனைகளை பின்பற்றாமல் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ் திட்டம்” என […]
மின் கட்டணத்தை உயர்த்த நீதிமன்றம் இடைக்கால தடை!
தமிழகத்தில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினர் நியமிக்கப்படும் வரை, மின் கட்டண உயர்வு குறித்த இறுதி உத்தரவு பிறப்பிக்க, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்திள்ளது. இந்த தடை உத்தரவு சட்டத்துறை உறுப்பினர் நியமிக்கும் வரை தொடரும். அதே நேரத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தலாம். மனுதார்கள் தங்களின் ஆட்சேபனைகளை ஒழுங்குமுறை ஆணையத்திடம் தெரிவிக்கலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..
பேருந்துகளில் பெண் பயணிகளை முறைத்துப் பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் ஆண்களை நடத்துநர்கள் இறக்கி விடலாம் என்று மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பேருந்துகளில் நாள்தோறும் லட்சக்கணக்கான பெண்கள் பயணித்து வருகின்றனர். இந்த பயணத்தின்போது, சக ஆண் பயணிகளால் பெண்களுக்கு பல்வேறு வகையில் இடையூறுகள் அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்நிலையில், தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில், பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காக திருத்தம் செய்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அரசுப் பேருந்துகளில் […]
ஓபிஎஸ் அழைப்பை நிராகரித்தார் இபிஎஸ்..
ஒன்றிணைந்து செயல்பட ஓபிஎஸ் விடுத்த அழைப்பை நிராகரித்தார் எடப்பாடி பழனிசாமி. உழைப்பே இல்லாமல் தனக்கும், தன் மகனுக்கும் பதவி மட்டுமே வேண்டும் என்றால் எப்படி? கொஞ்சமாவது கட்சிக்காக உழைக்க வேண்டாமா? அநாகரிகமாய் நடந்த ஓபிஎஸ் உடன் எப்படி ஒத்துப்போக முடியும்? எப்படியாவது பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி அழைப்பு விடுப்பவர்தான் பன்னீர்செல்வம் என ஓ.பி.எஸ்-க்கு எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும்: ஓபிஎஸ் பேட்டி
அதிமுகவுக்குள் எழுந்த பிளவு தான் திமுக ஆட்சிக்கு வர காரணம், இன்றைக்கு அதே சூழல் தான் ஏற்பட்டுள்ளது; இன்றைக்கு அசாதாரண சூழல் அதிமுகவில் ஏற்பட்டுள்ளது, அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதே எண்ணம். “மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் பொறுப்பை ஏற்க வேண்டும், அதற்கு ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு. இதற்கு முன் ஏற்பட்ட அனைத்து கசப்புகளையும் மறந்து விடலாம், அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்; ஒன்றுபட்டு ஜனநாயக ரீதியில் தேர்தலை எதிர்கொண்டால் அதிமுகவை […]
இறைச்சி கடை வைக்க இந்து முன்னணியினர் எதிர்ப்பு; கடையை மூடிய மாவட்ட நிர்வாகம் !
சேலம், அன்னதானப்பட்டி, சண்முகா நகரில் பாதுஷா மைதீன், 28, என்பவர் மாலை நேரத்தில் மாட்டிறைச்சி சில்லி கடை நடத்தி வந்தார். வட மாநிலங்களை போல தமிழ் நாட்டில் மாட்டிறைச்சி விற்க எந்த தடையுமில்லை. இந்து மக்களும் இவரது கடைக்கு வாடிக்கையாளர்களாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. எனினும் இந்து முன்னணியினர் அருகில் முனியப்பன் கோவில் உள்ளதாக கூறி அங்கு வந்து எதிர்ப்பு தெரிவித்து பிரச்சனை செய்ததால் பாதுஷாவின் கடை தற்போது மூடப்பட்டு விட்டது. 28-07-22 அன்று இரவு அசம்பாவிதத்தை […]
கோவை: ஈஷா அறக்கட்டளையை அரசுடைமையாக்க ஆர்ப்பாட்டம் !
ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையத்தை அரசுடைமையாக்க வேண்டும் என கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகம், தெய்வத் தமிழ் பேரவை இயக்கத்தினர் மற்றும் பொது மக்கள் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஈஷாவிலிருந்து வெளியேறும் கழிவுநீரை விளை நிலத்தில் வெளியேற்றக் கூடாது, பழங்குடியினர் நில அபகரிப்பதற்கு எதிர்ப்பு , பெண்களைத் துறவிகள் ஆக்கக் கூடாது என்ற கருத்துடைய பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில், ஈஷாவில் […]
திருச்சி:மாணவிகள் முன்பு நிர்வாணமாக நின்ற இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது !
திருச்சி: திருச்சி பொன்மலையில் தனியார் பள்ளியில் மாணவிகள் முன்பாக ஆடையின்றி நிர்வாணமாக நின்றதற்காக இந்து மக்கள் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி பொன்மலையில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றின் மாணவிகள் முன்பாக நிர்வாணமாக நின்றதாக ராஜ்குமார் என்பவர் குறித்து மாணவிகளின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து பொன்மலை போலீசாரிடம் பெற்றோர் புகார் தெரிவித்தனர். இப்புகாரின் பேரில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். மேலும் கைது செய்யப்பட்ட ராஜ்குமார் இந்து […]
கல்வித்துறையில் காவி சித்தாந்தம் திணிப்பு .. வைகோ கடும் கண்டனம்!
இந்துத்துவ சனாதனக் கோட்பாட்டிற்கு ஏற்ற வகையில் இளங்கலை வரலாறு பட்டப் படிப்புக்கான பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது என மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார் . இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவை : கொரோனா பெருந்தொற்று நாட்டை துயரப் படுகுழியில் தள்ளி இருக்கும் சூழலில், மத்திய பா.ஜ.க. அரசு, கல்வித் துறையை காவிமயமாக்கும் சதிச் செயலை அரங்கேற்றி இருக்கிறது. கடந்த 2020-21 கல்வி ஆண்டில் கொரோனா பாதிப்பில் பள்ளிகள் மூடப்பட்டன. இணையம் […]
கோவை: பேருந்து கண்ணாடியை கல்வீசி உடைத்த இந்து முன்னணியினர் கைது!
கோவையில் கடந்த 18ம் தேதி செல்வபுரம் பகுதியில் தனியார் பேருந்து சென்று கொண்டிருந்த சமயத்தில் அதை இரண்டு பேர் மறைந்து நின்று கற்களை கொண்டு தாக்கினர். இதில் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்ட ஒரு சிறிய கோயிலை இடிக்க சம்பவ இடத்திற்கு வந்த கோயம்புத்தூர் கார்ப்பரேஷன் அதிகாரிகளுக்கு எதிராக இந்து முன்னானியைச் சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் செல்வபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காவல்துறையினர் போராட்டக்காரர்களை அகற்றி போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். அப்போது […]
கோவை: போலீசார் வாகனத்தை சேதப்படுத்தியதால் இந்து முன்னணி உறுப்பினர் கைது!
கோவை: போலீஸ் வாகனத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் செல்வபுரம் போலீசார் ஞாயிற்றுக்கிழமை இந்து முன்னணி சேர்ந்த உறுப்பினர் ஒருவரை கைது செய்தனர். இது குறித்து தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்ட ஒரு சிறிய கோயிலை இடிக்க சம்பவ இடத்திற்கு வந்த கோயம்புத்தூர் கார்ப்பரேஷன் அதிகாரிகளுக்கு எதிராக இந்து முன்னானியைச் சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் செல்வபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. காவல்துறையினர் போராட்டக்காரர்களை அகற்றி போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். […]