மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள முர்பாத்தைச் சேர்ந்த பாஜக கூட்டுரிமை குழு உறுப்பினர் (கார்ப்பரேட்டர்) நிதின் தெல்வானே, பெண் உறுப்பினர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தமையால் கைது செய்யப்பட்டதாக மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் வியாழக்கிழமை தெரிவித்தார். நள்ளிரவு 12.40 மணியளவில் ஒரு பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதற்காக பாஜக தலைவர் டெல்வானே கைது செய்யப்பட்டார். “ஐபிசி பிரிவு 452 (வீட்டு மீறல்), 354 (துன்புறுத்தல்), 354 ஏ […]
States News
மே.வங்கம்: மோடியின் பேரணியில் கலந்து கொள்வதற்கு 3 ரயில்களை 60 லச்சத்திற்கு புக்கிங் செய்த பாஜக !
இன்று நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடியின் (படைப்பிரிவு-Brigade Rally) பேரணியில் கலந்து கொள்வதற்காக மேற்கு வங்கத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்களை கொண்டு வந்து சேர்த்திட மூன்று யில்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அலிபூர்துர், மால்டா மற்றும் ஹரிச்சந்திரபூரிலிருந்து முன்பதிவு செய்யப்பட்ட இந்த மூன்று ரயில்களை வாடகைக்கு எடுக்க பாஜக ரூ .60 லட்சத்திற்கு மேல் செலவிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அலிபுர்துர் மற்றும் மால்டாவிலிருந்து சிறப்பு […]
மே.வங்கம்: நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பாஜக தொண்டர்கள் காயம்; ஒருவர் பலி – போலீசார் தகவல் !
மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸில் உள்ள கோசாபாவில் வெள்ளிக்கிழமை இரவு நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் ஒரு பாஜக உறுப்பினர் உயிர் இழந்தார், மேலும் 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் இருவர் மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக திடீரென வெடித்ததில் பாஜக தொண்டர்கள் காயம் அடைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் தெற்கு 24 பர்கானாவில் உள்ள கேனிங் […]
சிமி இயக்கத்தவர் என கூறி கைது செய்யப்பட்ட 127 பேறும் 20 ஆண்டுகளுக்கு பிறகு குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் தீர்ப்பு !
குஜராத், சூரத் : கடந்த 2001 ஆம் ஆண்டு, ராஜேஸ்ரீ ஹாலில் இருந்து சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (யுஏபிஏ) பல்வேறு பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்ட 127 குற்றவாளிகளும், குற்றமற்றவர்கள் என இன்று (சனிக்கிழமை) நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனினும் இவர்கள் கைது செய்யப்படும் போது தொடர் செய்திகளாக்கி டி.ஆர்.பி ரேட்டிங்கை அதிகரித்து கொண்ட தொலைக்காட்சி ஊடகங்கள் யாவுமே, கைது செய்யப்பட்டவர்கள் நிரபராதிகள் எனபதை ஏனோ செய்தி ஆக்காமல் உள்ளனர். ஐந்து பேர் மரணம்: கைது செய்யப்பட்ட […]
பாஜக தலைவருக்கு சொந்தமான கட்டிடத்தில் 1.29 லச்சம் போதை மாத்திரை கண்டெடுப்பு !
லூதியானாவின் சவானி மொஹல்லாவில் உள்ள உள்ளூர் பாஜக தலைவருக்கு சொந்தமான கட்டிடத்தில் திங்கள்கிழமை நள்ளிரவில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில், 1.29 லட்சம் போதை மாத்திரைகள் (ஓபியாய்டு மருந்துகள்) பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டம், 1985 இன் கீழ் சதீஷ் நகர், ஹேமந்த், அனூப் குமார் மற்றும் ராஜீந்தர் ஆகிய நான்கு நபர்களுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். நக்கர் ஒரு உள்ளூர் பாஜக தலைவர், முன்னாள் கவுன்சிலர். […]
டெல்லி மாநகராட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்தது பாஜக; ஆம் ஆத்மீ, காங்கிரஸ் கட்சிகள் வெற்றி!
புதன்கிழமையன்று ஐந்து இடங்களில் டெல்லி மாநகராட்சி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் கல்யாணபுரி, ரோகிணி-சி, ஷாலிமார் பாக் (வடக்கு), மற்றும் திரிலோக்புரி உள்ளிட்ட நான்கு இடங்களை ஆம் ஆத்மி கட்சி வென்றது. மறுபுறம், காங்கிரஸ் சவுகான் பங்கர் வார்டை வென்றது. பாஜக ஒரு இடத்தை கூட கைப்பற்ற முடியாமல் படுதோல்வி அடைந்தது. வடக்கு தில்லி மாநகராட்சியில் (என்.டி.எம்.சி) ரோஹினி-சி மற்றும் ஷாலிமார் பாக் (வடக்கு) ஆகிய இரண்டு வார்டுகளிலும், கிழக்கு தில்லி மாநகராட்சியில் (ஈ.டி.எம்.சி) திரிலோக்புரி, கல்யாணபுரி மற்றும் […]
குஜராத் பாஜக அரசு அம்பேத்காரை அவமதித்தமையால், போராட்டக்களத்தில் தலித் சமூகத்தார் ..
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் கடும் அட்டூழியங்களுக்கு ஆளாகி வருகின்றனர். குஜராத்தில் மட்டும் கிட்டத்தட்ட 50 லச்சம் தலித் சமூகத்தவர் வாழ்ந்து வருகின்றனர்,அவர்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில் உள்ளது. மஞ்ச் குழுத்தலைவர் (கன்வீனர்) கிரிட் ரத்தோட் தலித்துகளின் ரச்சகராக கொண்டாடப்படும் டாக்டர் பி ஆர் அம்பேத்கரின் பெயரை தேசிய தலைவர்களின் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வடோத்ரா பாரதீய ஜனதா கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள நிர்வாகத்திடம் […]
உபி : ‘குழந்தைகளை நீங்கள் பெற்றெடுத்துவிட்டு கல்வி செலவை அரசிடம் கேட்பீர்களா?’ – பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை கருத்து..
குழந்தைகளை நீங்கள் பெற்றெடுத்துவிட்டு குழந்தைகளின் கல்வி செலவுக்காக அரசாங்கத்திடம் செலவழிக்க சொல்கிறீர்களா என உபி பாஜக எம்.எல்.ஏ பேசிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. கொரோனா ஊரடங்கினால் கடுமையாக பாதிக்கப்பட்டதால் தனியார் பள்ளிகளில் கட்டணம் தள்ளுபடி செய்வதற்கு உதவிட வேண்டும் என பெண்கள் அவ்ரையா பாஜக எம்.எல்.ஏ ரமேஷ் திவாகரை அணுகியபோது தான் அவர் சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது தொகுதியில் மக்களுடன் உரையாடி கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. “பச்சே ஆப் பேடா கரோ […]
கேரளா உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவர் பாஜக வில் இணைந்தனர்..
கேரள உயர்நீதிமன்றத்தின் இரண்டு முன்னாள் நீதிபதிகள், பி.என்.ரவீந்திரன் மற்றும் வி.சிதம்பரேஷ் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தனர். நீதிபதி ரவீந்திரன் 2007 முதல் 2018 வரை கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார். நீதிபதி சிதம்பரேஷ் 2011 ல் உயர்நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்று , 2019 ஆம் ஆண்டில் ஓய்வுபெறும் வரை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார். முன்னதாக ”பிராமணர்கள் முன் ஜென்ம நல்வினையால் இரு முறை பிறப்பவர்கள்.. எப்போதும் உயர்பொறுப்பில் இருக்க வேண்டும்’‘ என கேரள […]
மணிப்பூர் பாஜக முதல்வருக்காக தலையை தரையில் வைத்து மண்டியிட்ட மாணவர்கள்; நெட்டிசன்கள் கண்டனம் !
மணிப்பூரில் நிலவும் போதை பழக்கங்கள் மற்றும் போதை வஸ்த்து வளர்ப்பதற்கு எதிரான போர்ப்பிரகடனத்தை தொடங்கி வைத்து பேசுவதற்காக ஒரு பொது நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தார் அம்மாநில பாஜக முதல்வர் பைரன் சிங். இந்நிகழ்ச்சியின் போது சிறுவர் சிறுமிகள் பலர் அவர் நடந்து வரும் சிவப்பு கம்பளத்தின் இருமருகிலும் நின்று வாழ்த்து தெரிவிக்க நிறுத்தப்பட்டிருந்தனர். அவர் நிகழ்ச்சி நடக்கும் மேடைக்கு செல்லும் வழியில் நிறுத்தப்பட்டிருந்த சிறுவர் சிறுமிகள் அவர் வந்தவுடன் தரையில் முட்டிபோட்டு, அடிமைகளை போல தலையை மண்ணில் கவிழ்த்தி […]
உபி: நீதிமன்ற உத்தரவிற்கு பின்னும் முஸ்லிம் பெண்ணை பெற்றோரிடம் அனுப்ப மறுக்கும் அவலம்!
உபி, ஃபிரோஸாபாத் நகரை சேர்ந்தவர் 20 வயதுப்பெண் அஸ்ரா, இவர் தருண் என்கிற இந்து இளைஞனோடு காதல் வயப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் அஸ்ராவை திருமணம் செய்து கொண்டதாக தருண் கூறி வருகிறார். தருணின் தொடர் சித்திரவதைகளை தாங்கி கொள்ள முடியாமல் பெற்றோரிடம் செல்ல விரும்பி உள்ளார் அஸ்ரா, எனினும் தருண் அஸ்ராவை விட மறுத்து பிரச்சனை செய்யவே. பெண்ணின் குடும்பத்தார் மாயின்பூர் நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்றத்தில் இருதரப்பிலும் விசாரணை மேற்கொண்ட போது அஸ்ரா ஒரு மேஜர் எனவும், […]
உபி : மதரசா சென்று வீடு திரும்பும் வழியில் கடத்தப்பட்ட இரு சிறுமிகளில் ஒருவர் கொலை, தொடரும் கொடூரம்!..
பாஜக ஆளும் உபியில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. உன்னாவ் கொடூரம் நடைபெற்ற சில தினங்களில் அடுத்துஅடுத்து பாலியல் கொடூரங்கள் நடந்த வண்ணமே உள்ளன. அந்த வரிசையில் மதரசா விற்கு சென்று வீடு திரும்பி கொண்டு இருந்த இரு சிறுமிகள் கடத்தப்பட்டு அதில் ஒருவர் கொல்லப்பட்ட சமபவம் அரங்கேறி உள்ளது. ஐந்து மற்றும் ஏழு வயதுடைய இரண்டு சிறுமிகள் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டதாகவும், அதில் 5 வயதுடைய சிறுமி மேற்கு உத்தரப்பிரதேசத்தின் […]
‘மோடி ஒரு கலவரகாரர்,ட்ரம்பை விட மோசமான நிலையை அடைவார்’ – மம்தா பானர்ஜி விலாசல்!
பிரதமர் நரேந்திர மோடியை “மிகப்பெரிய கலவரகாரர்” என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும்முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை விட “இன்னும் மோசமான” விதியை மோடி சந்திப்பார் எனவும் மம்தா தெரிவித்தார். ஹூக்லி மாவட்டத்தின், சஹகஞ்சில் நடந்த பேரணியில் பேசிய பானர்ஜி, மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நாடு முழுவதும் பொய்களையும் வெறுப்பையும் பரப்புகிறார்கள் என்று கூறினார். “அவர் டி.எம்.சியை ஒரு ‘தோலாபாஜ்’ (மிரட்டி பணம் பறிக்கும்) கட்சி என்று வர்ணிக்கிறார், […]
பதஞ்சலியின் கொரோனா மருந்தை மஹாராஷ்டிராவில் விற்க அனுமதிக்க மாட்டோம் – மாநில உள்துறை அமைச்சர் அதிரடி !
கொரோனா நோயை குணப்படுத்தும் என கூறி விற்பனை செய்யப்படும் பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் ‘கொரோனில்’ மருந்தை, உரிய சான்றிதழ் இல்லாமல் மகாராஷ்டிராவில் விற்பனை செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று அம்மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் இன்று தெரிவித்துள்ளார். கொரோனிலின் சோதனைகள் குறித்து இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) கேள்வி எழுப்பியுள்ளதாக மகாராஷ்டிரா அரசு சுட்டிக்காட்டியுள்ளது, அதே சமயத்தில் உலக சுகாதார அமைப்பும் (WHO) பதஞ்சலி ஆயுர்வேதத்தின் கூற்றுக்களை மறுத்துள்ளது. கொரோனிலின் ‘மருத்துவ பரிசோதனைகள்’ […]
‘உபரி நீரை தமிழகம் பயன்படுத்த அனுமதிக்க முடியாது’ – பாஜக முதல்வர் எடியூரப்பா அதிரடி !
தமிழகம் உபரி காவிரி நீரை பயன்படுத்த தனது அரசாங்கம் அனுமதிக்காது என்றும், கர்நாடக மாநில நலன்களைப் பாதுகாக்க வலுவான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் கூறியுள்ளார்..