உபி,கான்பூர் : வாடகை வீட்டில் தங்கி இருந்து 30 வயதான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டதாக வியாழக்கிழமை உபி பொலிஸார் தெரிவித்தனர். தேஷ் தீபக்கின் உடல் ரத்த வெள்ளத்தில் கிடந்தது, பிரஹாம் நகர் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். ஃபிரோசாபாத்தைச் சேர்ந்த கான்ஸ்டபிளான அவர், 2019 முதல் பில்ஹூரில் பணியமர்த்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். புதன்கிழமை மதியம் முதல் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்த அவரது மொபைலில் எந்த பதிலும் வரவில்லை என்று தீபக்கின் குடும்பத்தினர் […]
States News
திருச்சி:மாணவிகள் முன்பு நிர்வாணமாக நின்ற இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது !
திருச்சி: திருச்சி பொன்மலையில் தனியார் பள்ளியில் மாணவிகள் முன்பாக ஆடையின்றி நிர்வாணமாக நின்றதற்காக இந்து மக்கள் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி பொன்மலையில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றின் மாணவிகள் முன்பாக நிர்வாணமாக நின்றதாக ராஜ்குமார் என்பவர் குறித்து மாணவிகளின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து பொன்மலை போலீசாரிடம் பெற்றோர் புகார் தெரிவித்தனர். இப்புகாரின் பேரில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். மேலும் கைது செய்யப்பட்ட ராஜ்குமார் இந்து […]
தாஜ்மஹால் வளாக பள்ளிவாசலில் தொழுததற்காக 4 பேர் கைது செய்து சிறையில் அடைப்பு!
ஆக்ரா: தாஜ்மஹால் வளாகத்தில் உள்ள ஷாஹி மசூதியில் தொழுகை நடத்தியதற்காக நான்கு பேர் மே 25 புதன்கிழமை கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 153 (கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் வேண்டுமென்றே தூண்டுதல் நடவடிக்கையில் ஈடுபடுவது) இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. புதன்கிழமை மாலை 7 மணியளவில் ஷாஹி மசூதியில் அவர்கள் தொழுகை நடத்தி உள்ளனர். இதுகுறித்து மாநகர காவல் கண்காணிப்பாளர் கூறியதாவது: […]
அசாம்: மீன் வியாபாரி ஷஃபிகுல் இஸ்லாம் போலீசார் கஸ்டடியில் மரணம் !
அசாமில் மீன் வியாபாரி ஷஃபிகுல் இஸ்லாம் போலீஸ் காவலில் இறந்து 2 நாட்களுக்குப் பிறகு, போலீசார் அவரது மனைவி ரஷிதா காதுன் மற்றும் அவரது மகள் 8 ஆம் வகுப்பு மாணவியை போலீசார் கைது செய்துள்ளனர். அசாமில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. போலீசார் காவலில் வைக்கப்படிருந்த ஷஃபிகுல் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து படத்ராபா காவல் நிலையத்தை எரித்ததாகக் கூறப்படும் சைஃப்பின் மனைவி மற்றும் மகள் உட்பட குறைந்தது 6 பேர்களில் 5 பேரின் மீது யுஎபிஎ சட்டத்தின் […]
பஞ்சாப்: ‘ஒவ்வொரு சீக்கியரும் உரிமம் பெற்ற ஆயுதம் வைத்து கொள்ள வேண்டும்’
ஒவ்வொரு சீக்கியரும் உரிமம் பெற்ற நவீன ஆயுதங்களை வைத்திருக்க வேண்டும், ஏனெனில் “காலம் அப்படிதான் உள்ளது” என அகல் தக்த் ஜதேதார் கியானி ஹர்ப்ரீத் சிங், திங்கள்கிழமை, மே 23, கருத்து தெரிவித்தார். ஒரு பக்கம் அவரது கருத்து விமர்சிக்கப்ட்டாலும் மறுபுறம் நாட்டின் சிறுபான்மையினரின் நிலையைக் கருத்தில் கொண்டு தற்காப்புக்காக ஆயுதங்களை வைத்திருப்பதில் தவறில்லை என்று பல நிபுணர்களும் நியாயப்படுத்தினர். “இன்றும் கூட, குறிப்பாக சீக்கிய சிறுவர்கள் மற்றும் பெண்கள், குரு ஹர்கோவிந்த் சிங்கின் கட்டளைகளைப் பின்பற்ற […]
கியான்வாபி பள்ளிவாசல் குறித்து சமாஜ்வாதி கட்சியின் முஸ்லிம் எம்.எல் ஏக்களின் மவுனத்தை கேள்வி எழுப்பியவர் கைது !
அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM, ஒவைஸி)-ன் உத்தரபிரதேச மாநில பிரிவு செயலாளர் ஹக்கீம் அப்துல் சலாம் கான், புகழ்பெற்ற கியான்வாபி மசூதியில் “சமாஜ்வாதி கட்சியின் முஸ்லீம் எம்.எல்.ஏ.க்களின் மௌனத்தை” விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்காக உத்தரபிரதேச காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். கீர்தார்பூர் காவல் நிலையத்தில் ஹக்கீமீன் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 505ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற எந்த ஊடகத்தின் வழியாகவும் வதந்திகளை பரப்புவது, அதன் மூலம் […]
ஹரியானா : பயங்கர கோடாரி ஆயுதங்களுடன் கூடிய பிராமணர்கள் ..
ஹரியானா: ஞாயிற்றுக்கிழமை ரோஹ்தக் மாவட்டத்தில் உள்ள பஹ்ராவார் கிராமத்தில் கோடாரிகளை ஏந்தியபடி பிராமணர்கள் ஒன்று கூடினர். அப்போது கோவில், பள்ளி, கல்லூரி, மருத்துவமனை ஆகியவற்றை கட்டும் வகையில், 16 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு மீண்டும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பிராமண சமூகத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவர் ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், “பிராமணர்களின் ஐகானாக” கருதப்படும் பரசுராமின் ஆயுதமான கோடாரியுடன், பிராமண சமூகம் இந்த அளவில் பொது பலத்தை வெளிப்படுத்துவது இதுவே முதல் […]
அசாம்: பள்ளிக்கு மாட்டிறைச்சி உணவை எடுத்து சென்ற தலைமை ஆசிரியர் கைது செய்து சிறையில் அடைப்பு !
மேற்கு அசாமின் கோல்பாரா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் பள்ளிக்கு மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக அஸ்ஸாம் போலீஸார் கைது செய்தனர். பராஜக ஆளும் அசாமில் மாட்டிறைச்சிக்கு தடை இல்லை. கைது செய்யப்பட்ட ஆசிரியை தலிமா நெசா, கோல்பாரா நீதிமன்றத்தால் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. நாளிதழின் படி, நெஸ்ஸா மாவட்டத்தின் லக்கிபூர் பகுதியில் உள்ள ஹர்கசுங்கி நடுநிலை ஆங்கிலப் பள்ளியின் தலைமையாசிரியர். கடந்த வாரம் பள்ளியில் நடந்த விழா ஒன்றில் […]
2002,குஜராத் : 500 பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு சொந்தமான வழிபாட்டு தலங்கள் அழிப்பு !
கீழே வழங்கப்பட்டுள்ள கட்டுரை பரிபல வட இந்திய பத்திரிகையான மில்லி கசட்டில் வெளியான செய்தி, இது தொடர்பாக பரவலாக எந்த இந்திய ஊடகமும் இந்நாள் வரை செய்தி ஆக்கவில்லை , மூடி மறைக்கப்பட்டே உள்ளது. எனினும் இது தொடர்பாக தி கார்டியன் என்ற சர்வதேச ஊடகத்திலும் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.வரலாற்றை தமிழில் ஆவணபடுத்த இந்த மொழிபெயர்ப்பு செய்யபடுகிறது. அலகாபாத்: குஜராத்தில் கலவரம் பாதித்த பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து, அங்கு நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தை உன்னிப்பாக ஆய்வு […]
உபி: 20 நாட்கள் ஆகியும் கடத்தப்பட்ட சையதாவை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் உபி போலீஸ்.. !
உபி: கடந்த ஏப்ரல் 25 அன்று, உத்தரபிரதேசத்தின் சித்தார்த்நகரில் உள்ள எட்வாவில் ரம்ஜான் ஸஹர் உணவு உண்ணும் நேரத்தில் தனது வீட்டைச் சுற்றியுள்ள வயலுக்குச் சென்றபோது, சோனி (24) என்ற சையதா காதுன், பிரேந்திர குமார் மற்றும் அவனது நண்பர்களால் கடத்தப்பட்டதாக பெண்ணின் குடும்பத்தாருக்கு தகவல் கிடைத்துள்ளது. காலை 6 மணியளவில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் குடும்பத்தினரை போனில் அழைத்து, முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்ய வேண்டாம் என்று மிரட்டியதாகவும், சம்பவம் குறித்து கிராம மக்களுக்கு […]
உபி: சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது என கூறி கியான்வாபி பள்ளிவசாலின் ஒளு செய்யும் பகுதிக்கு செல்ல தடை விதித்தது நீதிமன்றம்!
உபி: கியான்வாபி மசூதியின் ஒரு பகுதியை சீல் வைக்குமாறு கடந்த திங்களன்று வாரணாசி நீதிமன்றம், மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. அங்கு வீடியோ சர்வேயின் போது ஒரு சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது என கூறி தற்போது அந்த பகுதிக்கு யாரும் செல்லக்கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்றம் வீடியோ சர்வே எடுக்க வேண்டுமென கட்டாயமாக்கியதை அடுத்து உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதி வளாகத்தின் மூன்று நாள் வீடியோ ஆய்வு, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஒரு நாள் […]
உத்தராகண்டில் இந்துமத ‘தரம் சன்சாத்’ நிகழ்வுகளில் தொடர் முஸ்லிம் வெறுப்பு பேச்சுக்களை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் !
பாஜக ஆளும் உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கடந்த டிசம்பர் 17 முதல் 19 வரையில் `தர்ம சன்சத்’ என்ற இந்துமத நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசப்பட்டது, அதனை தொடர்ந்து கடந்த வாரம் ரூர்கீ என்ற ஊரில் முஸ்லிம்கள் ஊரை விட்டே விரட்டி அடிக்கப்பட்டனர், அவர்களின் சொத்துக்களும் சூறையாடப்பட்டன. எனினும் இதை குறித்து எந்த ஒரு மீடியாவும் பெரிதாக செய்தி வெளியிடவில்லை. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் நாளை […]
லட்சத்தீவு :அரைக் கை சட்டையும் பாவாடையுமாக மாறும் பள்ளி சீருடை ..
லட்சத்தீவில் உள்ள மக்கள் கடந்த வாரம் புதிய பள்ளி சீருடை வழங்குவதற்கான டெண்டர் ஆவணம் சமூக ஊடகங்களில் பரவியதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். ஆவணத்தின்படி, ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டு வரையிலான பெண் மாணவர்களுக்கு, சல்வார் உடைகள் ( stitched divided skirts ) தைக்கப்பட்ட பிரிக்கப்பட்ட பாவாடைகளாகவும், முழுக் கை சட்டைகள் அரைக் கைகளாகவும் மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லட்சத்தீவில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லீம்கள், உயர் வகுப்புகளில் படிக்கும் பெண் மாணவிகள் அடக்கமாக உடை அணியப் பழகியதால் என்ன நடக்கிறது என்று […]
உபி: பாபர் பள்ளிவாசலுக்கு பிறகு மீண்டும் ஒரு பள்ளிவாசல் இடிப்பு; நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி பள்ளிவாசல் இடிப்பு !!
மாநில உயர்நீதிமன்ற உத்தரவை மீறி உத்தரபிரதேசத்தின் உள்ளூராட்சி நிர்வாகம் முஸ்லிம்களின் பழமையான பள்ளிவாசல் ஒன்றை இடித்து தரைமட்டம் ஆக்கி உள்ள சம்பவம் நாட்டில் எந்த பரபரப்பையும் ஏற்ப்படுத்த வில்லை. 1992 ஆம் ஆண்டு சட்ட விரோதமாக இந்துத்துவா வன்முறையாளர்களால் இடிக்கப்பட்ட பாபர் பள்ளிவாசல் நிகழ்வுக்கு பிறகு இது போன்ற ஒரு நிகழ்வை பாஜக மாநில அரசே முன்னின்று சட்டவிரோதமாக தற்போது அரங்கேற்றி உள்ளது. இது குறித்து நாம் செய்தி வெளியிடும் இந்த கணம் வரை இந்தியாவில் உள்ள […]
கல்வித்துறையில் காவி சித்தாந்தம் திணிப்பு .. வைகோ கடும் கண்டனம்!
இந்துத்துவ சனாதனக் கோட்பாட்டிற்கு ஏற்ற வகையில் இளங்கலை வரலாறு பட்டப் படிப்புக்கான பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது என மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார் . இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவை : கொரோனா பெருந்தொற்று நாட்டை துயரப் படுகுழியில் தள்ளி இருக்கும் சூழலில், மத்திய பா.ஜ.க. அரசு, கல்வித் துறையை காவிமயமாக்கும் சதிச் செயலை அரங்கேற்றி இருக்கிறது. கடந்த 2020-21 கல்வி ஆண்டில் கொரோனா பாதிப்பில் பள்ளிகள் மூடப்பட்டன. இணையம் […]