தில்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணமாக இருப்பது விவசாய பயிர் கழிவுகளை எரிப்பது என்று அறியப்படுகிறது. நீதிமன்றமும் சமீபத்திய தீர்ப்பின் போது இது குறித்து குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் உபி மாநில பரேலி பகுதியில் வசிக்கும் மாற்று திறனாளி இர்ஷாத் கான் என்ற முதலாம் ஆண்டு சட்ட கல்லூரியில் பயிலும் மாணவன் தனது வீட்டருகே உள்ள ஒருவர் விவசாய பயிர் கழிவுகளை (stubble burning) எரிப்பதாக தனது ட்விட்டர் கணக்கு மூலம் குற்றம் சாட்டினார். மாணவரை பாராட்டவில்லை […]
States News
‘IIT பேராசிரியர் சுதர்சன் ஒரு இந்துத்துவ வெறியர்’ – செந்தில் வாசன் !
டிவிட்டரில் #Senthil Vasan M அவர்கள் போட்ட பதிவு தமிழில்.. 1. நண்பர்களே, இதுவொரு நன்கு திட்டமிடப்பட்ட இன அழிப்பு போல தெரிகிறது. IIT பேராசிரியர் சுதர்சன் என்பவர் யார்? அவரது செயல் திட்டங்கள் என்னென்ன? என்பதை குறித்து சில தரவுகளை நான் ஆராய்ந்து வந்தேன். சந்தேகமேயில்லாமல் அவர் ஒரு இந்துத்துவ வெறியர். 2. 2006ல் இருந்து இந்த வீடியோ வெளிவந்த டிசம்பர் 2017 வரை இந்நபரின் பணிகளை நான் ஆய்வு செய்திருக்கிறேன். இவர் ஒரு தாராளவாதியாகவோ (அல்லது தனது […]
ஃபாத்திமாவிற்கு ஆதரவாக ஐஐடி மாணவி அல்பியா ஜோஸ்!
நான் ஒரு ஐஐடி மெட்ராஸின் மாணவன். எனது கல்வி வளாகம் வரு ஒரு உயரடுக்கு சாதியவாத, இனவாதம் பேசும் வன்முறைகூடம். மிக முக்கியமாக அது இஸ்லாமோபோபியாவை கடைபிடிக்கிறது. நவம்பர் 8ம்தேதி ஐஐடி மெட்ராஸில் முதலாமாண்டு எம்.ஏ மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் மாணவி ஃபாத்திமா லத்தீஃப் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். (நானும் அந்த துறையைச் சார்ந்தவன் தான்). இந்த கல்வி வளாகத்தின் அலட்சியம் குறித்தும் அதன் இயல்பான ஆதிக்க தன்மை குறித்தும் குறிப்பாக இங்குள்ள மாணவர்கள் குறித்தும் […]
சென்னை ஐஐடி மாணவி பாத்திமாவின் தாயின் குமுறல்!
எங்களுக்கு பெண் பிள்ளையை வெளியூரில் உள்ள கல்விக்கூடத்திற்கு அனுப்புவதற்கு பயமாக இருந்தது. நாட்டில் நிலவிவரும் மதவெறுப்பின் காரணமாக எனது மகளை முக்காடு(சால்)அணிவதற்கு கூட வேண்டாமென மறுத்துவிட்டோம். எங்கே முக்காடு அணிந்தால் இஸ்லாமியப் பெண் என்ற அடிப்படையில் அவள் தொல்லைகளுக்கு உட்படுவாளோ என நாங்கள் அஞ்சினோம். நாங்கள் என்ன செய்ய பெயர் ஃபாத்திமா லத்தீஃப் ஆகிவிட்டதே. எல்லா பிள்ளைகளைப் போல சாதாரணமாக உடை அணிந்துகொள் என்று வலியுறுத்தினோம். ஏனெனில் நாட்டில் நிலவும் சூழல் அப்படிப்பட்டது. முதலில் அவளுக்கு பனாரஸில் […]
காவி நிற கழிப்பறையை கோவில் என்று நினைத்து வணங்கிய மக்கள்!
உத்தரபிரதேசத்தில் மாவட்டத்தின் மவ்தஹா கிராமத்தில் கழிப்பறை கட்டிட சுவர் ஒன்றிற்கு காவி நிறம் பூசப்பட்டிருந்ததால் கோயில் என்று நினைத்து மக்கள் பூஜை செய்து வந்துள்ளனர். மூடிய கதவுகளுக்குப் பின்னால் ஒரு சிலை இருப்பதாகக் கருதி ஒரு வருடத்திற்கும் மேலாக தங்கள் பிரார்த்தனைகளைச் செய்து வந்துள்ளனர். உபி மாநிலத்தில் காணும் இடமெல்லாம் பாஜக வின் காவி நிறம் பளிச்சிடும் வண்ணம் அனைத்து முக்கிய அரசு கட்டிடங்களுக்கும், முஸ்லிம்களின் ஹஜ் வாரியம் உட்பட அனைத்திற்கும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்தியநாத் […]
போலீசாரே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் …
கடந்த நவம்பர் 2ம் தேதி டில்லியில் உள்ள டிஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே பார்க்கிங் விஷயமாக எழுந்த சச்சரவு மோதலாக வெடித்ததைத் தொடர்ந்து காவல்துறை தலைமையகத்திற்கு வெளியே (பி.எச்.கியூ) போலீசார் இன்று (5-11-19) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று (4-11-19) இது குறித்து கருத்து தெரிவித்த ஐபிஎஸ் போலீஸ் கூட்டமைப்பு சங்கம் நாடு முழுவதும் உள்ள போலீசார் வக்கீல்களால் தாக்கப்பட்ட போலீசாருடன் ஒன்றுபட்டு நிற்பதாக தெரிவித்துள்ளது. நீதிமன்ற வளாக மோதலின் போது கூடுதல் போலீஸ் கமிஷனர் […]
கைவண்டியில் சடலம் எடுத்து செல்லப்பட்ட கொடூரம்! – எஸ்டிபிஐ அமைப்பினரை அணுகிய போலீஸ்!
விழுப்புரம் அருகே உறவினா் சடலத்தை கைவண்டியில் எடுத்து செல்லப்பட்ட சம்பவம் இந்தியாவில் ஏழை மக்களுக்கு தொடரும் அவல நிலையை எடுத்து காட்டுவதாக உள்ளது. விழுப்புரம் மாவட்டம், ஒழுந்தியாப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் மல்லிகா (62). இவரது தங்கை பவுனு (60). அவரது கணவா் சுப்பிரமணி (65). இவா்கள் இருவரும் ஒழிந்தியாப்பட்டு கிராமத்திலேயே வசித்து வந்தனா். சில தினங்களுக்கு முன்பு மல்லிகாவைப் பாா்க்க, கணவா் சுப்பிரமணியுடன் பவுனு வந்துள்ளார். அங்கு சுப்பிரமணிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. வறுமை காரணமாக உடனடியாக […]
வாய் வீரம் காதைக் கிழிக்கிறது- சீமானை விளாசும் சுப.வீ!
வாய்வீரம் காதைக் கிழிக்கிறது, வாக்குகளோ தினமும் குறைகிறது என, சீமான் குறித்து திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, சுப.வீரபாண்டியன் தன்னுடைய முகநூல் பக்கத்தில், “கைபேசிகள் எல்லாம் இல்லாத அன்றைய காலகட்டத்தில், கட்சிக் கூட்டங்களின் பொதுமேடைகளில், தலைவர்களை எதிர்பார்த்து மணிக்கணக்காய்க் காத்திருக்கும் மக்களிடம், “வந்துகொண்டே இருக்கிறார், இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடுவார், இதோ வந்துவிட்டார்” என்று அறிவிப்பார்கள். அப்படித்தான் இப்போது, “வளர்கிறார், வளர்கிறார், வளர்ந்து கொண்டே இருக்கிறார், இதோ வளர்ந்துவிட்டார்” என்று ஒருவரைப் […]
Swiggy : முஸ்லிம் டெலிவரி பாயா ? உணவை பெற்று கொள்ள முடியாது!
ஹைதராபாத்: அஜய் குமார் என்பவர் உணவு விநியோக தளமான ஸ்விக்கியில் (Swiggy) அசைவ உணவு(Chicken 65) ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். உணவை கொண்டு வந்து கொடுப்பவர் முஸ்லிம் (டெலிவரி பாய் ) என்று அறிந்து கொண்ட அவர், உணவை பெற்று கொள்ள மறுத்துள்ளார். அலியாபாத்தைச் சேர்ந்த அஜய் குமார், ஃபாலக்னுமாவில் உள்ள கிராண்ட் பவர்ச்சி உணவகத்தில் இருந்து ஸ்விக்கி மூலம் சிக்கன் -65 ஆர்டர் செய்துள்ளார். அத்துடன் “உணவில் காரம் கம்மியாக இருக்கனும்.. உணவை ஒரு இந்துவிடம் மட்டுமே கொடுத்து […]
‘ஆயிரங்களிலிருந்து லட்சங்கள்’ – காரப்பன் சில்க்ஸ் விற்பனை படு ஜோர்; ஹெச்.ராஜாவுக்கு நன்றி !
சமீபத்தில் கோவையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய காரப்பன் சில்க்ஸ் நிறுவுனர் காரப்பன் இந்துக் கடவுள்கள் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சைக்குள்ளானது. இதன் பின்னர் இந்துக்களை புண்படுத்திய தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்து கொண்டார் காரப்பன். எனினும் இந்துத்துவ அமைப்புகள் காரப்பனுக்கு எதிராக கண்டன போஸ்டர்களை ஒட்டி வந்தனர். இது தொடர்பாக பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, “சிறுமுகையில் உள்ள காரப்பன் சில்க்ஸ் கடையில் இனி எந்த இந்து உணர்வாளரும் பொருட்கள் வாங்க மாட்டோம் என […]
மும்மொழித் திட்டம் பெயரில் சமஸ்கிருதம் திணிப்பு- திருமாவளவன் அறிக்கை !
மத்திய பாஜக அரசு மும்மொழித் திட்டம் என்ற பெயரில் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி செய்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு.தொல் .திருமாவளவன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் .. “தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில் மாணவர்கள் அனைவரும் இந்தியைக் கற்றுக்கொள்ளவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் இருந்து எழுந்த எதிர்ப்பின் காரணமாக அது கைவிடப்பட்டது. ஆனால் இப்போது தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நவம்பர் 11ஆம் தேதி அறிமுகப்படுத்தப் போவதாகவும் அதில் […]
சிக்கன், மட்டனை மட்டுமே உண்ணும் கோமாதா!
பனாஜி: கோவா வின் கலங்குட் மற்றும் கேண்டோலிம் கடற்கரை கிராமங்களில் உள்ள 76 மாடுகள் அசைவ உணவு பழக்கத்திற்கு மாறி விட்டதாக அம் மாநிலம் கழிவுப் பொருள் மேலாண்மை அமைச்சர் மைக்கேல் லோபோ தெரிவித்துள்ளார். மேலும் மாடுகளை மீண்டும் சைவ உணவு பழக்கத்திற்கு மாற்றிட கால்நடை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கோசாலையில் வழக்கமாக வழங்கப்படும் புல், வைக்கோல் மற்றும் சிறப்பு உணவுகளை அந்த மாடுகள் சாப்பிடுவது இல்லை மாறாக சிக்கன், மட்டன், மீன் […]
இந்துத்துவ தலைவர் கமலேஷ் திவாரியை கொலை செய்தவர்கள் யார்?
உத்தரப்பிரதேசம்: வெள்ளிக்கிழமை பிற்பகல் லக்னோவின் நாகா பகுதியில் கமலேஷ் திவாரி (43) எனும் இந்துத்துவ, இந்து சமாஜ் கட்சித் தலைவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது,எனினும் தமிழக அளவில் இதை குறித்து பெரிய அளவில் செய்திகள் வெளியிடப்படவில்லை. கொலை செய்யப்பட்ட கமலேஷ் நபிகள் நாயகம் அவர்களை குறித்து (2015 ஆண்டில்) கீழ்த்தரமாக பேசியதற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது பட்டிருந்தவர். எனினும் யோகி ஆட்சி வந்த பிறகு […]
மோதி-ஜின்பிங் சந்திப்பு;ஒரு மாதமாக தினம் 16 மணி நேரம் வேலை- 1ரூ கூட கூலி வழங்கவில்லை!
பிரதமர் மோதி சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பை முன்னிட்டு மஹாபலிபுரத்தை தூய்மை படுத்துவதற்காக தற்காலிக துப்புரவு தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டனர்.இவர்கள் கடந்த ஒரு மாத காலமாக தினமும் சுமார் 16 மணி நேரம் இடைவிடாது பணிபுரிந்து வந்துள்ளனர்.எனினும் இதுவரை தங்களுக்கு ஒரு ரூபாய் கூட வழங்கப்படவில்லை என்று துப்புரவு தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த தொழிலாளர்களில் சிலர் மகாத்மா காந்தி கிராமப்புற தேசிய வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின் கீழ் தினசரி கூலித் தொழிலாளர்களாக பணி புரிபவர்கள். எனவே மகாபலிபுரம் […]
மும்பையின் லட்சாதிபதி பிச்சைக்காரர்; அதிர்ந்து போன போலீஸ்!
மும்பையில் ரயில் மோதி மரணித்த பிச்சைக்காரர்! 8 மணி நேரம் செலவழித்து 1.5 லட்சம் மதிப்புள்ள நாணயங்களை எண்ணிய போலீஸ் ! மும்பை கோவாந்தியில் வாழ்ந்து வந்த பிர்ஜு சந்திரா எனும் பிச்சைக்காரர்(வயது 62) ஒருவர் மீது ரயில் ஏறியதில் அவர் மரணித்தார். அவர் வங்கியில் தனது பெயரில் நிலையான வைப்பு கணக்கு (FD) மூலம் ₹8.7 லட்சம் வைப்பு வைத்திருந்தது தெரியவந்தது.மேலும் இவர் பிச்சை எடுத்து சேர்த்து வைத்திருந்த 1.75 லட்சம் சில்லறை நாணயங்களை எண்ணுவதற்கு ரயில்வே […]