அமைதியாகப் போராடிய தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் அவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை காவல்துறை செய்திருக்கிறது. நீதி கேட்டுப் போராடியவர்கள் மீது காவல்துறை ஏவியுள்ள அராஜகத்தினை மே பதினேழு இயக்க வன்மையாக கண்டிக்கிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள நடூர் ஏ.டி காலனி பகுதியில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்களின் குடியிருப்புப் பகுதி இருக்கிறது. அந்த குடியிருப்பின் அருகில் துணிக்கடை உரிமையாளர் ஒருவரின் வீடு இருக்கிறது. பக்கத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் குடியிருப்பு இருப்பதால், […]
States News
சிறுமி பாலியல் பலாத்காரம்; இழப்பீடு தொகை பெற்று தருமாறு ஆசிரியை சபரிமாலா மனு!
நாகை மாவட்டம் சீர்காழி தொகுதியில் உள்ள சித்தன் இருப்பு என்ற கிராமத்தில் , 10 ஆம் வகுப்பு படிக்கும் ஆசிகா என்னும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கடந்த நவ.09 அன்று கொல்லப்பட்டார். இது தொடர்பாக பக்கத்து வீட்டை சேர்ந்த 30 வயது நிரம்பிய குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். சீரழிக்கப்பட்டு கொல்லப்பட்ட அந்த அபலை சிறுமியின் பெற்றோருக்கு இழப்பீட்டு தொகையைப் பெற்றுக் கொடுக்குமாறு “இலக்கு 2040 ” […]
‘அடுத்தது கோவா’-பாஜக வயிற்றில் புளியை கரைக்கும் ஷிவசேனா!
மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு தக்க பாடம் கற்பித்த ஷிவசேனா, இப்போது விஜய் சர்தேசாயின் கோவா ஃபார்வர்ட் கட்சியுடன் கூட்டணியை அமைத்து அண்டை மாநிலமான கோவாவிலும் பாஜக வின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறது. “மகாராஷ்டிராவுக்கு அடுத்தது கோவா, அதற்கு அடுத்து மற்ற மாநிலங்களுக்கும் செல்வோம். இந்த நாட்டில் பாஜக அல்லாத அரசியல் முன்னணியை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம், ” என்று சிவசேனா கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ரவுத் மும்பையில் நேற்று (29-11-19) செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். கோவாவின் முன்னாள் […]
உபி : ஒரு லிட்டர் பாலில் ஒரு பக்கட் தண்ணீர்:குடிக்க அலைமோதும் ஏழை மாணவர்கள்!
அரசின் மதிய உணவு திட்டத்தின் கீழ் ஒரு லிட்டர் பால் பாக்கட்டுடன், ஒரு பக்கட் தண்ணீர் கலந்து 81 பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இந்த கொடூரம் பாஜக ஆட்சி செய்யும் உபியில் அரங்கேறியுள்ளது. உத்தரபிரதேசத்தில் வளர்ச்சியடையாத பகுதிகளில் சோன்பத்ரா மாவட்டமும் ஒன்றாகும். மாவட்டத்தில் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு சத்தான உணவிற்காக அரசுப் பள்ளிகளில் அரசு சார்பாக உள்ள மதிய உணவு திட்டத்தையே சார்ந்து உள்ளனர் என்று ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர். […]
நாகை உட்பட தமிழகத்திற்கு 3 புதிய மருத்துவக்கல்லூரிகள்!!
தமிழகத்திற்கு 3 புதிய மருத்துவக்கல்லூரிகள் அறிவிப்புக்கு மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் .. புதிதாக நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களுக்கு மருத்துவக்கல்லூரிகளை மத்திய அரசு வழங்கியிருப்பதை மஜக சார்பில் வரவேற்கிறோம், நன்றி தெரிவிக்கிறோம். குறிப்பாக நாகப்பட்டினத்திற்கு மருத்துவக்கல்லூரி வேண்டும் என்றும் அதற்கு தமிழக அரசு முயற்சி செய்ய வேண்டும் என்றும் தமிழக சட்டமன்றத்தில் நான் இரண்டு முறை வலியுறுத்தி பேசியிருந்தேன். இந்நிலையில் நாகப்பட்டினம் […]
உபி : பள்ளிவாசல் கட்டுவதற்காக சீக்கியர் அளித்த நில நன்கொடை!
சீக்கியர்களின் மதகுருவான குருநானக் தேவின் 550 வது பிறந்தநாளின் புனித மாதத்தில் உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் மசூதி ஒன்றை கட்டிக்கொள்வதற்காக 70 வயதான சீக்கியர் ஒருவர் தனது நிலத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். சமூக ஆர்வலரான சுக்பால் சிங் பேடி இது குறித்து ஞாயிற்றுக்கிழமை அன்று புர்காசி நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றின் போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 900 சதுர அடி நிலத்திற்கான நில ஆவணங்களை நகர பஞ்சாயத்து தலைவர் ஜாஹிர் பாரூகி அவர்களிடம் அவர் வழங்கினார். […]
கேரளா பாஜக அதிரடி; கூட்டுறவு சங்கத்தின் மூலம் மாட்டிறைச்சி விற்பனை !
மாட்டிறைச்சி விற்க பாஜகவின் மாவட்ட பிரிவு கூட்டுறவு சங்கத்தை அறிமுகப்படுத்துகிறது! பாரதீய ஜனதா கட்சியின் திருச்சூர் மாவட்ட பிரிவு இறைச்சி மற்றும் மீன்களை உற்பத்தி செய்வதற்கும், பதப்படுத்துவதற்கும், சந்தைப்படுத்துவதற்குமான ஒரு கூட்டுறவு சங்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஆறு மாதங்களுக்கு முன்பே கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரிடமிருந்து முறையாக ஒப்புதலும் பெற்றுள்ளது மாவட்ட பாஜக தலைமை. கால்நடைகள் மற்றும் மீன் பொருட்களை வளர்ப்பது மற்றும் விற்பனை செய்வதாக எங்கள் பைலாவில் குறிப்பிட்டுள்ளோம். “நாங்கள் இன்னும் இறைச்சியை பதப்படுத்தவோ விற்பனை […]
மகாராஷ்டிரா: மீண்டும் முதல்வர் ஆனார் ஃபட்னாவிஸ் !
மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே பதவி ஏற்பார் என்று நேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் (NCP) ஷரத் பவார் கூறி இருந்த நிலையில் அவரது மருமகன் அஜித் பவார் அளித்த ஆதரவின் பேரில் சனிக்கிழமை அதிகாலையில் தேவேந்திர ஃபட்னாவிஸின் தலைமையில் மகாராஷ்டிராவில் அரசாங்கம் அமைந்துள்ளது. திடீர் திருப்பமாக இன்று காலை மகாராஷ்டிராவின் முதல்வராக பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவி ஏற்றார். மேலும் என் சி பி கட்சியை சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராக பதவி […]
“மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்டடவர்களுக்கான இட ஒதுக்கீடு பறிக்கப்பட்டிருக்கிறது” – மு.க.ஸ்டாலின் கண்டனம்!
அனைத்து ‘இடஒதுக்கீடு’ விவரங்களும் அடங்கிய வெள்ளை அறிக்கையை நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத்தொடரில் பிரதமர் தாக்கல் செய்ய வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார் . மத்திய அரசுப் பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்த இந்த கூட்டத்தொடரிலேயே உரிய அரசியல் சட்டத் திருத்த மசோதா கொண்டு வர வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மாநில அரசு மற்றும் தனியார் மருத்துவக் […]
‘அயோத்தி ராமன் அழுகிறான்’ -கவிப் பேரரசு வைரமுத்து!
‘பாபர் மசூதி இடிக்கப்பட்ட அந்த நாளில் இடிந்து போய் எழுதியது’ என்று கவிப் பேரரசு வைரமுத்து எழுதிய இந்த கவிதை================================== கங்கை காவிரி இணைக்க வேண்டும்கர சேவகரே வருவீராகாடுகள் மலைகள் திருத்த வேண்டும்கர சேவகரே வருவீராவறுமைக் கோட்டை அழிக்க வேண்டும்கர சேவகரே வருவீரா மாட்டீர்கள் சேவகரே மாட்டீர்கள்நாம் உடைப்பதற்கே பிறந்தவர்கள்படைப்பதற்கில்லைவித்துன்னும் பறவைகள்விதைப்பதில்லை விளைந்த கேடுவெட்கக் கேடுசுதந்திர இந்தியாஐம்பதாண்டு உயரத்தில்அடிமை இந்தியன்ஐநூறு ஆண்டு பள்ளத்தில் ஏ நாடாளுமன்றமேவறுமைக் கோட்டிற்குக் கீழ்நாற்பது கோடிப் பேர் என்றாய்அறிவுக் கோட்டின் கீழ்அறுபது கோடிப் […]
பெற்றோரை கைவிட்ட மகனிடமிருந்து ரூ.3 கோடி மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு !
கிருஷ்ணகிரியில் பெற்றோரை பராமரிக்காமல் கைவிட்ட மகனிடம் இருந்து ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்துகளை மீட்டு பெற்றோரிடமே ஒப்படைத்தார் வருவாய் கோட்டாட்சியர். கிருஷ்ணகிரி சென்னை சாலையில் உள்ள பெரியசாமி கவுண்டர் தெருவில் வசித்து வருபவர் கிட்டு (எ) பெரியசாமி (67). இவர் வணிகவரித்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சகுந்தலா (60). இவர்களது மகன் அருண்குமார் (40). இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அருண் குமாருக்கு சிறுநீரகம் பாதிப்பு ஏற்பட்டு செயல் இழந்த நிலையில், […]
கௌதம் கம்பீரின் விளக்கத்தை படிங்க…மெய் சிலிர்க்கும்!
டில்லி காற்று மாசுபாடு குறித்த நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் பங்கேற்காமல் 24 எம்பிகள் புறக்கணித்தனர். 4 பேர் மட்டுமே வந்ததையடுத்து கூட்டம் ரத்து செய்யப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருந்து எம்பிகளில் கௌதம் கம்பீரும் ஒருவர். இவர் அன்றைய தினம் கிரிக்கட் கமண்டரி செய்வதற்கு சென்றுவிட்டார். ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டதற்கு “எனது பணி பேசும்!” . நான் அரசியலில் வந்தது சம்பாதிப்பதற்காக இல்லை. எனினும் எனக்கென்று குடும்பம் குட்டி உள்ளது அவர்களை காப்பாற்றுவதற்காக நான் […]
ஃபாத்திமா லத்தீஃப்பின் தந்தை முன்வைக்கும் 10 கேள்விகள்!
மதரீதியாக துன்புறுத்தப்பட்டதால் மனம் நொந்து போய் தற்கொலை செய்து கொண்ட சென்னை ஐஐடி கல்லூரி பாத்திமா லத்தீஃப்பின் தந்தை அப்துல் லத்தீஃப் முன்வைக்கும் 10 கேள்விகள். 1.எனது மகள் கடிதம் எழுதும் பழக்கம் உடையவள். வீட்டில் என்ன நடந்தாலும் கடிதம் எழுதுவாள். அப்படியிருக்க தற்கொலை செய்ததாக சொல்லப்படும் நேரத்தில் என் மகள் கண்டிப்பாக கடிதம் எழுதியிருப்பாள் .. அது எங்கே..? 2.ஹாஸ்டல், உணவகம், நூலகம்போன்ற இடங்களின் CCTV பதிவுகளை ஐஐடி நிர்வாகம் தருவதற்கு தாமதிப்பது ஏன்..? 3.என் […]
10 வயது சிறுமி பலாத்காரம்; கழுத்து நெரித்து கொலை !
மும்பை நகரின் ராஜீவ் காந்தி நகரில் வசிக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் மாற்று திறனாளி ( 2 வருடங்களுக்கு முன்னர் தான் நடக்க ஆரம்பித்தார்) 10 வயது சிறுமி நவம்பர் 5ம் தேதி காணாமல் போனதால் அப்பகுதி மக்கள் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் சனிக்கிழமை 9ம் தேதி இரவு வித்யாவிஹார் ரயில் நிலையம் அருகிலுள்ள சாலையில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், சிறுமியின் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த […]
பஞ்சாப் : தலித் ஒருவரை தாக்கி சிறுநீர் குடிக்கவைக்கப்பட்ட கொடூரம்!
பஞ்சாபின் சங்ரூர் மாவட்டத்தில் 37 வயதான தலித் நபர் ஒருவரை பழைய தகராறு ஒன்றின் காரணமாக இழுத்து சென்ற சிலர் அவரை கடுமையாக தாக்கியும், கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்கவும் வைத்துள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது. சங்கலிவாலா கிராமத்தைச் சேர்ந்த ஜக்மைல் சிங் கடந்த நவம்பர் 7 ஆம் தேதி தனது வீட்டில் இருந்து இரண்டு நபர்களால் அழைத்துச் செல்லப்பட்டதாக துணை போலீஸ் சூப்பிரண்டு (டிஎஸ்பி) பூட்டா சிங் தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சாங்குலிவாலா கிராமத்தில் வசிக்கும் ரிங்கு, அமர்ஜீத் […]