ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் : திருமாவளவன் மனு “மத நல்லிணக்கத்தை குலைத்து, பிரித்தாளும் கொள்கையை பின்பற்றுவது ஆர்எஸ்எஸ். அதை சேர்ந்த கோட்சே, மகாத்மா காந்தியை கொலை செய்த போது இனிப்பு விநியோகித்து கொண்டாடியது. பாஜக விளம்பரத்துக்காக தங்கள் வீடுகளின் முன் குண்டுகளை வீசி வரும் சம்பவங்கள் நடைபெறும் சூழலில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கினால் அது பொதுமக்கள் நடமாட்டத்திற்கு ஆபத்தாக முடியும். மேலும் நீதிமன்ற நிபந்தனைகளை பின்பற்றாமல் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ் திட்டம்” என […]
RSS
நாடு முழுவதும் குண்டுவெடிப்பு நடத்த ஆர்.எஸ்.எஸ் திட்டம் ! – அனைத்தையும் போட்டுடைத்த 25 ஆண்டு ஆர்.எஸ்.எஸ் ஊழியர்!
மகாராஷ்டிரா மாநிலம் நான்டேட் பகுதியை தளமாகக் கொண்ட ராஷ்ட்ரிய ஸ்வயன்சேவக் சங்க (ஆர்.எஸ்.எஸ்) உறுப்பினர்களின் வீட்டில் 16 ஆண்டுகளுக்கு முன் வெடிகுண்டு வெடித்தது. இந்த வெடிகுண்டு சம்பவத்தில் அந்த அமைப்பின் பல மூத்த இந்துதுவ தலைவர்கள் நேரடியாக தொடர்ப்புடையவர்கள் என்று கூறி ஆர்.எஸ்.எஸ்-ன் முன்னாள் ஊழியர் ஒருவர் சிபிஐ நீதிமன்றத்தில் பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். விண்ணப்பம் தாக்கல் செய்துள்ள யஷ்வந்த் ஷிண்டே, 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆர்.எஸ்.எஸ் ஊழியராக இருந்தவர். மேலும் விஸ்வ ஹிந்து பரிஷத் […]
கர்நாடகா: தலித் சமூக நூலாசிரியர் எழுதிய புத்தகத்தால், கடும் கோபத்தில் ஆர்.எஸ்.எஸ் !
கர்நாடகாவில் பிரபல தலித் எழுத்தாளரும் ஆர்வலருமான தேவனூர் மகாதேவா ஆர்எஸ்எஸ் பற்றி எழுதியுள்ள புத்தகம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. வலதுசாரிகள் இதை ஆர்எஸ்எஸ்ஸுக்கு எதிரான பிரச்சாரம் என்கிறார்கள். “ஆர்எஸ்எஸ் ஆலா அகலா” (ஆர்எஸ்எஸ், அதன் ஆழமும் அகலமும்) என்ற புத்தகத்தின் விற்பனை கர்நாடக மாநிலத்தில் சாதனை படைத்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா வியாழன் அன்று மகாதேவாவுக்கு ஆதரவாக, “ஆர்எஸ்எஸ் பற்றி அவர் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?” என்று கருத்து தெரிவித்துள்ளார். நூலை தடை செய்யத்துடிக்கும் வலதுசாரிகள்: இந்நூலை […]
தலித் எழுத்தாளர்கள் நீக்கம், ஆர்எஸ்எஸ் தலைவர்கள் சேர்ப்பு; காவிமயமாக்கப்பட்டுள்ள கர்நாடக பாடப்புத்தக மாற்றங்களின் முழு பட்டியல்!
கர்நாடகா : மகாத்மா காந்தி, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பற்றிய பாடங்கள் நீக்கப்பட்டு ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிகளான விநாயக் சாவர்க்கர் மற்றும் கேபி ஹெட்கேவார் ஆகியோரின் பாடங்கள் பாடப்புத்தகங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. அசர்ச்சைக்குரிய வலதுசாரி சொற்பொழிவாளர் ரோஹித் சக்ரதீர்த்தா தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்ட பள்ளி பாடப்புத்தகங்களுக்கு எதிராக கர்நாடகாவில் உள்ள முற்போக்கு குழுக்கள் ஏன் போராடுகின்றன? இந்த நூல்களில் எந்தெந்தப் பிரிவுகள் திரிக்கப்பட்டிருக்கின்றன, எந்தெந்தப் பகுதிகள் காவி மையமாக்கப்பட்டுள்ளன, எந்த முற்போக்குக் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன? சர்ச்சை தொடங்கியதில் இருந்து முதன்முறையாக, […]
கல்வித்துறையில் காவி சித்தாந்தம் திணிப்பு .. வைகோ கடும் கண்டனம்!
இந்துத்துவ சனாதனக் கோட்பாட்டிற்கு ஏற்ற வகையில் இளங்கலை வரலாறு பட்டப் படிப்புக்கான பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது என மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார் . இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவை : கொரோனா பெருந்தொற்று நாட்டை துயரப் படுகுழியில் தள்ளி இருக்கும் சூழலில், மத்திய பா.ஜ.க. அரசு, கல்வித் துறையை காவிமயமாக்கும் சதிச் செயலை அரங்கேற்றி இருக்கிறது. கடந்த 2020-21 கல்வி ஆண்டில் கொரோனா பாதிப்பில் பள்ளிகள் மூடப்பட்டன. இணையம் […]
என்.சி.பி.யூ.எல் மூலம் ஆர்எஸ்எஸ் தலைவரின் புத்தகம் வெளியீடு; உருது அறிஞர்கள் முன்னால் கவுன்சில் தலைவர்கள் கண்டனம் !
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தின் புத்தக வெளியீட்டு விழாவில் அனைத்துப் பணியாளர்களும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என உருது மொழி ஊக்குவிப்பிற்கான தேசிய கவுன்சில் (என்.சி.பி.யூ.எல்) உத்தரவிட்டுள்ளது. மோகன் பகவத் எழுதியுள்ள ’முஸ்தக்பில் கா பாரத்’ புத்தகத்தின் உருது பதிப்பு வெளியிடுட்டு விழாவில் கலந்து கொள்ள பணியாளர்க்ளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கலந்து கொள்ள தவறுபவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மார்ச் 31 ஆம் தேதி மத்திய உயர் கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “ஏப்ரல் […]
“அகண்ட பாரதம்” சாத்தியமே; பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான் எங்களுடையதாகவே கருதுகிறோம்’- ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு ..
“அகண்ட பாரதம்” அமைப்பதற்கான தேவை உள்ளது, இது இந்தியாவில் இருந்து பிரிந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு நல்லது என்று ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத் வியாழக்கிழமை புத்தக வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் தெரிவித்தார். பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானை “நம்முடையது” என்று மோகன் பகவத் வர்ணித்தார், மேலும் தற்போது அங்கு வசிக்கும் மக்கள் என்ன நடைமுறையில் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல என்றார். ‘தேசியவாதம்’ என்ற வார்த்தையைத் தவிர்க்க விரும்புகிறோம், ஏனெனில் இது ‘ஹிட்லர், […]
ஆர்.எஸ்.எஸின் கோல்வால்கர் “ஆழ்ந்த சிந்தனையாளர்” என மத்திய கலாச்சார அமைச்சகம் டீவீட்; நெட்டிசன்கள் கண்டனம்
இந்திய தேசியத்தின் கலாச்சார அமைச்சகம், கோல்வால்கர் ஒரு சிந்தனை சிற்பி, தலைசிறந்த தலைவர், நிகரில்லா ஆளுமை என வாயார புகழ்ந்து ட்வீட் போட்டது தான் தாமதம்…, கனநிமிடத்தில் கடகடவென திரண்டு வந்து கண்டித்த நெட்டிசன்கள். ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் எனப்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் எம்.எஸ்.கோல்வால்கரை இமாலய உயரத்திற்கு புகழ்ந்து, அவரை நினைவு கூர்வதாக கூறியும் வருங்கால ஆட்சியாளர்களுக்கு இவரது கருத்துகளில் வழிகாட்டல்கள் உள்ளது எனவும் இந்திய கலாச்சார அமைச்சகம் ஒரு ட்வீட் போட்டிருந்தது இதில் கலாச்சார […]
தன்னார்வலர்கள் உணவு விநியோகிக்க தடை; ஆனால் ஆர்.எஸ்.எஸ் க்கு மட்டும் விதி விலக்கா?
ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வலர்கள் தனியாக நிவாரணப்பொருட்கள் தர தமிழக அரசு தடை அறிவித்துள்ளது. நிதியாக இருந்தால் முதல்வரின் நிவாரண நிதிக்கும், பொருளாக இருந்தால் மாநகர ஆணையரிடம் தரலாம் என தமிழக அரசு நேற்று அறிவித்தது. எனினும் இதற்கு முரணாக ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர் சென்னை மாநகராட்சியுடன் இனைந்து உணவு விநியோகத்தில் ஈடுபட உள்ளதாக நேற்று தி இந்துவில் செய்தி வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு தன்னார்வலர்கள், காட்சிகள் மற்றும் இயக்கத்தினர் ஊரடங்கு உத்தரவால் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய […]
வாகன ஓட்டிகளை சோதனையிட ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களுக்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை- தெலுங்கானா கமிஷ்னர் அறிவிப்பு ..
சோதனைசாவடிகளில் சோதனை மேற்கொள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு எந்த வித அனுமதியும் வழங்கப்பட வில்லை என தெலுங்கானா காவல்துறை தெரிவித்துள்ளது. ஹைதராபாத்தின் புறநகர் நெடுஞ்சாலையில் ஆர்.எஸ்.எஸ் சீருடையில் சிலர் லத்திகளை கொண்டு நிற்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது. “ஆர்.எஸ்.எஸ் தன்னார்வலர்கள் தெலுங்கானாவின் யாதத்ரி புவனகிரி மாவட்ட சோதனைச் சாவடியில் தினமும் 12 மணி நேரம் காவல் துறைக்கு உதவுகிறார்கள்.” என்று செய்தியுடன் @friendsofrss என்ற கணக்கில் இருந்து இந்த புகைப்படங்கள் முதலில் ட்வீட் செய்யப்பட்டது. இந்த […]
நாக்பூர் : ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் முன்பாக பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் பேரணி நடத்த நீதிமன்றம் அனுமதி!
மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்ச் பீம் ராணுவத் தலைவர் சந்திரசேகர் ஆசாத்தின் பேரணிக்கு இன்று அனுமதி வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த பேரணி நாக்பூரின் ரேஷிம்பாக் பகுதியில் உள்ள ஆர்.எஸ்.எஸ் ஸ்மிருதி மந்திர் முன் சனிக்கிழமை நடைபெற உள்ளது. போலீசார் மறுப்பு: ரஷிம்பாக் மைதானத்தின் உரிமையாளர்களான சிபி & பெரார் எஜுகேஷன் சொசைட்டியிடம் உரிய தொகை வழங்கப்பட்டு முறையான அனுமதியையும் பெற்ற பிறகு ஆசாத்தின் பேரணி சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என கூறி உள்ளூர் கோட்வாலி […]
ஆர்.எஸ்.எஸ் தொண்டர் கொலை வழக்கில் 9 ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுக்கு ஆயுள் தண்டனை !
கேரளா : முன்னாள் ஆர்.எஸ்.எஸ் செயற்பாட்டாளர் கடவூர் ஜெயன் என்கிற ராஜேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் நேற்று கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. சிறைத் தண்டனையுடன் கூடுதலாக, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தலா ரூ . 1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. தலைமறைவாக இருந்த குற்றம் சாட்டப்பட்டவர்கள் அச்சலமூடு போலீசில் சரணடைந்ததை அடுத்து இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. தண்டனை பெற்ற தொண்டர்கள் ஆர்.எஸ்.எஸ் : ஜி வினோத், 42; […]
“சாவர்க்கர் – கோட்ஸே ஓரினசேர்கையாளர்கள்” – காங்கிரஸ் சேவா தளம் கையேட்டால் சர்ச்சை!
‘வீர் சாவர்க்கர் கிட்னே வீர்? (வீர் சாவர்க்கர், எவ்வளவு தைரியமானவர்?) என்று பெயரில் கையேடு ஒன்று வியாழக்கிழமை மத்திய பிரதேசின் போபால், பைராகரில் காங்கிரஸ் சேவா தளம் அமைப்பின் தேசிய பயிற்சி முகாமின் தொடக்க விழாவின் போது தொண்டர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டது. ‘கோட்ஸே- சாவர்க்கர் ஓரின சேர்க்கையாளர்கள்’: பிரபல எழுத்தாளரும் ஊடகவியலாளருமான லாரி காலின்ஸ் மற்றும் டொமினிக் லேபியர் ஆகியோரின் புகழ்பெற்ற நூலான ‘நள்ளிரவில் சுதந்திரம்’ என்ற புத்தகத்தை ஆதாரமாக (பக்கம் 423) மேற்கோள்காட்டி சாவர்க்கர் கோட்ஸே […]
அன்புள்ள இந்துத்துவர்களுக்கு ஹிட்லர்,ஒசாமா மேலுள்ள வெறுப்பு சாவர்க்கர், ஹெட்கேவார் மீது ஏன் இல்லை? – ஸ்ரீதர் சுப்ரமணியம்
அன்புள்ள இந்துத்துவர்களுக்கு, எல்லா அடிப்படைவாதத்துக்கும் ஒரு நியாய தர்மம், ஒரு ஆறாத வடு இருக்கும். குற்றங்களில் ஈடுபடும் எல்லா ஹீரோவுக்கும் பிளாஷ்பேக்கில் ஒரு அநீதி இருப்பது போல. ஒசாமா பின் லாடன் ஒன்றும் ரேபிஸ் வியாதி பீடித்து இரட்டை கோபுரத்தை தகர்க்கவில்லை. மத்திய கிழக்கில் அமெரிக்கா நடத்திய வெறியாட்டங்கள், ஆடிய இரட்டை வேடங்கள் ஏற்படுத்திய பாதிப்பின் பின்னணியில் வலுவான ஒரு கோபம் இருக்கிறது. அதே போல யூதர்களுக்கு எதிரான கோபங்களும் வெறுப்புகளும் நூற்றாண்டுகளாகவே ஐரோப்பாவில் இருந்தன. பன்றியின் […]
தேசியக்கொடியை ஆரம்பத்தில் இருந்தே மதிக்காத ஒரு இயக்கம் இருக்கிறது. அது எது தெரியுமா? – ஸ்ரீதர் சுப்ரமணியம்.
தேசியக்கொடியை ஆரம்பத்தில் இருந்தே மதிக்காத ஒரு இயக்கம் இருக்கிறது. அது எது தெரியுமா? இந்துத்துவம்தான். ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து மகா சபா துவக்கத்தில் இருந்தே தேசியக்கொடியை ஏற்றுக் கொண்டதில்லை. இரண்டே முறை 14 ஆகஸ்ட் 1947, 26 ஜனவரி 1950, மட்டுமே கொடி ஏற்றி இருக்கிறார்கள். அதற்கும் காரணம் சர்தார் படேல். மூவர்ணக்கொடியை தவிர்த்து வேறு கொடியை தேசியக்கொடியாக மதிக்கும் இயக்கங்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் இட்ட மிரட்டல் வேலை செய்திருக்கிறது. படேல் […]