ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் : திருமாவளவன் மனு “மத நல்லிணக்கத்தை குலைத்து, பிரித்தாளும் கொள்கையை பின்பற்றுவது ஆர்எஸ்எஸ். அதை சேர்ந்த கோட்சே, மகாத்மா காந்தியை கொலை செய்த போது இனிப்பு விநியோகித்து கொண்டாடியது. பாஜக விளம்பரத்துக்காக தங்கள் வீடுகளின் முன் குண்டுகளை வீசி வரும் சம்பவங்கள் நடைபெறும் சூழலில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கினால் அது பொதுமக்கள் நடமாட்டத்திற்கு ஆபத்தாக முடியும். மேலும் நீதிமன்ற நிபந்தனைகளை பின்பற்றாமல் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ் திட்டம்” என […]
Thol. Thirumavalavan
’குஜராத் மாடலை’ டெல்லியில் நிகழ்த்த திட்டம் ; அமித்ஷா பதவி விலகவேண்டும்! – தொல்.திருமா அறிக்கை
டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அமைதியான முறையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கவளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவைச் சேர்ந்த கபில் மிஸ்ரா நடத்திய ஊர்வலத்தைத் தொடர்ந்து கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. இதில் ஒரு போலீஸ்காரர் உட்பட ஏழு பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் இந்த கலவரத்துக்கும் சாவுக்கும் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். காவல்துறை அதிகாரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி மாநில அரசிடம் […]
சி.ஏ.ஏ: ‘நாளைய சட்டமன்ற முற்றுகை போராட்டத்தில் சிறுத்தைகள் பங்கேற்போம்’ : தொல் .திருமாவளவன் அறிவிப்பு!
இஸ்லாமியக் கூட்டமைப்புகள் சார்பில் நாளை தமிழக சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தொல்.திருமாவளவன், எம்.பி ஆதரவு தெரிவித்துள்ளார். ‘சி.ஏ.ஏ வை நிராகரிப்போம், என்.பி.ஆர் கணக்கெடுப்பு நடத்தமாட்டோம்’ என தீர்மானம் நிறைவேற்றிட வலியுறுத்தி தமிழ்நாடு இசுலாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் சார்பில் நாளை நடைபெறும் சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தில் சிறுத்தைகள் பங்கேற்று போராட்டத்தை வெற்றி பெறச் செய்வோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் .திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் சட்டமன்ற முற்றுகை போராட்டத்துக்கு […]
வன்முறையை ஏவிய அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் – தொல் .திருமாவளவன் அறிக்கை!
சென்னை வண்ணாரப்பேட்டையில் அமைதி வழியில் போராடிய இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் . திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வன்முறையை ஏவிய அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அவர் அறிக்கை விடுத்துள்ளார். குடியுரிமைத் திருத்தச் சட்டம்; தேசிய மக்கள்தொகைப் பதிவேடு; தேசிய குடியுரிமைப் பதிவேடு ஆகியவற்றைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தியும், குடியுரிமை திருத்தச் […]
மோடியின் உரையை கேட்க மாணவர்கள் பள்ளிக்கு வர சொல்வதா ? – திருமா கடும் தாக்கு!
16ஆம் தேதி பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் வானொலியில் உரையாற்றுகிறார் அதனால் விடுமுறை நாளாக இருந்தாலும் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. விருப்பமுள்ள மாணவர்கள் வரவேண்டும் என இப்போது மாற்றி அறிவித்திருக்கிறார்கள். இது மாணவர்களின் சுதந்திரத்தை பறிக்கக்கூடியதாக இருக்கிறது. மாணவர்கள் இல்லங்களில் இருந்தவாறே பிரதமரின் உரையைக் கேட்க வேண்டும் என அரசு கூறலாம். பாரதிய ஜனதாவின் கட்டுப்பாட்டுக்குள் சிக்கியிருக்கிற அரசாக தமிழக அரசு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த […]
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி: உடனடி நடவடிக்கை தேவை – தொல்.திருமா வலியுறுத்தல்!
மத்திய அரசு மக்கள் நலனை கருத்தில்கொண்டுபொருளாதார கொள்கை முடிவுகளை உடனடியாக எடுக்க வேண்டும்!- தொல்.திருமாவளவன் வலியுறுத்தல் இந்தியப் பொருளாதாரம் சரிவில் சென்றுக் கொண்டிருப்பதாகவும் பொருளாதார வளர்ச்சி கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவில் 4.5% ஆக குறைந்திருப்பதாகவும் சர்வதேச செலாவணி நிதியம் (INTERNATIONAL MONETARY FUNDS) அறிவித்துள்ளது. மேலும், இந்த பொருளாதார வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தி சீராக்குவதற்கு உடனடியாக அரசு கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருக்கிறது. இந்தியப் பொருளாதார வீழ்ச்சியைப் பற்றி 189 நாடுகளை உறுப்புநாடுகளாக […]
கல்வி நிறுவனங்களில் தொடரும் மதவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- திருமா!
ஹிஜாப் அணிந்திருந்த இசுலாமிய மாணவிக்குபல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் அவமதிப்பு!பல்கலைகழக நிர்வாகம் மதப்பாகுபாட்டை கடைபிடிப்பதா?என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் குடியரசுத் தலைவர் மாண்புமிகு ராம்நாத் கோவிந்த் அவர்கள் பங்கேற்று பட்டங்களையும் பதக்கங்களையும் வழங்கிய விழாவில், பட்டமும் தங்கப்பதக்கமும் பெறுவதற்காக அந்த அரங்கில் அமர்ந்திருந்த முஸ்லிம் மாணவி அவமதிக்கப்பட்டிருக்கிறார். முதுகலை மக்கள் தொடர்பியல் துறை மாணவியான ரபியாவை, அவர் இஸ்லாமியர் என்பதற்காகவே திடீரென அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற்றி ஒரு அறையில் […]