டி.கே.சிவகுமாரின் ED காவல் செப்டம்பர் 13 ஆம் தேதியுடன் முடிவடைகிறது, எனினும் அமலாக்கத்துறை கைதை மேலும் நீட்டிக்க வேண்டும் என கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது…
Political Figures
உ.பி யில் “ரொட்டியும், உப்பும்” தான் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவு ! – வைரல் வீடியோ
“ஒரு சமயம் குழந்தைகளுக்கு ரொட்டியும் உப்பும் கிடைக்கும், மறு சமயம் அரிசியும் உப்பும் அரிதாக ஏதேனும் ஒரு நாள் பால் வந்தடையும். ஆனால் அது ஒருபோதும் பகிர்ந்து அளிக்கப்படுவது கிடையாது. வாழைப்பழம் அப்படி தான் பகிர்ந்து அளிக்கப்படாது. கடந்த ஒரு வருடமாக இதே நிலைதான் நீடிக்கிறது”…..
“இ.வி.எம்மிற்கு ஒரு முடிவு கட்டினால்,பாஜகவும் முடிவிற்கு வந்துவிடும்”- ராஜ் தாக்ரேவின் துணிச்சல் பேட்டி!
“பாஜக வினருக்கு கட்டாயம் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை இருந்தால் வாக்குச் சீட்டின் மூலமாக தேர்தலை எதிர் கொள்வதை ஏன் மறுக்கிறது?” -ராஜ் தாக்ரே !..
பிரக்யா சிங் மீதான குண்டுவெடிப்பு விசாரணையை மீடியா வெளியிடாமல் இருக்க -நீதி மன்றத்தில் NIA மனு தாக்கல்!
File photo – PTI மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் நகரில் உள்ள பள்ளிவாசலில் 2008-ம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 10 வயது சிறுமி உள்பட 6 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அபிநவ் பாரத் என்ற இந்துத்துவ அமைப்பு இந்த வெடிகுண்டு சம்பவத்தை நிகழ்த்தியது. இந்த அமைப்பை இராணுவ புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த பிரசாத் ஸ்ரீகாந்த புரோஹித் என்பவர் தொடங்கினர். ஆரிய வர்த்தம் அல்லது இந்து ராஷ்டிரத்தை நிறுவும் பொருட்டு இந்த பயங்கரவாத அமைப்பு […]
மோடி 2.0 : 60 நாட்களில் பங்கு சந்தையில் ரூ.12 லட்சம் கோடி இழப்பு!
மோடி அரசு அமைத்து 60 நாட்களில் சுமார் ரூ.12 லட்சம் கோடி இழப்பு மோடி இரண்டாம் முறையாக ஆட்சி பொறுப்பேற்ற 60 நாட்களில் பங்குச் சந்தை ரூ.12 லட்சம் கோடி வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2004 ஆம் வருடம் மே 14 முதல் 2009 ஆம் வருடம் ஜூலை 24 வரையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மற்றும் அதே கூட்டணி 2ம் முறையாக ஆட்சியைத் தொடங்கிய போதும் மும்பை பங்குச் சந்தை 203% வளர்ச்சி அடைந்துள்ளது. […]
“NIA முஸ்லிம் இளைஞர்களை குறிவைத்து கைது செய்கிறது”-சட்டமன்றத்தில் தமீமுன் அன்சாரி, அபூபக்கர் குற்றச்சாட்டு!
தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை தொடர்ந்து கைது செய்து வருவதாக எம்.எல்.ஏவும், மனிதனேய ஜனநாயக கட்சி நிறுவனருமான எம்.தமிமுன் அன்சாரி கடந்த வியாழக்கிழமை சட்டமன்றத்தில் கண்டனம் தெரிவித்தார். பிற்படுத்தப்பட்ட , மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூகத்தார் மேம்பாடு குறித்த விவாதத்தின் போது என்.ஐ.ஏ அப்பாவி முஸ்லிம்களை கைது செய்வதும் , உடனே அவர்கள் போட்டோக்கள் மற்றும் இதர விவரங்களை மீடியாக்களில் வழங்கி, பின் மறு தினமே இவர்கள் குற்றவாளிகள் இல்லை என்று […]
யோகி ஆதித்யநாத் மீதான ’20 வருட கொலை வழக்கை’ ரத்து செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!
கடந்த 20 வருடமாக கிடப்பில் போடப்பட்டிருந்த யோகி ஆதித்யநாத் மீதான கொலை வழக்கை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1999ஆம் ஆண்டு சமாஜ்வாதி கட்சி தலைவர் தலாத் அஜீஸ் என்பவரை கொலை செய்ய அவரை நோக்கி யோகி ஆதித்யநாத் மற்றும் சில குண்டர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்றும், இந்த சம்பவத்தின் போது சமாஜ்வாதி கட்சி தலைவரின் பாதுகாப்பு காவல் அதிகாரியாக இருந்த யாதவ் என்பவர் மகாராஜ்கஞ் என்ற பகுதியில் கொலை செய்யப்பட்டார் என்பது தான் […]
வாரணாசியில் மோடி வெற்றி பெற்றதை எதிர்த்து தொடர பட்ட வழக்கில் அலஹாபாத் உயர் நீதி மன்றம் மோடிக்கு நோட்டீஸ்.
வாரணாசி தொகுதி தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மோடிக்கு அலஹாபாத் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எல்லையில் வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு மோசமாக இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டார் , எல்லைப் பாதுகாப்பு படை வீரர் தேஜ்பகதூர். இது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. இதனை தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளுக்கிடையில் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். கடந்த மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் அவர் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. எல்லைப் பாதுகாப்பு […]
இந்தியாவில் மாட்டிறைச்சி தடை செய்ய விரும்பியவர்களுக்கு மகாத்மா காந்தி அன்றே சொன்னது என்ன ?
கீழுள்ள பதிவு காந்தி பாரம்பரிய ஆன்லைன் போர்ட்டலில் வெளியிட்டுள்ள காந்தியின் பிரார்த்தனை சொற்பொழிவின் ஒரு பகுதி (ஜூலை 25, 1947, மகாத்மா காந்தியின் சேகரிக்கப்பட்ட படைப்புகள், vol :88) …மாடுகளை (இறைச்சிக்காக) கொல்ல தடை விதிக்கக் கோரி தனக்கு சுமார் 50,000 அஞ்சல் அட்டைகளும், 25,000 முதல் 30,000 கடிதங்களும், பல்லாயிரக்கணக்கான தந்திகளும் வந்துள்ளன என்று ராஜேந்திர பாபு என்னிடம் கூறுகிறார். இதைப் பற்றி நான் முன்பு உங்களிடம் பேசினேன்.இத்தனை தந்தி ,கடிதங்கள் எல்லாம் ஏன் அனுப்ப […]
மத கோஷங்களை கட்டாயப்படுத்தி திணித்து வன்முறையில் ஈடுபடும் போக்கிற்கு -மாயாவதி கடும் கண்டனம் !
லக்னோ, ஜூலை 15 (PTI ) மதப் கோஷங்களை எழுப்ப மக்களை கட்டாயப்படுத்தும் ஒரு தவறான நடைமுறை உத்தரபிரதேசம் மற்றும் ஒரு சில மாநிலங்களில் தொடங்கியுள்ளதற்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இன்று (15-7-19)கண்டனம் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுகொண்டார். கடந்த சனிக்கிழமை உபி மாநில பள்ளிவாசல் இமாமின் தாடியை பிடித்து இழுத்து ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கூற வற்புறுத்தி தாக்கிய […]