தமிழகத்திற்கு 3 புதிய மருத்துவக்கல்லூரிகள் அறிவிப்புக்கு மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் .. புதிதாக நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களுக்கு மருத்துவக்கல்லூரிகளை மத்திய அரசு வழங்கியிருப்பதை மஜக சார்பில் வரவேற்கிறோம், நன்றி தெரிவிக்கிறோம். குறிப்பாக நாகப்பட்டினத்திற்கு மருத்துவக்கல்லூரி வேண்டும் என்றும் அதற்கு தமிழக அரசு முயற்சி செய்ய வேண்டும் என்றும் தமிழக சட்டமன்றத்தில் நான் இரண்டு முறை வலியுறுத்தி பேசியிருந்தேன். இந்நிலையில் நாகப்பட்டினம் […]
Political Figures
“மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்டடவர்களுக்கான இட ஒதுக்கீடு பறிக்கப்பட்டிருக்கிறது” – மு.க.ஸ்டாலின் கண்டனம்!
அனைத்து ‘இடஒதுக்கீடு’ விவரங்களும் அடங்கிய வெள்ளை அறிக்கையை நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத்தொடரில் பிரதமர் தாக்கல் செய்ய வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார் . மத்திய அரசுப் பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்த இந்த கூட்டத்தொடரிலேயே உரிய அரசியல் சட்டத் திருத்த மசோதா கொண்டு வர வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மாநில அரசு மற்றும் தனியார் மருத்துவக் […]
உபி : காற்று மாசுபாட்டை குறித்து இர்ஷாத் ட்வீட் – (NSA)’தேசிய பாதுகாப்பு சட்டத்தில்’கைது செய்துவிடுவேன்! – போலீஸ்!
தில்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணமாக இருப்பது விவசாய பயிர் கழிவுகளை எரிப்பது என்று அறியப்படுகிறது. நீதிமன்றமும் சமீபத்திய தீர்ப்பின் போது இது குறித்து குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் உபி மாநில பரேலி பகுதியில் வசிக்கும் மாற்று திறனாளி இர்ஷாத் கான் என்ற முதலாம் ஆண்டு சட்ட கல்லூரியில் பயிலும் மாணவன் தனது வீட்டருகே உள்ள ஒருவர் விவசாய பயிர் கழிவுகளை (stubble burning) எரிப்பதாக தனது ட்விட்டர் கணக்கு மூலம் குற்றம் சாட்டினார். மாணவரை பாராட்டவில்லை […]
தமிழ்மக்களை வெட்கித் தலைகுனியச் செய்துள்ளது மாணவி பாத்திமாவின் தற்கொலை -மு.க.ஸ்டாலின் வேதனை!
“மாணவி ஃபாத்திமா லத்தீஃப்பின் தாயாரின் கூற்று, தமிழ் மண்ணின் மீது வைத்த நம்பிக்கை தகர்க்கப்பட்டதைக் காட்டுகிறது” எனத் தெரிவித்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ஐஐடி) மாணவி, ஃபாத்திமா லத்தீப், தனக்குத் தரப்பட்ட மன உளைச்சல் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்தவரான அவர், தனது தற்கொலைக்கு முன்பு எழுதியுள்ள குறிப்பில், தனது மரணத்திற்குக் காரணமான பேராசிரியர்களின் பெயர்களை வெளிப்படுத்தி […]
ஒவைசி மீது FIR : தாண்டவமாடும் அநீதி!
பாபர் பள்ளிவாசல் தீர்ப்பு குறித்து தீர்ப்பில் திருப்தி இல்லை.முஸ்லிம்கள் ஏழைகள், ஆனால் 5 ஏக்கர் நிலத்தை வாங்கி மசூதி கட்ட எங்களுக்கு பணம் சேகரிக்க முடியும். உங்களின் தர்மம் எங்களுக்கு தேவையில்லை என்று மனம் வெதும்பி கூறி இருந்தார். இந்நிலையில் இந்த பேச்சு ஒரு சமூக மக்களை தூண்டிவிடும் (!) வெறுப்பு பேச்சு என்று கூறி வக்கீல் பவன் குமார் என்பவர் கடந்த சனிக்கிழமை அன்று ஜஹாங்கிராபாத் காவல் நிலையத்தில் ஒவைசிக்கு எதிராக புகார் அளித்துள்ளார். அயோத்தியில் […]
கூடங்குளம் அணுஉலைகளை நிரந்தரமாக மூடுக ! – வைகோ
மத்திய அரசாங்கம் உடனடியாக கூடங்குளம் அணு உலைகளை நிரந்தரமாக மூடுவதற்கு வழிவகை காண வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.. இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ இன்று (31-10-19) வௌியிட்டுள்ள அறிக்கையில் : கூடங்குளம் அணுமின் நிலைய இணையதளம் ‘ஹேக்’ செய்யப்பட்டு, அதன் தகவல்கள் திருடப்பட்டு இருப்பதாக குர்கானைச் சேர்ந்த புக்ராஜ்சிங் என்பவர் அதிர்ச்சிதரத்தக்கச் செய்தியை தனது ‘டிவிட்டர்’ பதிவில் தெரிவித்து இருக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதியே இது பற்றிய தகவலைக் […]
கெஜ்ரிவால் டென்மார்க் செல்ல அனுமதி இல்லை!- மோதி அரசாங்கம் திட்டவட்டம்! !
டில்லி முதல்வர் கெஜ்ரிவால் டென்மார்க்கில் நடக்கவிருக்கும் சர்வதேச ‘பருவநிலை மாற்றம் ‘குறித்தான உச்சநிலை மாநாடுட்டில் கலந்துகொண்டு அவரது சாதனைகள் குறித்து பேச அழைக்கப்பட்டார். எனினும் அதில் கலந்து கொள்ள மோதி தலைமையிலான அரசு அவருக்கு அனுமதி வழங்கவில்லை. இது குறித்து “அனுமதியைப் பொருத்தவரை அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அக்டோபர் 9 முதல் 12 வரை நடைபெறவிருக்கும் மாநாட்டில் முதலமைச்சர் கலந்து கொள்ள முடியாது ”என்று தில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டெல்லி முதலமைச்சர், டேனிஷ் தலைநகரில் வைத்து […]
“தேசத் துரோக வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” -மு.க.ஸ்டாலின்!
இந்திய ஜனநாயகத்தையும், அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளையும் காப்பாற்றிட 49 பேருக்கு எதிரான தேசத் துரோக வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:“சிறுபான்மையினருக்கு எதிரான கும்பல் வன்முறையைத் தடுத்து நிறுத்துங்கள்” என்றும், “மத நல்லிணக்கத்தையும் சகிப்புத்தன்மையையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுங்கள்” என்றும் பிரதமருக்கு கடிதம் எழுதிய, புகழ்வாய்ந்த பல்துறைப் பிரமுகர்கள் 49 பேர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்திருப்பதற்கு திமுக சார்பில் கடும் […]
உதட்டில் காந்தி;உள்ளத்தில் கோட்ஸே-காந்தி பேரன் கடும் தாக்கு!
அவுரங்காபாத்: மஹாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் திரு. துஷார் காந்தி. இவர் “காவி (பாஜக) கட்சி உதட்டளவில் காந்தியை வைத்து கொண்டு மனதளவில் கோட்ஸேவை கொண்டு செயல்படுவதாக” குற்றம்சாட்டியுள்ளார். “ஒரு புதிய இந்தியா உருவாகி கொண்டு இருப்பதால் , ஒரு புதிய ‘தேச தந்தையும்’ உருவெடுத்துள்ளார். இப்படிப்பட்ட தேசத்திற்கு காந்திஜி ஒரு போதும் தேச தந்தையாக மாட்டார்” என்றும் கருத்து தெரிவித்தார். மேலும் சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் உள்ள காந்திஜியின் அஸ்தி திருடப்பட்டிருப்பது குறித்து ‘இது புனிதத்தன்மையை மதிக்காமல் செய்யப்பட்ட […]
ஒரு லட்சம் பேரின் கையொப்பங்களோடு மோதிக்கு கடிதம் திருமாவளவன் அறிவிப்பு!
இயக்குனர் மணிரத்தினம் உள்ளிட்ட 49 பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள தேசத் துரோக வழக்கை ரத்து செய்ய வேண்டும்-திருமாவளவன் கோரிக்கை !.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை.. ஒரு லட்சம் பேரின் கையொப்பங்களோடு பிரதமருக்குக் கடிதம்விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு. ~~~~~~~~~~~~பசுவின் பெயரால் நாடெங்கும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறையைக் கட்டுப்படுத்தக் கோரி இயக்குனர் மணிரத்தினம், வரலாற்றறிஞர் ராமச்சந்திர குஹா, நடிகை ரேவதி உள்ளிட்ட 49 பேர் கூட்டாகக் கடிதம் ஒன்றைக் கடந்த ஜூலை மாதத்தில் பிரதமருக்கு எழுதியிருந்தனர். […]
“கேள்வி கேட்பதும் அறிவுரை கூறுவதும் தேச துரோகமா?” -மஜக தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!
இந்தியாவில் தொடர்ந்து நடைபெறும் கும்பல் வன்முறை தாக்குதலுக்கு தடுக்க கோரி இயக்குநர் மணிரத்னம் உட்பட 49 பிரபலங்கள் கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோதிக்குக் கடிதம் எழுதினர். தற்போது அதன் பயனாக மணிரத்னம், ராமச்சந்திர குஹா, அபர்னா சென்,அனுராக் காஷ்யப் என கடிதம் எழுதிய 50 பிரபலங்கள் மீது தேச விரோத சட்டம் பாய்ந்துள்ளது. இதனை கண்டித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் மஜக பொது செயலாளர் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். “நாடெங்கிலும் நடக்கும் கும்பல் படுகொலைகளையும், சிறுபான்மையினர் […]
ஆக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம்; டாக்டர் கஃபில் கான் குற்றமற்றவர் என ஊர்ஜிதம்!
உபியில் 60 குழந்தைகள் மரணித்த சம்பவத்தில் 2 ஆண்டுகளுக்கு பின்னர் டாக்டர் கஃபில்கான் குற்றமற்றவர் என்று அறிவிப்பு ! கடந்த 2017 ஆம் ஆண்டு ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உபி மாநில கோரக்பூரில் உள்ள பிஆர்டி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 60 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்தனர்.இந்த கோர சம்பவம் நாட்டையே உலுக்கியது. குழந்தைகளை காப்பாற்றுவதற்காக டாக்டர் கஃபில் கான் தனது சொந்த பணத்தை செலவு செய்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வரவழைத்தார்.தன்னால் இயன்ற அளவு உயிர் சேதம் […]
மோதியின் ஆட்சியின் கீழ் ‘கும்பல் வன்முறை சம்பவங்கள்’ அதிகரித்து வருகின்றன!- சசி தரூர் கடும் தாக்கு!
மதத்தின் பெயரால் நடைபெறும் கொலைகள் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியியின் கீழ் அதிகரித்து வருகின்றன என காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் குற்றம் சாட்டியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் அகில இந்திய நிபுணத்துவ காங்கிரஸ் (ஏஐபிசி) கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் மோடி ஆட்சியை கடுமையாக சாடினார். “மோடி தலைமையிலான பாஜக ஆட்சி பொறுப்பேற்றது முதல், கடந்த 6 ஆண்டுகளாக நாம் எதை பார்த்து கொண்டிருக்கிறோம்? புனேவில் மொஹ்சின் […]
“ப. சிதம்பரத்திற்கு எதிராக எந்த ஒரு ஆதாரமும் இல்லை”-தி இந்து என்.ராம் அதிரடி!
‘….மிக முக்கியமாக தில்லி உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு கடுமையாக விமர்சனம் செய்யப்பட வேண்டியதாகும். ஏனெனில் இந்த வழக்கு விசாரணையில் ப. சிதம்பரம் மீது குற்றம்சாட்டும் தரப்பிற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது…..’
“இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும்!”- அமித்ஷா
இந்திய நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அமித்ஷா, “இந்தி நாளான (திவாஸ்) இன்று, நமது நாட்டின் அனைத்து குடிமக்களும் நமது தாய் மொழியை பயன்படுத்துவதை அதிகரிக்க வேண்டும். காந்தி, இறும்பு மனிதர் சர்தார் படேலின் கனவுகளான ஒரே நாடு, ஒரே மொழி என்ற கனவுக்கு இந்தியைப் பயன்படுத்தவோம். என்று தெரிவித்துள்ளார்.