உத்தரபிரதேச காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை (STF) சனிக்கிழமையன்று காஜிபூரில் இரண்டு கையெறி குண்டுகளுடன் ஆறு பேரை கைது செய்தது. குற்றவாளிகள் கையெறி குண்டுகளை பூர்வாஞ்சலின் தன்ஜி கும்பலுக்கு விற்க முயன்றதாக போலீசார் தெரிவிக்கின்றனர. கைது செய்யப்பட்ட 6 பேரும் மகேஷ் ரஜ்பர், நவீன் பஸ்வான், அபிஷேக் சிங், ரோகன் ராஜ்பர் மற்றும் ராகேஷ் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அனைவரும் காஜிபூரில் வசிப்பவர்கள். சென்னையில் பணிபுரியும் காஜிபூரைச் சேர்ந்த மேலும் மூன்று பேர் கையெறி குண்டுகளை தன்னிடம் […]
NIA
UAPA – அறிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான குறிப்புகள்..
ஒரு சுருக்கமான பின்னணி… இந்திய சுதந்திரம் உலகளாவிய பல மாற்றங்களின் பின்னணியில் உருவானது. ஐ.நா அவை உருவாக்கம், உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம் ஆகிய பின்னணியில் நமது அரசியல் சட்ட அவையில் விவாதங்கள் நடந்து பல நல்ல கூறுகளுடன் இந்திய அரசியல் சட்டம் 1951 இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.. அப்போதே நமது ஆட்சியாளர்கள் அன்றைய பொதுவுடைமைப் புரட்சிகளையும் அதன் இந்திய எதிரொலிகளையும் சுட்டிக் காட்டி பிரிட்டிஷ் அரசு காலத்திய தடுப்புக்காவல் சட்டம் ஒன்று இருண்ட்து என்றாலும் பெரிய […]
தேசிய பாதுகாப்பு சட்டம், யுஏபிஏ ஆகிய சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டோரின் மலைக்க வைக்கும் விவரங்கள்..
மத்திய உள்துறை துணை அமைச்சர் கிஷன் ரெட்டி மாநிலங்கள் அவையில் அளித்த விவரங்களின்படி, 2016, 17, 18 மூன்றாண்டுகளில் இச்சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 3005; கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 3974; விவரம் : 2016, 2017, 2018 ஆண்டுகளில் UAPA சட்டத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகள் முறையே 922, 901, 1182. ஒவ்வொரு ஆண்டும் கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை: 999, 1,554 , 1,421 ஆகும். இந்த மூன்று ஆண்டுகளிலும் தலா 232, 272 ,317 […]
NIA சட்டத்தை எதிர்த்து சட்டிஸ்கர் மாநிலம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு!
தேசிய புலனாய்வு அமைப்பு சட்டம், 2008 அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அறிவிக்கக் கோரி காங்கிரஸ் தலைமையிலான சத்தீஸ்கர் அரசாங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. கேரளாவை தொடர்ந்து சட்டிஸ்கர்: இதன் மூலம் NIA சட்டத்திற்கு எதிராக வழக்கு தொடரும் முதல் மாநிலமாக சட்டிஸ்கர் ஆகியுள்ளது. அதே போல கேரள அரசும் மத்திய அரசு கொண்டுவந்த சிஏஏ சட்டத்தை எதிர்க்க இந்திய அரசியலமைப்பின் 131 வது பிரிவை பயன்படுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மாநில அரசங்கத்திற்கு மத்திய அரசுடன் […]
பிரக்யா சிங் மீதான குண்டுவெடிப்பு விசாரணையை மீடியா வெளியிடாமல் இருக்க -நீதி மன்றத்தில் NIA மனு தாக்கல்!
File photo – PTI மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் நகரில் உள்ள பள்ளிவாசலில் 2008-ம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 10 வயது சிறுமி உள்பட 6 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அபிநவ் பாரத் என்ற இந்துத்துவ அமைப்பு இந்த வெடிகுண்டு சம்பவத்தை நிகழ்த்தியது. இந்த அமைப்பை இராணுவ புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த பிரசாத் ஸ்ரீகாந்த புரோஹித் என்பவர் தொடங்கினர். ஆரிய வர்த்தம் அல்லது இந்து ராஷ்டிரத்தை நிறுவும் பொருட்டு இந்த பயங்கரவாத அமைப்பு […]
“ஜாகிர் நாயக் மலேசியாவை விட்டு வெளியேற அதிரடி உத்தரவு”- பொய் செய்தியை வெளியிட்ட CNN நியூஸ்18 ஊடகம்.
Picture credit: network18 இந்தியாவின் பிரபலமான ஊடகங்களில் ஒன்றுதான் CNN நியூஸ்18. இந்த ஊடகம் பிரபல ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. பின்னாளில் நெட்வொர்க் 18ஆல் வாங்கப்பட்டது. ஆளும் அரசாங்கத்திற்கு சார்பாக செய்தி வெளியிடும் வட இந்திய தொலைக்காட்சிகளில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. அதே சமயம் தமிழில் இதே ஊடகம் நடுநிலையான ஊடகமாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு நியூஸ் 18 ஊடகம் பொய் செய்தி வெளியிடுவது இதுவே முதல் முறை இல்லை. இந்நிலையில் நேற்று ஜூலை 29 […]
“NIA முஸ்லிம் இளைஞர்களை குறிவைத்து கைது செய்கிறது”-சட்டமன்றத்தில் தமீமுன் அன்சாரி, அபூபக்கர் குற்றச்சாட்டு!
தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை தொடர்ந்து கைது செய்து வருவதாக எம்.எல்.ஏவும், மனிதனேய ஜனநாயக கட்சி நிறுவனருமான எம்.தமிமுன் அன்சாரி கடந்த வியாழக்கிழமை சட்டமன்றத்தில் கண்டனம் தெரிவித்தார். பிற்படுத்தப்பட்ட , மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூகத்தார் மேம்பாடு குறித்த விவாதத்தின் போது என்.ஐ.ஏ அப்பாவி முஸ்லிம்களை கைது செய்வதும் , உடனே அவர்கள் போட்டோக்கள் மற்றும் இதர விவரங்களை மீடியாக்களில் வழங்கி, பின் மறு தினமே இவர்கள் குற்றவாளிகள் இல்லை என்று […]
என்.ஐ.ஏ கைது செய்திருந்த 4 முஸ்லிம் வாலிபர்கள் தீவிரவாதிகள் இல்லை -ஆதாரமில்லாததால் விடுதலை !
NIA அமைப்பு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை குறிவைத்து கைது செய்து வருவது குறித்து பாராளுமன்றத்தில் காரசாரமான விவாதங்கள் நடந்து வரும் நிலையில், பயங்கரவாத செயல்களில் தொடர்புடையவர்கள் என்று கூறி கைது செய்யப்பட்ட 4 சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த நபர்கள் மீது போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர்கள் மீது இருந்த வழக்கை தேசிய புலனாய்வு (NIA ) அமைப்பு வாபஸ் பெற்றுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில் பயங்கரவாத செயலை நடத்த திட்டம் தீட்டியதாகவும், இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை […]
பாஜகவின் கையில் இன்னொரு ஆயுதம் என்.ஐ.ஏ.!
-Nakheeran Article சாமியார்கள் என்ற முகமூடி இருந்தால் போதும். சர்வசாதாரணமாக குண்டுவெடிப்புகளை நிகழ்த்தலாம். உயிர்களைப் பறித்து எளிதாக தப்பிவிடலாம் என்ற நிலை இந்தியாவில் உருவாகிக் கொண்டிருக்கிறதோ என்று சட்டத்துறை அறிஞர்களே பதற்றம் அடையும் நிலையை பாஜக ஏற்கெனவே செய்துகாட்டியது. ஏற்கெனவே, நீதித்துறையை பாஜக கைப்பற்றிவிட்டது என்ற குற்றச்சாட்டு வலுப்பெற்று வரும் நிலையில், புதிதாக அச்சப்படும் நிலையில் அப்படி என்ன செய்தது என்றுதானே கேட்கிறீர்கள்? அதைப்பற்றி பிறகு பார்க்கலாம். 2009 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் […]
“இந்து தீவிரவாதியாக இருக்க முடியாது” பிரதமர் பேச்சுக்கு முரணாக NIAவின் “மோஸ்ட் வாண்டட்” தீவிரவாத குற்ற பட்டியலில் இந்துக்கள் பெயர் பட்டியல்!
“ஒரு இந்து தீவிரவாதியாக இருக்க முடியாது” என்ற பிரதமர் மோடியின் கருத்து தேசிய தீவிரவாத தடுப்பு புலனாய்வு பிரிவான என்ஐஏவின் கூற்றுக்களுடன் பொருந்துவதாக இல்லை. பயங்கரவாத தொடர்பான வழக்குகளில் ‘மோஸ்ட் வாண்டட்’ என்பதற்கான ஒரு பகுதியை என்ஐஏ வலைத்தளம் கொண்டுள்ளது, இதில் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என பல்வேறு மதங்களைச் சேர்ந்த குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முஸ்லீம் பெயர் தாங்கிகளை ஒப்பிடும்போது மாவோயிஸ்டுகள் மற்றும் சிவப்பு கிளர்ச்சியாளர்கள் என்று அறியப்பட கூடிய […]