‘மீண்டும் 24 மணி நேரமாக உணவு வழங்கப்படவில்லை’: யோகி அரசால் கைது செய்யப்பட்டுள்ள சித்திக் கப்பனின் மனைவி வேதனை
Activists Arrests Islamophobia Journalist Muslims Uttar Pradesh

‘மீண்டும் 24 மணி நேரமாக உணவு வழங்கப்படவில்லை’: சித்திக் கப்பனின் மனைவி வேதனை ..

யுஏபிஏ குற்றம் சாட்டப்பட்டவரும், கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளருமான சித்திக் கப்பன், மதுரா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட அழைத்து வரப்பட்ட நாளில், அதற்கு முன்பான 24 மணி நேத்தில் அவருக்கு எந்த உணவும் வழங்கப்படவில்லை என அவரது குடும்பத்தினர் மற்றும் வக்கீல் தி க்விண்ட் ஊடகத்திடம் தெரிவித்துள்ளனர். அவரது மனைவி 37 வயதான ரைஹானா சித்திக்கிடம் பேசினோம், இவ்வாறு நடப்பது இது முதல் முறை அல்ல என்று கூறினார். அவரது வழக்கறிஞர் வில்ஸ் மேத்யூஸையும் நாங்கள் அணுகினோம்,இவ்வாறு மீண்டும் […]

BJP Hindutva Karnataka Lynchings Minority Muslims

கர்நாடகா: மாட்டை கடத்தி செல்வதாக பொய்யாக கூறி இருவர் மீது கொலைவெறி தாக்குதல் !

பாஜக ஆளும் கர்நாடகா மாநிலம், பெல்தங்கடியில் மார்ச் 31, புதன்கிழமையன்று வாகனத்தில் சென்று கொண்டிருந்த இருவரை வழிமறித்த பாசிச கும்பல், இருவரும் மாட்டை கடத்தி செல்வதாக பொய்யாக வம்புக்கு இழுத்து, அவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபப்பை ஏற்படுத்தி உள்ளது. எனினும் இச்செய்தி பெரும்பான்மை மீடியாக்களில் பெட்டி செய்தியாகவும் கூட வெளியிடப்படவில்லை. காயமடைந்தவர்கள் அப்துல் ரஹ்மான் மற்றும் முஹம்மது முஸ்தபா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பெல்டாங்கடி சர்ச் சாலையில் ஆம்னி காரில் […]

Karnataka Lynchings Muslims

கர்நாடகா: பள்ளிவாசலில் உறங்கி கொண்டிருந்த இமாம் மீது கொலைவெறி தாக்குதல் !

செவ்வாய்க்கிழமை இரவு மங்களூருவுக்கு அருகிலுள்ள கர்நாடகாவின் ஃபாரங்கிப்பேட்டே எனும் நகரில் பள்ளிவாசல் இமாம் ஒருவர் மீது கொலைவெறி தாக்குதல் நடைபெற்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாக்கப்பட்ட இமாம் குந்தாபூரில் வசிக்கும் முஷ்தாக் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இரவில் பள்ளிவாசலுக்குள் உறங்கி கொண்டிருந்த நேரத்தில் முஸ்தாக் மீது மூன்று பேர் அடங்கிய ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் சி.சி.டி.வி யில் பதிவாகியுள்ளதாகவும், விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். அருகிலுள்ள […]

இந்துத்துவாவினர் பிரச்சனை செய்ததால் பள்ளிவாசலின் ஒரு பகுதியை முஸ்லிம்களே இடித்த அவலம்!
Hindutva Islamophobia Minority Muslims New India

இந்துத்துவாவினர் பிரச்சனை செய்ததால் பள்ளிவாசலின் ஒரு பகுதியை முஸ்லிம்களே இடித்த அவலம்!

புது டில்லி: புது டில்லியில் உள்ள உத்தம் நகரில், 1980 -களின் பிற்பகுதியில் கட்டப்பட்ட ராஸா  ஜமா பள்ளிவாசலும், சனாதன் கோயிலும் வெறும் 25 அடி இடைவெளியில் அருகருகே கட்டப்பட்டது. கடந்த 35 ஆண்டுகளாக இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியது. ஆனால் தற்போதைய பிரித்தாளும் சூழ்ச்சியை கையாளும் அரசியல் தலைவர்களால் இந்த அமைதியான பன்முகத்தன்மை மாறி குறிப்பிட்ட மதச்சார்பு நிலை ஏற்ப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை விஸ்வருபம் எடுத்த நிலையில் , 1980 களில் இருந்து வசித்து வந்த […]

டில்லி கலவர வழக்கில் மகன் கைது; பிச்சை எடுத்து குழந்தைகளை காப்பாற்றும் முஸ்லிம் பெண்மணி !
Alleged Police Brutalities Delhi Pogrom Indian Judiciary Muslims

டில்லி கலவர வழக்கில் மகன் கைது; பிச்சை எடுத்து குழந்தைகளை காப்பாற்றும் முஸ்லிம் பெண்மணி !

மூன்று குழந்தைகளை கொண்ட 50 வயதான முஸ்லீம் பெண்மணி தபஸ்ஸும் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். டில்லி கலவர வழக்கில் ஷஹாபுதீன் என்ற அவரது மகன் கைது செய்யப்பட்டு ஓர் ஆண்டு நிறைவடைந்து விட்டது. கணவர் மற்றும் மூத்த மகன் பல ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டனர், பிறகு அவரது மகன் ஷாஹாபுதீன் மட்டுமே அவரது குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபராக இருந்தார். இவரை தான் போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது தபஸ்ஸும் தனது குழந்தைகளுடன் வடகிழக்கு […]

Hindutva Muslims Uttar Pradesh

உபி: பெயர் கேட்டு விட்டு என்னை தாக்க ஆரம்பித்து விட்டனர் – முஸ்லீம் இளைஞர் குற்றச்சாட்டு!

காஜியாபாத்தின் தஸ்னா கோவிலில் ஒரு சிறு முஸ்லீம் சிறுவன் தாக்கப்பட்ட சம்பவம் நடைபெற்ற ஒரு சில நாட்களில் இதுபோன்ற மற்றொரு சம்பவம் உத்தரபிரதேசத்தின் எட்டாவா மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளது. இச்சம்பவத்தில், 18 வயது சிறுவன் முஸ்லீம் இளைஞர் ஒருவர் எட்டாவாவில் உள்ள ஒரு கோவிலில் தாக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். எட்டாவா மாவட்டத்தின் கோட்வாலி பகுதியில் உள்ள பிதாம்பர மாதா கோவிலில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. […]

காஷ்மீர்: பழங்குடியின முஸ்லிம் குடும்பத்தை வழிமறித்து, பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்; குடும்பத்தார் மீது தாக்குதல் !
Kashmir Lynchings Minority Muslims

ஜம்மு: பழங்குடியின முஸ்லிம் குடும்பத்தை வழிமறித்து, பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்; குடும்பத்தார் மீது தாக்குதல் !

திலாவர், அவரது தந்தை ரபாக்கத் அலி, அவரது தாயார் மற்றும் அவரது சகோதரி ஆட்டு மந்தையின் பின்னால் நடந்து கொண்டிருந்தபோது ஒரு கார் அவர்கள் வழியில் வந்தது. அதிலிருந்து மூன்று ஆண்கள் இறங்கினர். திலாவரின் சகோதரியை நோக்கி வந்த அவர்கள், சகோதரியைப் பிடித்து காரில் இழுத்து போட முயன்றனர். உடனே திலாவரும் அலியும் மூவரையும் தள்ளி, அவர்களின் பிடியிலிருந்து பெண்ணை விடுவித்தனர். உடனே தாயிடம் ஓடினார் பாதிக்கப்பட்ட பெண். சிறிது நேரத்தில் மூவரும் எங்களை தாக்க ஆரம்பித்தனர்; […]

குஜராத்: இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்டர் வழக்கில் போலீஸ் அதிகாரிகளை தண்டிக்க மாநில பாஜக அரசு அனுமதி மறுப்பு !
BJP Gujarat Indian Judiciary Muslims

குஜராத்: இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்டர் வழக்கில் போலீஸ் அதிகாரிகளை தண்டிக்க மாநில பாஜக அரசு அனுமதி மறுப்பு !

அகமதாபாத்: 2004 இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்டர் வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி ஜி.எல். சிங்கால் உட்பட குற்றம் சாட்டப்பட்ட மூன்று காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குத் தொடர குஜராத் அரசு அனுமதி மறுத்துள்ளது என்று மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) சனிக்கிழமை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சிறப்பு நீதிபதி வி.ஆர்.ராவலின் உத்தரவின் பேரில் சிங்கால், தருண் பரோட் மற்றும் அனாஜு சவுத்ரி ஆகியோரைத் தண்டிக்க சிபிஐ மாநில அரசிடம் அனுமதி கோரியது. உத்தியோகபூர்வ கடமையை நிறைவேற்றுவதில் தவறி இருந்தாலும், […]

பிரான்ஸ்: ஹலால் இறைசிக்கு தடை விதிக்கும் வகையில் சுற்றறிக்கை !
France Islamophobia Muslims

பிரான்ஸ்: ஹலால் இறைசிக்கு தடை விதிக்கும் வகையில் சுற்றறிக்கை !

பிரெஞ்சு வேளாண்மை மற்றும் உணவு அமைச்சகத்தின் சுற்றறிக்கையின்படி, ஹலால் இறைச்சிகான தடை 2021 ஜூலை முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸ் மசூதி இயக்குனர் செம்செடின் ஹபீஸ் , லியோன் மசூதி கமல் கப்டேன் மற்றும் எவ்ரி மசூதி இயக்குனர் கலீல் மாரூன் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் பிரெஞ்சு அரசாங்கத்தின் “தீவிர அல்ட்ரா செக்குலர்” அணுகுமுறையை விமர்சித்ததோடு, “வேளாண்மை மற்றும் உணவு அமைச்சகத்தின் இச்சுற்றறிக்கை நாட்டின் மிக பெரும் முஸ்லீம் சமூகத்திற்கு எதிர்மறையான செய்தியை […]

உபி : முபாரக் கான் தர்காவை இடிக்க தடை விதித்து இடைக்கால உத்தரவிட்டது உச்சநீதிமன்றம் !
Muslims Uttar Pradesh

உபி : முபாரக் கான் தர்காவை இடிக்க தடை விதித்து இடைக்கால உத்தரவிட்டது உச்சநீதிமன்றம் !

உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள தர்கா முபாரக் கான் ஷஹீத்தில் அமைந்துள்ள எந்தவொரு கட்டமைப்பையும் இடிக்க தடை விதித்து உச்சநீதிமன்றம், உபி அரசுக்கு திங்களன்று நோட்டீஸ் அனுப்பியது. புகழ்பெற்ற இந்தி எழுத்தாளர் முன்ஷி பிரேம்சந்த் தனது மிகப் பிரபலமான கதைகளில் ஒன்றான ‘இத்கா’வை தர்கா முபாரக் கான் ஷஹீதில் வைத்து எழுதினார், இது தர்காவை பிரபலமாக்கியது. இந்த விவகாரத்தில் நீதிபதி நவின் சின்ஹா மற்றும் நீதிபதி கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் உத்தரபிரதேச மாநிலத்திற்கு நோட்டீஸ் […]

டில்லி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளித்து வரும் வக்கீலின் அலுவகத்தில் டில்லி போலீசார் மீண்டும் சோதனை..
Delhi Pogrom Muslims

டில்லி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளித்து வரும் வக்கீலின் அலுவலகத்தில் டில்லி போலீசார் மீண்டும் சோதனை..

கடந்த ஆண்டு பிப்ரவரியில் பாசிச பயங்கரவாதிகள் திட்டமிட்டு நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் பலர் உயிர் இழந்தனர், முஸ்லிம்கள் வீடுகள் சூறையாடப்பட்டு, துரத்தி அடிக்கப்பட்டனர். பாதிக்கபட்டவர்கள் மீதே டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர் என்று பலரும் எடுத்துக்காட்டி வருகின்றனர். இந்த வழக்குகளில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்ட பலருக்கும் மெஹ்மூத் பிராச்சா வழக்கறிஞராக இருந்து வருகிறார். மெஹ்மூதின் சட்ட நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரியின் “குற்றச்சாட்டு ஆவணங்கள்” மற்றும் “அவுட் பாக்ஸின் மெட்டாடேட்டா” ஆகியவற்றைத் தேடுவதற்காக […]

உபியில் கூட்டு பலாத்கார குற்றம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற சித்திக்குக்கு சிறையில் கடும் டார்ச்சர்- பிபிசி ரிப்போர்ட் !
Journalist Muslims Uttar Pradesh

உபியில் கூட்டு பலாத்கார குற்றம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற சித்திக்குக்கு சிறையில் கடும் டார்ச்சர்- பிபிசி ரிப்போர்ட் !

உபி ஹத்ராஸில் உள்ள புல்கரி கிராமத்தில் 19 வயது தலித் பெண் ஒருவர், உயர் சாதியை சேர்ந்த நான்கு நபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, உடலில் காயங்களுடன் உயிர் இழந்தார். பெண்ணின் மரணம் மற்றும் நள்ளிரவில் அவரது குடும்பத்தின் அனுமதியின்றி யோகியின் காவல்துறையினர் கட்டாய உடல் தகனம் செய்தது உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியாக அமைந்தது. குடும்பத்தினரையும் ஊடகங்களையும் இறுதி சடங்கிலிருந்து விலக்கி வைத்தனர்,காவல்துறையினர். இது குறித்து செய்தி வெளியிட ஆர்மபத்தில் கோதி மீடியாக்கள் மறுத்தன, […]

சிமி இயக்கித்தனர் என கைது செய்யப்பட்ட 122 பேறும் 20 ஆண்டுகளுக்கு பிறகு குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் விடுவிப்பு !
Gujarat Indian Judiciary Minority Muslims

சிமி இயக்கத்தவர் என கூறி கைது செய்யப்பட்ட 127 பேறும் 20 ஆண்டுகளுக்கு பிறகு குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் தீர்ப்பு !

குஜராத், சூரத் : கடந்த 2001 ஆம் ஆண்டு, ராஜேஸ்ரீ ஹாலில் இருந்து சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (யுஏபிஏ) பல்வேறு பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்ட 127 குற்றவாளிகளும், குற்றமற்றவர்கள் என இன்று (சனிக்கிழமை) நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனினும் இவர்கள் கைது செய்யப்படும் போது தொடர் செய்திகளாக்கி டி.ஆர்.பி ரேட்டிங்கை அதிகரித்து கொண்ட தொலைக்காட்சி ஊடகங்கள் யாவுமே, கைது செய்யப்பட்டவர்கள் நிரபராதிகள் எனபதை ஏனோ செய்தி ஆக்காமல் உள்ளனர். ஐந்து பேர் மரணம்: கைது செய்யப்பட்ட […]

மதரஸாக்களில் கீதை, ராமாயணம்,யோகா உள்ளடக்கிய கட்டாயமில்லா பாடங்கள் அறிமுகம்..
BJP Education Minority Muslims New India

மதரஸாக்களில் கீதை, ராமாயணம்,யோகா உள்ளடக்கிய கட்டாயமில்லா பாடங்கள் அறிமுகம்..

தேசிய திறந்தவெளி கல்வி நிறுவனம் (என்.ஐ.ஓ.எஸ்.) என்பது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி நிறுவனம். பள்ளி சென்று படிக்க முடியாதவர்கள், படிப்பை இடையில் நிறுத்தியவர்கள் இங்கு சேர்ந்து 10-ம் வகுப்பு 12-ம் வகுப்புத் தேர்வு எழுதலாம். 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடிப்படை கல்வியுடன் பாடங்களை தொடங்க என்.ஐ.ஓ.எஸ் (NIOS) திட்டமிட்டுள்ளது. “துவக்கத்தில் 100 மதரஸாக்களில் தொடங்க உள்ள இந்த திட்டம், எதிர்காலத்தில் 500 மதரஸாக்களில் விரிவுபடுத்துவோம்” […]

stop rape
Crimes Against Women Muslims Uttar Pradesh

உபி: நீதிமன்ற உத்தரவிற்கு பின்னும் முஸ்லிம் பெண்ணை பெற்றோரிடம் அனுப்ப மறுக்கும் அவலம்!

உபி, ஃபிரோஸாபாத் நகரை சேர்ந்தவர் 20 வயதுப்பெண் அஸ்ரா, இவர் தருண் என்கிற இந்து இளைஞனோடு காதல் வயப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் அஸ்ராவை திருமணம் செய்து கொண்டதாக தருண் கூறி வருகிறார். தருணின் தொடர் சித்திரவதைகளை தாங்கி கொள்ள முடியாமல் பெற்றோரிடம் செல்ல விரும்பி உள்ளார் அஸ்ரா, எனினும் தருண் அஸ்ராவை விட மறுத்து பிரச்சனை செய்யவே. பெண்ணின் குடும்பத்தார் மாயின்பூர் நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்றத்தில் இருதரப்பிலும் விசாரணை மேற்கொண்ட போது அஸ்ரா ஒரு மேஜர் எனவும், […]