ஹைதராபாத்: ராய்துர்காமில் உள்ள பழமையான குதுப் ஷாஹி மசூதியின் கூட்டுக் கணக்கெடுப்பு, தெலுங்கானா மாநில வக்ஃப் வாரியம் மற்றும் ரங்கா ரெட்டி மாவட்ட அதிகாரிகளால் புதன்கிழமை மஸ்ஜித் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் AIMIM எம்எல்ஏ கவுசர் மொகிதீன் முன்னிலையில் நடைபெற்றது. ஆவணங்களை சரிபார்த்த பிறகு, சர்ச்சைக்குரிய சர்வே எண் 82 மசூதிக்கு சொந்தமானது என்பது உறுதி செய்யப்பட்டது. பள்ளிவாசல் வளாகத்தில் இந்து தெய்வம்: அதனுடன், குதுப் ஷாஹி மசூதியின் எல்லைச் சுவரைப் புனரமைப்பதற்காக ரூ. 5 லட்சம் […]
Mosques
உபி : ஜமா பள்ளிவாசல் கோவில் என அங்கு வழிபாடு நடத்த வழக்கு; விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம்!
பதாவுன் நகரில் உள்ள ஜமா மஸ்ஜித் ஷம்சி, சிவன் கோயில் என்றும், சனாதன தர்மத்தை பின்பற்றுபவர்கள் அந்த இடத்தில் வழிபாடு நடத்த அனுமதிக்கக் கோரியும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்து மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் சனிக்கிழமை தெரிவித்தார் உபி: பதாவுன் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்களின் ஜமா பள்ளிவாசல், கோவிலை இடித்து கட்டப்பட்டது என்று இந்துத்துவா அமைப்பான அகில பாரதீய இந்து மகாசபா (ABHM) நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம்: ஆகஸ்ட் […]
இரவு 11:30 மணிக்கு கூடிய நீதிமன்றம்; ஈத்காவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி !
அஞ்சுமன்-இ-இஸ்லாம் தாக்கல் செய்த மனுவை நிராகரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், கர்நாடகாவின் ஹுப்பள்ளியில் உள்ள ஈத்கா மைதானத்தில் விநாயக சதுர்த்தி கொண்டாட்டங்கள் திட்டமிட்டபடி நடத்தலாம் என அனுமதி அளித்தது. உயர்நீதிமன்றம் தீர்ப்பு: ஹுப்பள்ளி ஈத்கா மைதானத்தில் விநாயகர் பந்தல் அமைக்க கர்நாடக உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 30ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்தது. நீதிபதி அசோக் எஸ் கினகி தலைமையிலான பெஞ்ச் இரவு 11.30 மணிக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ஹுப்பள்ளி மைதானம் தொடர்பாக ‘சொத்து தகராறு ஏதும் இல்லை” […]
ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதித்த உயர்நீதிமன்றம்!
புதுடெல்லி: பெங்களூரு சாமராஜ்பேட்டையில் உள்ள இத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி அளித்த கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கர்நாடக வக்பு வாரியம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு: முஸ்லீம் அமைப்பின் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு முன்பு இந்த விஷயத்தைக் குறிப்பிட்டு, இந்த விவகாரத்தை அவசரமாக விசாரிக்கக் கோரினார். அப்பகுதியில் தேவையற்ற மத பதற்றம் உருவாக்கப்படுவதாக சிபல் தெரிவித்தார். சுருக்கமான சமர்ப்பிப்புகளைக் கேட்ட உச்ச […]
குல்பர்கா கோட்டையில் கோயிலை மீட்டெடுக்க வேண்டும் இந்துத்துவா அமைப்புகள் கோரிக்கை !
இந்து ஜாக்ருதி சேனா அமைப்பினர் திங்கள்கிழமை கர்நாடக மாநிலம் குல்பர்காவில் உள்ள துணை ஆணையரிடம் பஹாமனி கோட்டையில் சிவன் கோவில் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாகவும், அங்கு பூஜை செய்ய அனுமதி கோரி மனு அளித்ததுள்ளனர். கல்புர்கி மாவட்டத்தில் 57 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பஹ்மானி கோட்டை, பஹ்மனி சுல்தானகத்தின் ஆட்சியாளரான ஹசன் பஹ்மானி ஷாவால் கட்டப்பட்டது. கோட்டைக்குள் ஜாமியா பள்ளிவாசல் ஒன்றும் உள்ளது. சோமலிங்கேஸ்வரர் கோவிலை இடித்து பஹ்மனி ஆட்சியாளர்கள் கோட்டையை கட்டியதாக இந்துத்துவ அமைப்புகள் கூறுகின்றன. கோட்டையின் […]
கர்நாடகா: 800 ஆண்டு பழமையான பள்ளிவாசலை சொந்தம் கொண்டாட முயலும் விஎச்பி ..
முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் ஒவ்வொன்றாக அபகரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வரும் வரிசையில் விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) மங்களூருவின் மலாலியில் உள்ள 800 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசலின் வளாகத்தில் ‘தாம்பூல பிரஸ்னா’ என்ற வெற்றிலை ஜோதிட முறையை மே 25 அன்று மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. கோயில் ஆக்கிரமிப்புக்குப் பிறகு மசூதி கட்டப்பட்டதா என கேரளாவைச் சேர்ந்த பிரபல ஜோதிடரை அணுகி ‘தாம்பூல பிரஸ்னா’ (வெற்றிலை ஜோசியத்தின்) மூலம் ஆய்வு (!) செய்ய திட்டமிட்டுள்ளதாக விஎச்பி வட்டாரங்கள் தெரிவித்தன. […]