இந்தியாவில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி இருக்கும் நிலையில், இந்தியாவின் எரிசக்தி இறக்குமதி சார்புநிலையை குறைப்பதில் முந்தைய அரசாங்கங்கள் கவனம் செலுத்தியிருந்தால் இன்று நடுத்தர மக்கள் சிரம படும் நிலை உண்டாகி இருக்காது என பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமையன்று தெரிவித்துள்ளார். கடந்த 2019-20 நிதியாண்டில் இந்தியா தனது எண்ணெய் தேவைக்காக 85%, எரிவாயு தேவைக்காக 53% க்கும் அதிகமாக இறக்குமதி செய்தது என மோடி குறிப்பிட்டார். தொடர்ச்சியாக ஒன்பதாவது நாளாக எரிபொருள் விகிதங்கள் உயர்த்தப்பட்டதை அடுத்து, […]
Modi
பிரதமர் மோடி புகைப்படம், பகவத் கீதையுடன் கூடிய செயற்கைக்கோள் விரைவில் விண்வெளிக்கு அனுப்பப்படும் ..
பகவத் கீதையின் நகல், பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் உட்பட 25,000 நபர்களின் பெயர்கள் சதீஷ் தவான் செயற்கைக்கோள் மூலம் விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் பி.எஸ்.எல்.வி (முனைய துணைக்கோள் ஏவுகலம்) மூலம் விண்வெளிக்கு கொண்டு செல்லப்படும். தி இந்துஸ்தான் டைம்ஸ் கருத்துப்படி, மாணவர்களிடையே விண்வெளி அறிவியலை ஊக்குவிப்பதற்காக உள்ள “ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா” என்ற அமைப்பு இந்த நானோ சாட்லைட்டை தனிப்பட்ட முறையில் உருவாக்கியுள்ளது. மூன்று முக்கிய காரணங்களுக்காக இது விண்ணில் […]
‘தேசத்துரோக வழக்கில் மோடி விசாரிக்கப்பட வேண்டும்!’- முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாத் கருத்து …
பாசிச சித்தாந்தந்தை எதிர்கொள்ளும் விதமாக திரு,கண்ணன் கோபிநாத் அவர்கள் தனது ஐ.ஏ.எஸ் பதவியில் இருந்து ராஜினாமா செய்திருந்தார். ராஜினாமா செய்தது முதல் பாசிச சித்தாந்தங்களுக்கு எதிராக முன்னணியில் நின்று போராடி வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் துணிச்சலான கருத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். “பிரதமர் மோடி அவர்களே, இந்திய நிலப்பரப்பை சீனாவிடம் ஒப்படைத்ததற்காக, பிறகு இது குறித்து நாட்டு மக்களை ஏமாற்றியதற்காகவும் தேசத் துரோக வழக்கில் நீங்கள் விசாரிக்கப்பட வேண்டும், விசாரிக்கப்படுவீர்கள்.” அறிந்து கொள்ளுங்கள். […]
பிரதமர் மோடியின் ஈத் பண்டிகை வாழ்த்துகளின் பின்னணி …
ஈத் பண்டிகை மற்றும் இம்மாதத்தில் முஸ்லிம்கள் கடைபிடிக்கும் நோன்பு முதலியன உலக அளவில் முக்கியமான ஒன்று. அதிலும் மிக அதிகமான அளவில் (20 கோடி முஸ்லிம்கள்) முஸ்லிம்கள் வசிக்கும் நாடு நம்முடையது. பொதுவாக ஒவ்வொரு ஜனநாயக நாட்டிலும் சிறுபான்மை மக்களின் பண்டிகைக்கு அரசு சார்பில் வாழ்த்துக்கள் சொல்வது, விருந்தளிப்பது, அவர்களின் பண்பாட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, தொப்பி முதலான அம் மக்களின் அடையாளங்களை அவர்களோரு சற்று நேரம் அணிந்திருப்பது, நடனமாடும் மரபுள்ள நாடுகளில் அவர்களோடு நடனமாடுவது முதலியன ஒரு […]
மோடியின் பங்களாதேஷ் பயணம் ரத்து …
மார்ச் 17 அன்று ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பிறந்த நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடக்கவிருந்த மாபெரும் பேரணியை பங்களாதேஷ் அரசு ஒத்திவைக்க முடிவு செய்துள்ளது. இதனையடுத்து இந்நிகழ்விற்கு அழைக்கப்பட்டிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பங்களாதேஷ் பயணம் ரத்தாகியுள்ளது. பங்களாதேஷில் இதுவரை மூன்று பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யபட்டுள்ளது. டெல்லியில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து பங்களாதேஷில் பிரமாண்டமான மக்கள் போராட்டங்கள் நடைபெற்றது. அதில் மோடி அரசுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு திரும்ப பெற வேண்டும், மோடி பங்களாதேஷிற்குள் […]
‘மோடியிடமே குடியுரிமை சான்றிதழ் இல்லை’ – எழுப்பப்படும் வாதங்கள் ஏற்புடையதா?
பிரதமர் நரேந்திர மோடியின் குடியுரிமைச் சான்றிதழைக் கோரி சுபங்கர் சர்க்கார் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த ஆர்டிஐக்கு பிரதமர் அலுவலகம் பதில் அளித்துள்ளது. மோடி பிறப்பால் ஒரு இந்திய குடிமகன் என்பதால் அவருக்கு குடியுரிமை சான்றிதழ் இருக்கிறதா என்ற கேள்வியே எழுவதில்லை என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது. “பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி 1955 குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 3 ன் படி பிறப்பால் இந்தியாவின் குடிமகன் ஆவார், எனவே அவர் பதிவு […]
‘எப்போ பார் பாகிஸ்தான், நேரு … முக்கிய பிரச்சனை பத்தி பேசுங்க மோடி ஜி’ – ராகுல் கடும் தாக்கு!
வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் உரையில் பாகிஸ்தான் மற்றும் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பற்றி தான் பிரதமர் மோடி பேசியுள்ளார். இது நாட்டின் முக்கிய பிரச்சினைகளில் இருந்து திசைதிருப்பும் ஒரு நடவடிக்கை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். “பிரதமர் மோடியின் பாணி நாட்டை முக்கிய பிரச்சினைகளிலிருந்து திசை திருப்புவதாகும். அவர் காங்கிரஸ், ஜவஹர்லால் நேரு, பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார், ஆனால் முக்கிய பிரச்சினைகள் பற்றி வாய்திறப்பதில்லை” “இன்றைய மிகப்பெரிய பிரச்சினை வேலையின்மை, […]
மோடி, ராம்நாத் கோவிந்த் மற்றும் வெங்கையா நாயுடு பயணிக்க ரூ.8,458 கோடியில் பிரத்யேக விமானங்கள்..
இந்த விமானங்கள் தயாரிப்பு குறித்த ஒப்பந்தம் கடந்த 2006ஆம் ஆண்டில் அமெரிக்காவை தளமாகக் கொண்ட விமான தயாரிப்பாளர் நிறுவனமான போயிங்குடன் ஏர் இந்தியா நிறுவனம் செய்து கொண்டதாகும்; இந்த விமானங்கள் வி.வி.ஐ.பி-களின் பயணத்திற்காக பிரத்தியேகமாகப் பயன்படுத்தப்படும். பட்ஜெட்டில் ஒதுக்கீடு: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் சமீபத்திய பட்ஜெட் உரையில், சிறப்பு கூடுதல் பிரிவு விமான நடவடிக்கைகளுக்காக (எஸ்.இ.எஸ்.எஃப்) இரண்டு புதிய விமானங்களை வாங்க மொத்தம் ரூ .810.23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளின் (2018/19 […]
’15 லட்சம் தருவதாக கூறி ஏமாற்றிவிட்டனர்’ மோடி, அமித் ஷா மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு !
வழக்கறிஞர் எச்.கே.சிங், பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா மீது வழக்கு பதிவு செய்துள்ளார். ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு நபரின் வங்கிக் கணக்கிலும் ரூ .15 லட்சம் போடுவதாக உறுதியளித்து மக்களை ஏமாற்றியதாக குற்றம் சாட்டியுள்ளார். புகார் தொடுக்கப்பட்டவர்கள்: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மோசடி மற்றும் நேர்மைத்தவறி நடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான வழக்கில் ராஞ்சியில் உள்ள ஒரு மாவட்ட நீதிமன்றம் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இந்த வழக்கில் மூன்றாவது […]
‘விட்டா தாஜ்மகாலை கூட வித்துடுவார் மோடி’ – ராகுல் காந்தி கடும் தாக்கு…
டெல்லி சட்டமன்ற தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் நேற்று தெற்கு டெல்லியில் ஜங்புராவில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு ராகுல் காந்தி பேசினார். அப்போது பேசிய அவர் “சீனாவைத் தவிர உலகில் மற்ற அனைத்து நாடுகளும் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புகிறது. ஆனால் தற்போதுள்ள (புதிய) இந்தியாவை அவர்கள் காணும்போது வெறுப்பு, வன்முறை, கற்பழிப்பு, ரவுடித்தனம், கொலைகள் ஆகியவற்றையே காண்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் நீங்கள் எங்கு பார்த்தாலும், ஒரு இந்தியர் மற்றொரு இந்தியருடன் வெறுப்புணர்வுடனேயே பேசும் […]
குஜராத் கலவரம்: மோடி குற்றமற்றவர் என்ற எஸ்ஐடியின் அறிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் விசாரணை தேதி அறிவிப்பு..
குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி இருந்த சமயத்தில் 2002 ஆம் நடைபெற்ற கலவரத்தில் மோடி குற்றமற்றவர் என்று எஸ்ஐடி யின் “கிளீன் சிட்” ஐ எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு “பல முறைகள் ஒத்திவைக்கப்பட்டு வந்துள்ளதாகவும், என்றாவது ஒரு நாள் வழக்கை விசாரிக்க தானே வேண்டும்” என்று தெரிவித்த உச்சநீதிமன்றம் வரும் ஏப்ரல் 14ம் தேதி வழக்கை விசாரிப்பதாக தெரிவித்துள்ளது. நடந்த சம்பவம்: குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடைபெற்றது. எந்த வித […]
“பாஜகவுக்கு ஒட்டு போடலைனா கற்பழிக்கப்படுவீர்கள், இதுவா உங்கள் தேர்தல் பிரச்சார செய்தி?” – பிரதமர் மோடிக்கு பெண்கள் அமைப்பினர் கடிதம் !
டில்லியில் பாஜக தலைவர்கள் தொடர்ந்து வெறுப்பு பேச்சுக்களை பேசிவருவதும் ” பிரச்சாரங்களில் பாலியல் பலாத்காரத்தை கொண்டு மிரட்டல் விடுப்பதும் “அச்சம்” அளிக்கும் விதத்தில் உள்ளது என 170 க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண்கள் குழுக்கள் திங்களன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு திறந்த கடிதத்தை அனுப்பியுள்ளனர். பாஜக தலைவர்கள் வன்முறையான சூழலை உருவாக்கி விட்டனர்: அந்தக் கடிதத்தில், குடியுரிமை (திருத்தம்) சட்டம் (CAA), குடிமக்களின் தேசிய பதிவேடு (NRC) மற்றும் தேசிய மக்கள் தொகை […]
பிரதமர் மோடியின் பாதுகாப்பு செலவு 420 கோடியிலிருந்து 600 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது!
பிரதமரைப் பாதுகாக்கும் பணியில் உள்ள சிறப்புப் பாதுகாப்பு படையினரின் ஒதுக்கீட்டை மத்திய அரசாங்கம் ரூ .540 கோடியிலிருந்து சுமார் 600 கோடியாக உயர்த்தியுள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் இது ரூ .420 கோடியிலிருந்து சுமார் ரூ .540 கோடியாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது 3000 பேர் கொண்ட சிறப்பு பாதுகாப்புக் படையினரால் பாதுகாப்பு வழங்கப்படும் ஒரே நபர் பிரதமர் மோடி மட்டுமே. நாட்டின் ஜனாதிபதியும் கூட இந்த பட்டியலில் இல்லை. முன்னாள் பிரதமர் குடும்பத்தினரின் பாதுகாப்பு நீக்கம்: […]
பிரதமர் மோடி இந்திய குடிமகனா? ஆவணங்களை கோரி ஆர்.டி.ஐ விண்ணப்பம் தாக்கல் !
நாடெங்கும் மோடி அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டதிற்கு எதிராக எழுச்சி போராட்டங்கள் நடைபெற்று வரும் வேளையில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு இந்திய குடிமகனா என்பதை அறிந்து கொள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்.டி.ஐ) கீழ் விண்ணப்பிக்க பட்டுள்ளது. விண்ணப்பித்தவர் யார்? இது தொடர்பாக கடந்த ஜனவரி 13 ம் தேதி திருச்சூர் மாவட்டம் சாலக்குடியைச் சேர்ந்த ஜோஷ் கல்லுவெட்டில் என்பவர் விண்ணப்பம் செய்துள்ளார். அதில் அவர் பிரதமர் நரேந்திர மோடியின் குடியுரிமையை […]
“நிரூபியுங்கள் அல்லது மன்னிப்பு கேளுங்கள்” – மோடியை கடுமையாக விமர்சித்த இந்திய மருத்துவ சங்கம்!
பெண்கள், விலை உயர்ந்த கேஜெட்டுகள் அல்லது வெளிநாட்டு பயணங்கள் என நாட்டின் மிக பெரும் மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் மருத்துவர்களுக்கு லஞ்சம் வழங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இந்திய மருத்துவ சங்கம் (IMA) பிரதமர் மோடி குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் அல்லது மன்னிப்பு கோர வேண்டும் என தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி 2 ஆம் தேதி புதுதில்லியில் ஜைடஸ் காடிலா, டோரண்ட் பார்மாசூட்டிகல்ஸ் மற்றும் வோக்ஹார்ட் உள்ளிட்ட உயர்மட்ட […]