ஒரு அரசு சாரா நிறுவனத்தின் உதவி எண் மூலம் பெறப்பட்ட அழைப்புகளின் தரவுகளின் அடிப்படையில் இந்த ஆண்டு ஜூலை வரை கிறிஸ்தவர்கள் மீது 300-க்கும் மேற்பட்ட தாக்குதல்தல்கள் நடைபெற்றுள்ளதாக, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல். இந்த மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ‘பொய்யானவை’ ‘உள்நோக்கம் கொண்டவை’ என்றும் உச்ச நீதிமன்றத்தில் மோடி அரசு தெரிவித்துள்ளது. உபியில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்: கடந்த ஆகஸ்ட் 28 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள ஹர்சந்த்பூர் என்ற கிராமத்தில் மூன்று நபர்கள் […]
Minority
வெறுப்பு பிரச்சாரம், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு -இந்திய கத்தோலிக்க யூனியன்
புதுடெல்லி: சமீப காலமாக இந்தியாவில் மத நல்லிணக்கதிற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து மற்றும் மத சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரங்களை குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக மிகப்பெரிய மற்றும் பழமையான கிறிஸ்தவ அமைப்பான அகில இந்திய கத்தோலிக்க யூனியன் (AICU) புதன்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களை ஆரம்பத்திலேயே தக்க முறையில் கட்டுபடுத்த தவறினால், அது தேசிய அமைதி மற்றும் சேதத்திற்கு சொல்லொணாத் தீங்கு விளைவிக்கும் என்றும் கிறிஸ்தவ அமைப்பு எச்சரித்துள்ளது. இந்த போக்கை மாற்றியமைக்கவும், […]
அசாம்: மீன் வியாபாரி ஷஃபிகுல் இஸ்லாம் போலீசார் கஸ்டடியில் மரணம் !
அசாமில் மீன் வியாபாரி ஷஃபிகுல் இஸ்லாம் போலீஸ் காவலில் இறந்து 2 நாட்களுக்குப் பிறகு, போலீசார் அவரது மனைவி ரஷிதா காதுன் மற்றும் அவரது மகள் 8 ஆம் வகுப்பு மாணவியை போலீசார் கைது செய்துள்ளனர். அசாமில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. போலீசார் காவலில் வைக்கப்படிருந்த ஷஃபிகுல் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து படத்ராபா காவல் நிலையத்தை எரித்ததாகக் கூறப்படும் சைஃப்பின் மனைவி மற்றும் மகள் உட்பட குறைந்தது 6 பேர்களில் 5 பேரின் மீது யுஎபிஎ சட்டத்தின் […]
பஞ்சாப்: ‘ஒவ்வொரு சீக்கியரும் உரிமம் பெற்ற ஆயுதம் வைத்து கொள்ள வேண்டும்’
ஒவ்வொரு சீக்கியரும் உரிமம் பெற்ற நவீன ஆயுதங்களை வைத்திருக்க வேண்டும், ஏனெனில் “காலம் அப்படிதான் உள்ளது” என அகல் தக்த் ஜதேதார் கியானி ஹர்ப்ரீத் சிங், திங்கள்கிழமை, மே 23, கருத்து தெரிவித்தார். ஒரு பக்கம் அவரது கருத்து விமர்சிக்கப்ட்டாலும் மறுபுறம் நாட்டின் சிறுபான்மையினரின் நிலையைக் கருத்தில் கொண்டு தற்காப்புக்காக ஆயுதங்களை வைத்திருப்பதில் தவறில்லை என்று பல நிபுணர்களும் நியாயப்படுத்தினர். “இன்றும் கூட, குறிப்பாக சீக்கிய சிறுவர்கள் மற்றும் பெண்கள், குரு ஹர்கோவிந்த் சிங்கின் கட்டளைகளைப் பின்பற்ற […]
கர்நாடகா: புர்காவை கழற்ற சொல்லி கொடூர தாக்குதலில் ஈடுபட்ட மதவெறி கும்பல்!
சனிக்கிழமையன்று பாஜக ஆளும் கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் மதவெறி கும்பல் ஒன்று ஆறு முஸ்லிம் ஆண்கள் மீது கொடூரமான தாக்குதலில் ஈடுபட்டனர். அருகில் உள்ள ஒரு தர்காவிற்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த ஒரு முஸ்லீம் குடும்பத்தின் காரை ஒரு மதவெறி கும்பல் தடுத்து நிறுத்தி, வாகனத்தின் உள் இருந்த பெண்களிடம் “புர்காவைக் கழற்றுமாறு” கூறியதை அடுத்து இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது, இதில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்புக்கு வழிவகுத்தது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எஃப்ஐஆர்: தாக்குதல் நடத்தியவர்கள் […]
உபி: பாபர் பள்ளிவாசலுக்கு பிறகு மீண்டும் ஒரு பள்ளிவாசல் இடிப்பு; நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி பள்ளிவாசல் இடிப்பு !!
மாநில உயர்நீதிமன்ற உத்தரவை மீறி உத்தரபிரதேசத்தின் உள்ளூராட்சி நிர்வாகம் முஸ்லிம்களின் பழமையான பள்ளிவாசல் ஒன்றை இடித்து தரைமட்டம் ஆக்கி உள்ள சம்பவம் நாட்டில் எந்த பரபரப்பையும் ஏற்ப்படுத்த வில்லை. 1992 ஆம் ஆண்டு சட்ட விரோதமாக இந்துத்துவா வன்முறையாளர்களால் இடிக்கப்பட்ட பாபர் பள்ளிவாசல் நிகழ்வுக்கு பிறகு இது போன்ற ஒரு நிகழ்வை பாஜக மாநில அரசே முன்னின்று சட்டவிரோதமாக தற்போது அரங்கேற்றி உள்ளது. இது குறித்து நாம் செய்தி வெளியிடும் இந்த கணம் வரை இந்தியாவில் உள்ள […]
’15 ஆண்டுகளாக பாஜக வுக்கு ஆதரவு அளித்து வருகிறேன்..’கூர்க்கா சமூகத்திற்கு அவர் அளித்த வாக்குறுதி இன்னமும் நிறைவேற்றவில்லை..
பாரதீய ஜனதா கட்சி தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், 2014 முதல் கூர்க்கா சமூகத்துக்காக எதுவும் செய்யவில்லை என்றும் கோர்கலான்ட் ஜன்முக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்) தலைவர் பிமல் குருங் சனிக்கிழமை குற்றம் சாட்டினார். மேலும் வங்காளத்தில் பிஜேபிக்கு மக்கள் ஆதரவு இல்லை என்றும், எனவே மாநிலத்தில் பாஜக அரசாங்கம் அமைய வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார். தற்போது நடைபெற்று வரும் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் வாய்ப்புகள் குறித்து கேட்க பட்டபோது, “அவர்களுக்கு (பாஜக) வங்காளத்தில் […]
என்.சி.பி.யூ.எல் மூலம் ஆர்எஸ்எஸ் தலைவரின் புத்தகம் வெளியீடு; உருது அறிஞர்கள் முன்னால் கவுன்சில் தலைவர்கள் கண்டனம் !
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தின் புத்தக வெளியீட்டு விழாவில் அனைத்துப் பணியாளர்களும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என உருது மொழி ஊக்குவிப்பிற்கான தேசிய கவுன்சில் (என்.சி.பி.யூ.எல்) உத்தரவிட்டுள்ளது. மோகன் பகவத் எழுதியுள்ள ’முஸ்தக்பில் கா பாரத்’ புத்தகத்தின் உருது பதிப்பு வெளியிடுட்டு விழாவில் கலந்து கொள்ள பணியாளர்க்ளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கலந்து கொள்ள தவறுபவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மார்ச் 31 ஆம் தேதி மத்திய உயர் கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “ஏப்ரல் […]
உபி: ஹோலி கொண்டாட்டத்தின் பெயரில் முஸ்லிம் குடும்பத்தார் வீட்டினுள் நுழைந்து பொருட்களை நாசம் செய்த பாசிச கும்பல் !
உபி யில் மோடியின் தொகுதியான வாரணாசியில் ஹோலி கொண்டாட்டம் என்ற பெயரில் பாசிச கும்பல் ஒன்று ஒரு முஸ்லீம் குடும்பத்தார் வீட்டினுள் நுழைந்து, அவர்களின் வீட்டு பொருட்களையும், ஒரு சிறிய தொழிற்சாலையையும் அடித்து நொறுக்கி, அங்கு வசிக்கும் பெண்களையும் தாக்கி உள்ளனர். வீட்டில் இருந்த பணத்தையும் திருடி சென்றுள்ளனர். காவல்துறையினர் குண்டர்களுடன் பக்கபலமாக இருந்து பாதிக்கப்பட்டவர்களை மேலும் தாக்கி முஸ்லிம்கள் மீதே வழக்கு பதிவு செய்தனர் என சப்ரங் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. காவல்துறை மற்றும் சட்டத்தை […]
கர்நாடகா: மாட்டை கடத்தி செல்வதாக பொய்யாக கூறி இருவர் மீது கொலைவெறி தாக்குதல் !
பாஜக ஆளும் கர்நாடகா மாநிலம், பெல்தங்கடியில் மார்ச் 31, புதன்கிழமையன்று வாகனத்தில் சென்று கொண்டிருந்த இருவரை வழிமறித்த பாசிச கும்பல், இருவரும் மாட்டை கடத்தி செல்வதாக பொய்யாக வம்புக்கு இழுத்து, அவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபப்பை ஏற்படுத்தி உள்ளது. எனினும் இச்செய்தி பெரும்பான்மை மீடியாக்களில் பெட்டி செய்தியாகவும் கூட வெளியிடப்படவில்லை. காயமடைந்தவர்கள் அப்துல் ரஹ்மான் மற்றும் முஹம்மது முஸ்தபா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பெல்டாங்கடி சர்ச் சாலையில் ஆம்னி காரில் […]
கண்ணூர்: மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கர்ப்பிணிப் பெண் வாகனம் மீது பாஜகவினர் தாக்குதல்; போலீசார் வழக்கு பதிவு !
கண்ணூர்: மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணின் வாகனம் மீது பாஜகவினர் தாக்கியதாக பிலதாரா போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த அப்பெண் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மலையாள ஊடகமான மாத்ரபூமி செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 10 க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இவ்வழக்கு தொடர்பாக சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் : இந்த சம்பவம் (நேற்று) திங்கள்கிழமை பயன்னூர் அருகே உள்ள எடாட் […]
இந்துத்துவாவினர் பிரச்சனை செய்ததால் பள்ளிவாசலின் ஒரு பகுதியை முஸ்லிம்களே இடித்த அவலம்!
புது டில்லி: புது டில்லியில் உள்ள உத்தம் நகரில், 1980 -களின் பிற்பகுதியில் கட்டப்பட்ட ராஸா ஜமா பள்ளிவாசலும், சனாதன் கோயிலும் வெறும் 25 அடி இடைவெளியில் அருகருகே கட்டப்பட்டது. கடந்த 35 ஆண்டுகளாக இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியது. ஆனால் தற்போதைய பிரித்தாளும் சூழ்ச்சியை கையாளும் அரசியல் தலைவர்களால் இந்த அமைதியான பன்முகத்தன்மை மாறி குறிப்பிட்ட மதச்சார்பு நிலை ஏற்ப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை விஸ்வருபம் எடுத்த நிலையில் , 1980 களில் இருந்து வசித்து வந்த […]
பாஜக ஆளும் ஹரியானா குர்கானில் செவ்வாயன்று இறைச்சி கடைகள் மூட உத்தரவு !
பாஜக ஆளும் ஹரியானாவில் சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறைகள் ஒரு தொடர் கதையாக உள்ளது. அதில் ஒன்றாக தற்போது குருக்ராம் மாநகராட்சி ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அன்றும் இறைச்சி கடைகளை மூட வேண்டும் என சட்டம் கொண்டு வந்துள்ளது பாஜக வின் கீழ் செயல்படும் மாவட்ட நிர்வாகம். குடிமை அமைப்பின் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 129 உரிமம் பெற்ற இறைச்சி கடைகளில், “குறைந்தது 120” செவ்வாயன்று மூடப்படிருந்தது என எம்.சி.ஜி.யின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குருகிராம் மாநகராட்சி மற்றும் குர்கான் […]
ஜம்மு: பழங்குடியின முஸ்லிம் குடும்பத்தை வழிமறித்து, பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்; குடும்பத்தார் மீது தாக்குதல் !
திலாவர், அவரது தந்தை ரபாக்கத் அலி, அவரது தாயார் மற்றும் அவரது சகோதரி ஆட்டு மந்தையின் பின்னால் நடந்து கொண்டிருந்தபோது ஒரு கார் அவர்கள் வழியில் வந்தது. அதிலிருந்து மூன்று ஆண்கள் இறங்கினர். திலாவரின் சகோதரியை நோக்கி வந்த அவர்கள், சகோதரியைப் பிடித்து காரில் இழுத்து போட முயன்றனர். உடனே திலாவரும் அலியும் மூவரையும் தள்ளி, அவர்களின் பிடியிலிருந்து பெண்ணை விடுவித்தனர். உடனே தாயிடம் ஓடினார் பாதிக்கப்பட்ட பெண். சிறிது நேரத்தில் மூவரும் எங்களை தாக்க ஆரம்பித்தனர்; […]
சிமி இயக்கத்தவர் என கூறி கைது செய்யப்பட்ட 127 பேறும் 20 ஆண்டுகளுக்கு பிறகு குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் தீர்ப்பு !
குஜராத், சூரத் : கடந்த 2001 ஆம் ஆண்டு, ராஜேஸ்ரீ ஹாலில் இருந்து சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (யுஏபிஏ) பல்வேறு பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்ட 127 குற்றவாளிகளும், குற்றமற்றவர்கள் என இன்று (சனிக்கிழமை) நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனினும் இவர்கள் கைது செய்யப்படும் போது தொடர் செய்திகளாக்கி டி.ஆர்.பி ரேட்டிங்கை அதிகரித்து கொண்ட தொலைக்காட்சி ஊடகங்கள் யாவுமே, கைது செய்யப்பட்டவர்கள் நிரபராதிகள் எனபதை ஏனோ செய்தி ஆக்காமல் உள்ளனர். ஐந்து பேர் மரணம்: கைது செய்யப்பட்ட […]