சமீபத்தில் பேராசிரியர் அப்துல் ரஹ்மான் மரணித்தார் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அவர் விட்டுச் சென்ற மனித உரிமைப் பணிகளை முன்னெடுப்போம்;பாசிச சூழலை திடமாக எதிர்கொள்வோம் ! அப்துல் ரகுமான் கிலானி, டெல்லி பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் ஜாகிர் உசேன் கல்லூரியில் அரபி மொழி கற்பித்து வந்த பேராசிரியர். 2001-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு பத்து பேர் மாண்டு போனார்கள். இது தொடர்பாக அப்சல்குரு […]
Kashmir
காஷ்மீர்:மனித உரிமைகள் ஆணையத்தை மூடிய மோதி அரசாங்கம்!
ஜனநாயகத்தின் முக்கிய தூண்களாக கருதப்படும் மனித உரிமைகள் ஆணையம், தகவல் உரிமை ஆணையம் உள்ளிட்ட 7 ஆணையங்களை ஜம்மு காஷ்மீரில் அதிரடியாக மூட மத்திய மோதி அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கையில் வரும் அக்டோபர் 31 முதல் மொத்தம் ஏழு மாநில கமிஷன்கள் கலைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் கலைக்கப்பட்டதற்கான எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை. கலைக்கப்பட்ட கமிஷன்கள்: ஜம்மு-காஷ்மீர் மாநில மனித உரிமைகள் ஆணையம் (எஸ்.எச்.ஆர்.சி)மாநில தகவல் ஆணையம் (SIC)மாநில […]
காஷ்மீர்; இஸ்லாத்தில் தற்கொலை அனுமதிக்கப்பட்டிருந்தால், நான் அதைச் செய்திருப்பேன்! -முஸாபர் நபி!
காஷ்மீர்: புல்வாமா பகுதியின் முசாபர் நபி என்பவரின் தொடைகள், மார்பு மற்றும் உள்ளங்கை பகுதிகளில் மின்சாரம் பாய்ச்சப்பட்டும் குச்சிகள் மற்றும் கம்பிகளால் அடிக்கப்பட்டு உள்ள நிலையில் இருக்கும் புகைப்படம் என்று சர்வதேச ஊடகமான தி வாஷிங்க்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுளளது. பல சிராய்ப்புகள், பிடுங்கப்பட்ட நிலையில் நகங்கள் , வாந்தி, நெற்றி மற்றும் கை பகுதிகளில் புற அதிர்ச்சி காயங்கள் போன்றவை ஏற்பட்டுள்ளன என்று மருத்துவமனை ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. முசாபருக்கு ஏற்பட்ட கடுமையான காயங்களால் ஒரு வாரம் படுத்த படுக்கையான நிலையில் […]
“குங்குமப்பூ பள்ளத்தாக்கில் விதவைக்கோலம்!”-சிறுபான்மைத்துறை காங்கிரஸ் தலைவர் அஸ்லம் பாஷா கண்டனம்!
ஆஷிபா என்ற சிறுமியை வண்புணர்வு செய்து கொலை செய்ததின் பின்னனியில் முஸ்லீம்களை அச்சுறுத்தி அகதிகளாக வெளியேற்றிவிட வேண்டும்…
ஒரு காஷ்மீரி – இஸ்ரோ தலைவர் சிவனுக்கு எழுதிய மடல்! டியர் மிஸ்டர் சிவன்..!
சந்திரயான் தொடர்பு துண்டிக்கப்பட்டபோது எந்த அளவு மன அழுத்தத்தோடு இருந்தீர்களோ அதை விட அதிக மன அழுத்தத்தோடு உள்ளேன். உங்கள் முதுகை தட்டிக் கொடுக்க பிரதமர் மோடி உங்களோடு இருந்தார். எனது முதுகை தட்டி எனது மன அழுத்தத்தை குறைப்பது யார்?…
காஷ்மீர்! :”எங்கள் குழந்தைகள் சிறையில் வாடுகின்றனர்” – கண்களை ஈரமாக்கும் “தி வாஷிங்க்டன் போஸ்டின்” களநிலவரம்!
“நான் அழைத்து செல்லப்பட்ட வேனில் மற்ற சிறுவர்களும் இருந்தனர். நான் பள்ளியில் 8ம் வகுப்பில் படிக்கிறேன், போராட்டங்களைப் பற்றி எல்லாம் எதுவும் தெரியாது என்று போலீசாரிடம் சொன்னபோதும், அவர்கள் என்னை மீண்டும் மீண்டும் அடித்து கொண்டே இருந்தனர்.. ”
காஷ்மீரில் பிபிசி பேட்டியின் சமயத்தில் மருத்துவரை கைது செய்த போலீஸ்!-Viral Video
உறங்கி கொண்டிருக்கும் இந்திய ஊடகங்கள்!
காஷ்மீரில் சிறைவைக்கப்பட்டுள்ள தலைவர்களை உடனே விடுவிக்ககோரி டெல்லியில் ஆர்ப்பாட்டம்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
கடந்த ஆகஸ்ட் 5 அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த அவர்களின் உரிமையான சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எனினும் காஷ்மீரில் கடும் ஊரடங்கு உத்தரவு, தொலைபேசி , இன்டர்நெட் முடக்கம் என எந்த கட்டுப்பாடுகளும் நீக்கப்படவில்லை. ஒரு சில பகுதிகளில் மட்டுமே தொலைபேசி வேலை செய்கிறது. பல்வேறு ஜனநாயக படுகொலைகள் நடந்து வரும் காலத்தில் காங்கிரஸ், போன்ற மூத்த கட்சிகளே […]
‘பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்டவர்கள்’ மீதே வழக்கு பதிவு ! அதை தவிர்க்க மருத்துவமனைக்கு செல்வதை தவிர்க்கும் கொடூரம்! -காஷ்மீரின் களநிலவரம் – கவிதா கிருஷ்ணன்.
இறுதி பாகம் .. உங்களின் இந்த உண்மை கண்டறியும் பணியில் .. காஷ்மீர் மக்கள் எப்படி நடந்து கொண்டனர்? எங்களுக்கு மிகவும் அன்பான ஒரு வரவேற்பு கிடைத்தது அவர்கள் எங்களிடம் எந்த அளவிற்கு அன்பையும் விருந்தோம்பலும் காட்டினார்கள் என்று வார்த்தையில் வர்ணிக்க முடியாது. இது எங்கள் மனதில் மிகவும் ஆழமாக பதிந்தது. இந்தியா மற்றும் இந்தியர்களிடம் கோவமாக இருக்க அனைத்து உரிமையும் படைத்தவர்கள் இப்படிப்பட்ட மோசமான நிலையில் யாரை புதிதாக கண்டாலும் சந்தேகிப்பது இயற்கைதான். அதனால் முதலில் […]
காஷ்மீர்! – ‘பெருநாள் தினத்தில் கூட புத்தாடை இல்லாமல் சிறுவர்கள்’-காஷ்மீரின் களநிலவரம் – கவிதா கிருஷ்ணன்.. பாகம் -2
பாகம் 1 ஐ வாசிக்க .. கீழே உள்ளது பாகம் 1 ன் தொடர்ச்சி … சற்று விரிவாக சொல்ல முடியுமா ? இரண்டு விஷயங்களை சொல்கிறேன். . ஒரு வீடியோ 11 வயது சிறுவனுடையது. கைது செய்யப்பட்டிருந்த அவர் பெருநாளிற்கு ஒரு நாள் முன்பு தான் விடுவிக்கப்பட்டார். அச்சிறுவன் தன்னை விட சிரியவர்களை கூட அடைத்து வைத்துள்ளதாகவும், தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் கூறினார். மற்றொன்று… ஒரு காஷ்மீரி குடும்பத்தை கொண்ட வீடியோ. அவர்கள் மிகுந்த அச்சத்தில் […]
காஷ்மீர்-‘நள்ளிரவில் சிறுவர்கள் கைது’! -‘மானபங்க படுத்தபடும் பெண்கள்’-காஷ்மீரின் களநிலவரம் – கவிதா கிருஷ்ணன்.
தமிழகத்தை சேர்ந்த சிபிஐ கட்சியின் சமூக பெண் ஆர்வலர் கவிதா கிருஷ்ணன், பிரபல பொருளாதார வல்லுனர் ஜீன் ட்ரெஸ் மற்றும் எய்ட்வாவின் (AIDWA ) மைமூனா மொல்லா ஆகியோர் ஜம்மு-காஷ்மீரில் 370 வது பிரிவை அரசாங்கம் ரத்து செய்து மாநிலத்தை பிளவுபடுத்திய பின்னர் காஷ்மீரின் உண்மை நிலவரம் கண்டறிய கடந்த ஆகஸ்ட் 7 முதல் 13 வரை5 நாட்களுக்கு காஷ்மீரில் முகாமிட்டிருந்தனர். கீழுள்ள ஆக்கம் பிரபல ஆங்கில நாளிதழான ஹஃ ப்பிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வெளியானது.கீழுள்ள செய்தி […]
காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக பிரிட்டனில் நடைபெற்ற பிரம்மாண்ட கண்டன போராட்டம்!
லியாம் பர்ன் , பிரிட்டன் ( *எம்.பி*) கலந்து கொண்டு நடத்திய போராட்டத்தில் ஆயிர கணக்கில் மக்கள் கலந்து கொண்டு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை எதிர்த்து குரல் எழுப்பினர். காஷ்மீர் மக்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும் , ஊரடங்கு உத்தரவை தளர்த்தவும் கோரிக்கை விடுத்தனர். வீடியோவை YouTube ல் காண..
பிபிசியின் காஷ்மீர் மக்கள் போராட்ட வீடியோவை முதலில் பொய் என மறுத்து , பிறகு ஒப்பு கொண்ட மோடி அரசாங்கம்!
Image credit-BBC மோடி அரசாங்கம் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கி 10 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது. எனினும் அங்குள்ள மக்கள் இதுகுறித்து எப்படி உணர்கிறார்கள் என்பதை அறிய ஒரு வழியும் இல்லாதபடி அனைத்து தொலைதொடர்பு சாதனங்களையும் முற்றிலுமாக மோடி அரசாங்கம் தடை விதித்துள்ளது. மக்கள் தங்கள் எதிர்ப்பை ஜனநாயக ரீதியாக தெரிவிப்பதற்கோ, அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கோ, ஏன் வீதிகளில் சுதந்திரமாக நடமாடுவதற்கோ கூட இயலாத ஒரு மிகப்பெரும் சிறைச்சாலையில் அடைபட்ட கைதிகளைப் போன்று உள்ளனர் […]
காஷ்மீர் மக்களுக்காக குரல் கொடுத்த விஜய் சேதுபதி !
இந்திய திரைப்படவிழா ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் நகரில் நடைபெற்றது. இதில்மக்கள் செல்வன் விஜய்சேதுபதி திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்த ’சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்கு சிறந்த திரைப்பட விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆஸ்திரிலேயேவிற்கு சென்றார் விஜய். அப்போது ஆஸ்திரேலியாவின் தமிழ் வானொலி ஒன்றிற்கு பேட்டி அளித்த நடிகர் விஜய்சேதுபதி, காஷ்மீர் விஷயம் குறித்து கேள்விக்கு பதிலளித்தார். அப்போது “ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது ஜனநாயகத்துக்கு எதிரானது. பெரியார் அன்றைக்கே சொல்லிவிட்டார். காஷ்மீரின் பிரச்னைகளுக்கு […]
பொய் செய்திகளை வெளியிட்ட தினமலர் ஊடகம்!
தமிழகத்தில் மிக பிரபலமான மற்றும் நீண்ட காலமாக பத்திரிக்கை ஊடகத் துறையில் இருந்து வரும் தினமலர் நேற்று ஒரு பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளது. ஊடகங்கள் தொடர்ந்து மோடி அரசாங்கத்திற்கு ஆதரவாக பல்வேறு கருத்துக்களை விதைத்து வருவது வாடிக்கை ஆகி வருகிறது.இவ்வாறு நடப்பது தமிழ் ஊடகங்களில் சற்று குறைவு என்றாலும் வட இந்தியாவில் உள்ள ஊடகங்கள் மோடி அரசாங்கத்திற்கு சார்பாக செய்திகள் வெளியிடுகின்றன என்ற குற்றச்சாட்டு மிகவும் அதிகமான அளவில் உள்ளதால் நெட்டிசன்கள் “கோதி மீடியா(Godi Media)” என்று […]