ஹிஜாப் அணிவதற்கான தடையை எதிர்த்துப் போராடிய மாணவர்களுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த தடையை எதிர்த்து ஐந்து மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அனைத்து மனுக்களும் தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மார்க்கத்தில் கட்டாயமில்லை என மூன்று பேர் அடங்கிய நீதிமன்ற பென்ச் தீர்ப்பு வழங்கியுள்ளது. ‘பள்ளி சீருடை அணிவதற்கான கட்டுப்பாடு, மாணவர்கள் எதிர்க்க முடியாத நியாயமான கட்டுப்பாடு’ என்று உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவுக்கு முன்னதாக, மாநில […]
Karnataka
கர்நாடகா: ஹிஜாப் அணியும் மாணவிகளின் பெயர், விலாசம், தொலைபேசி எண்ணை வெளியிட்ட கல்லூரி..
ஆலியா அசதி பிப்ரவரி 9 புதன்கிழமை அன்று நாள் முழுவதும் ராங் நம்பர் தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. கர்நாடகாவின் உடுப்பியில் சலசலக்கும் வாட்ஸ்அப் குழுக்களில் தொலைபேசி எண்கள், பெற்றோரின் பெயர்கள் மற்றும் வீட்டு முகவரி உட்பட தனது தனிப்பட்ட விவரங்கள் பகிரப்பட்டதை 17 வயது சிறுமி சில மணிநேரங்களில் உணர்ந்தார். கர்நாடகாவின் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதைத் தொடரும் போராட்டங்களில் முன்னணியில் இருந்த உடுப்பியின் அரசுப் பெண்களுக்கான அரசுப் பல்கலைக்கழகக் கல்லூரியின் ஆறு முஸ்லிம் மாணவர்களில் ஆலியா […]
கர்நாடகா: புர்காவை கழற்ற சொல்லி கொடூர தாக்குதலில் ஈடுபட்ட மதவெறி கும்பல்!
சனிக்கிழமையன்று பாஜக ஆளும் கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் மதவெறி கும்பல் ஒன்று ஆறு முஸ்லிம் ஆண்கள் மீது கொடூரமான தாக்குதலில் ஈடுபட்டனர். அருகில் உள்ள ஒரு தர்காவிற்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த ஒரு முஸ்லீம் குடும்பத்தின் காரை ஒரு மதவெறி கும்பல் தடுத்து நிறுத்தி, வாகனத்தின் உள் இருந்த பெண்களிடம் “புர்காவைக் கழற்றுமாறு” கூறியதை அடுத்து இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது, இதில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்புக்கு வழிவகுத்தது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எஃப்ஐஆர்: தாக்குதல் நடத்தியவர்கள் […]
கர்நாடகா: மாட்டை கடத்தி செல்வதாக பொய்யாக கூறி இருவர் மீது கொலைவெறி தாக்குதல் !
பாஜக ஆளும் கர்நாடகா மாநிலம், பெல்தங்கடியில் மார்ச் 31, புதன்கிழமையன்று வாகனத்தில் சென்று கொண்டிருந்த இருவரை வழிமறித்த பாசிச கும்பல், இருவரும் மாட்டை கடத்தி செல்வதாக பொய்யாக வம்புக்கு இழுத்து, அவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபப்பை ஏற்படுத்தி உள்ளது. எனினும் இச்செய்தி பெரும்பான்மை மீடியாக்களில் பெட்டி செய்தியாகவும் கூட வெளியிடப்படவில்லை. காயமடைந்தவர்கள் அப்துல் ரஹ்மான் மற்றும் முஹம்மது முஸ்தபா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பெல்டாங்கடி சர்ச் சாலையில் ஆம்னி காரில் […]
கர்நாடகா: பள்ளிவாசலில் உறங்கி கொண்டிருந்த இமாம் மீது கொலைவெறி தாக்குதல் !
செவ்வாய்க்கிழமை இரவு மங்களூருவுக்கு அருகிலுள்ள கர்நாடகாவின் ஃபாரங்கிப்பேட்டே எனும் நகரில் பள்ளிவாசல் இமாம் ஒருவர் மீது கொலைவெறி தாக்குதல் நடைபெற்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாக்கப்பட்ட இமாம் குந்தாபூரில் வசிக்கும் முஷ்தாக் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இரவில் பள்ளிவாசலுக்குள் உறங்கி கொண்டிருந்த நேரத்தில் முஸ்தாக் மீது மூன்று பேர் அடங்கிய ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் சி.சி.டி.வி யில் பதிவாகியுள்ளதாகவும், விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். அருகிலுள்ள […]
மோடி சர்வாதிகார போக்கை மேற்கொள்கிறார்; மாநில உரிமைகளில் தலையிடுகிறது மத்திய அரசு – கர்நாடக பாஜக அமைச்சர் குற்றச்சாட்டு !
கர்நாடக பாஜக அமைச்சர் ஒருவர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் “சர்வாதிகார” தன்மைக்கு எதிராகப் பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.மோடியின் சர்வாதிகார தன்மையே பிராந்தியவாத கிளர்ச்சிகளுக்கு காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார். பி.எஸ். யெடியூரப்பா தலைமையிலான கர்நாடக பாஜக அரசாங்கத்தின் சிறு நீர்ப்பாசன அமைச்சர் ஜே.சி.மதுசாமி. இவர் மோடி அரசுக்கும் இந்திரா காந்தி தலைமையிலான அரசாங்கத்திற்கும் இடையே உள்ள ஒப்பமைவை சுட்டி காட்டி பேசினார். மைசூருவில் ‘தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் பிராந்திய சுதந்திரம்’ என்ற தலைப்பில் அகில […]
கர்நாடகா: தின்பண்டங்களை திருடியதற்காக சிறுவனை சித்திரவதை செய்து கொன்ற கடை உரிமையாளர் !
மார்ச் 16 அன்று கர்நாடகாவின் ஹவேரி மாவட்டத்தில் உள்ள கடையில் இருந்து தின்பண்டங்களை திருடியதாக 10 வயது சிறுவனை கடை உரிமையாளர் மற்றும் அவரது கூட்டாளிகள் சித்திரவதை செய்து கொன்றுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிறுவனுக்கு சித்திரவதை: ஹரிஷய ஹிரேமத் என்ற அந்த சிறுவனை ஒரு அறையில் பூட்டி, கல்லில் கட்ட வைத்து, கடுமையாக தாக்கப்பட்டுள்ளான். சிகிச்சை பலனளிக்காத நிலையில் கடந்த திங்களன்று மருத்துவமனையில் உயிர் இழந்துள்ளான் சிறுவன். ஹனகல் தாலுகாவில் உள்ள உபனாசி […]
மங்களூரு: கோவில் உண்டியலை திருடிய பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்தவர் கைது..
மங்களூரில் உள்ள மான்டேபடாவ் பகுதியில் இந்துத்துவா இயக்கமான பஜ்ரங் தளத்தை சேர்ந்த ஒருவர் கோயிலின் உண்டியலை திருடி, கையும் களவுமாக சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இவரை பிடித்த உள்ளூர்வாசிகள், கோனாஜே போலீசில் ஒப்படைத்தனர். பிடிபட்டவர் அப்பகுதியில் இரு சக்கர வாகன திருட்டிலும் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. முன்னதாக அவர் விஸ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி) அமைப்பில் அங்கம் வகித்துள்ளார். இது குறித்து உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. திருட்டில் ஈடுபட்டவர் மோன்டேபாதாவைச் சேர்ந்த […]
கர்நாடகா: பாஜக வின் 6 அமைச்சர்கள் தங்களின் நன்மதிப்புக்கு குந்தகம் விளைவிக்கும் செய்திகளை ஊடகங்கள் வெளியிட தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு..
வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணுடன் பாலியல் உறவு வைத்து கொண்ட குற்றச்சாட்டில் கர்நாடக பாஜக நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து தற்போது, 6 கேபினட் அமைச்சர்கள் தங்கள் நன்மதிப்புக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் எந்த ஒரு செய்தியையும் ஊடகங்கள் ஒளிபரப்பவோ, அச்சிடவோ கூடாது என கோரி நீதிமன்றத்தை நாடி உள்ளனர். இந்த அமைச்சர்கள் சார்பாக சில தனிநபர்களால் தடை உத்தரவுகளை பிறப்பிக்க நீதிமன்றத்தில் கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என மீடியாகளில் […]
அரசு மருத்துவர்களை வீட்டிற்கு வரவழைத்து கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட பாஜக அமைச்சர் – இதில் என்ன தவறு என்றும் கேள்வி!
கர்நாடக அமைச்சரும் பாஜக தலைவருமான பி.சி. பாட்டீல் செவ்வாய்க்கிழமை ஹிரேகேருவில் உள்ள தனது வீட்டில் சொகுசாக இருந்து கொண்டு கோவிட் -19 தடுப்பூசி போட்டு கொண்டதை அடுத்து கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். இது அரசின் கொரோனா வைரஸ் தொடர்பான நெறிமுறையை மீறிய செயலாகும். “இன்று # COVID19 தடுப்பூசியை என் மனைவியுடன், எனது ஹைரேகூர் வீட்டில், அரசு மருத்துவர்கள் மூலம் போட்டு கொண்டேன்… ‘மேட் இன் இந்தியா’ தடுப்பூசிகள் பல நாடுகளால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகின்ற நிலையில்,நம் […]
‘உபரி நீரை தமிழகம் பயன்படுத்த அனுமதிக்க முடியாது’ – பாஜக முதல்வர் எடியூரப்பா அதிரடி !
தமிழகம் உபரி காவிரி நீரை பயன்படுத்த தனது அரசாங்கம் அனுமதிக்காது என்றும், கர்நாடக மாநில நலன்களைப் பாதுகாக்க வலுவான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் கூறியுள்ளார்..
பிராமண பிரதிநிதிகள் கோரிக்கையை ஏற்று ஆறாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் 2 பக்கங்கள் நீக்கம்!
கர்நாடகாவில் ஆறாம் வகுப்பு சமூகவியல் பாடப் புத்தகத்தில் இருந்து இரண்டு பக்கங்களை பாடத் திட்டத்தில் இருந்து நீக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அப்படி என்ன இருக்கிறது 2 பக்கங்களில்? ‘மதங்களின் பிறப்பு’ என்ற தலைப்பில் அமைந்த அந்த அத்தியாயத்தில் வேதகால சடங்குகளில் விலங்குகள் பலியிடப்பட்டது குறித்தும் மத வழிபாடுகளுக்கு பயன்படுத்தப்பட்ட சமஸ்கிருத மொழியைப் படிக்கும் வாய்ப்பு பெரும்பாலான மக்களுக்கு கிடைக்காமல் இருந்திருக்கிறது பற்றியும் விவரணைகள் இருந்தன. இந்தப் பக்கங்களை இனிமேல் மாணவர்களுக்கு பாடம் எடுக்கக் கூடாது என்று […]
காட்டுப்பகுதியில் சாலையோரமாக தொழுது கொண்டிருந்த ஊமை மனிதரை கற்களாலும், கோடாரியாலும் தாக்கிய பாசிஸ்டுகள்!
கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டம், சக்ரேபைலு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த வாய் பேச முடியாத முஸ்லிம் வயோதிகர் ஒருவர், தொழுகை நேரம் வந்ததும், ரோட்டோரமாக ஒதுங்கி எவருக்கும் இடையூறின்றி தொழுகையில் ஈடுபட்டுள்ளார், அப்போது அப்பக்கமாக வந்த 5 பாசிச பயங்கரவாதிகள் அந்த வயோதிகர் தொழுது கொண்டிருக்கையில் பிடித்து இழுத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். கற்களாலும் தாக்கியுள்ளனர். அவரது தொப்பியை கழற்றி எரிந்து அவரது மேலாடையையும் கிழித்து எறிந்துள்ளனர். அவர்கள் கைகளில் வைத்திருந்த மரம் வெட்டும் கோடாரியை கொண்டு […]
முஸ்லிம்களை போலவே உடை அணிந்து கொரோனா பரப்பிவிடுவோம் என பீதி கிளப்பிய மூவர் கைது ..
நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவுவதற்கு காரணம் முஸ்லிம்களே என்பதைப் போன்ற பொய்யான வெறுப்புப் பிரச்சாரத்தை பாசிஸ்டுகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். பொய்யான செய்திகளை பரப்புவது அரைகுறையாக செய்திகளை பரப்பி வெறுப்பை தூண்டுவது என்று பல்வேறு கீழ்தரமான வேளைகளில் பாசிஸ்டுகள் ஈடுபட்டு வருவது நாம் அறிந்ததே. இந்நிலையில் முஸ்லிம்கள் மீது மேலும் வெறுப்பை பரப்ப முஸ்லிம்களை போலவே வேடமிட்டு கரோனா பரப்ப வந்ததை போன்று நாடகமாடிய பாசிஸ்டுகள் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். முஸ்லீம்களைப் போலவே நீண்ட ஆடை, […]
கர்நாடகா: ஆயிரக்கணக்கோனோர் ஒன்று திரண்டு நடத்திய தேர்த்திருவிழா; உறங்கும் அரசாங்கமும் காணாமல் போன மீடியாக்களும்..
பாஜக ஆளும் கர்நாடகாவில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் பலருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கலாபுராகி மாவட்ட சித்தாபூர் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற கோவில் தேர் திருவிழா இன்று நடைபெற்றுள்ளது. நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் சித்தலிங்கேஸ்வரர் கோவில் தேர் திருவிழா நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இந்த செய்தியை மோடியாக்கள் மக்கள் வரை கொண்டு சேர்க்கவில்லை. நாம் அறிந்தவரை இந்தியாவின் தொலைக்காட்சி ஊடங்கங்களில் இந்த […]