அடுத்த 21 நாட்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அந்த சமயத்தில் செய்யக்கூடியவை மற்றும் கூடாதவை எவை என்பதையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. செயல்படுபவை : கடைகள்: உணவு, மளிகை சாமான்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், பால் மற்றும் பால் சாவடிகள், இறைச்சி மற்றும் மீன், விலங்கு தீவனம் ஆகியவற்றைக் கையாளும் கடைகள். (வீடுகளுக்கு வெளியே தனிநபர்களின் நடமாட்டத்தைக் குறைக்க மாவட்ட அதிகாரிகள் வீட்டு விநியோகத்தை ஊக்குவிக்கலாம்/ எளிதாக்கலாம்) நிதி சேவைகள்: வங்கிகள், […]
Just In
அதிமுக அமைச்சர்கள் இருவரிடையே உட்கட்சி பூசல் நிலவுவதாக செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் மீது கொலைவெறி தாக்குதல்..
செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்க கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனத்துடன் வலியுறுத்தல் சிவகாசியில் வாரபத்திரிக்கையில் (குமுதம் ரிப்போர்ட்டர்) பானியாற்றி வரும் கார்த்திக் என்ற செய்தியாளர் நேற்று மர்ம நபர்களால் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகி தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வாரம் வெளியான அந்த இதழில் விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்வர்மன் ஆகியோரிடையே உட்கட்சி பிரச்சனை நிலவுவதாக வெளியாகியுள்ள செய்தியை […]
‘குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி தான் நடக்குது. சமஸ்கிருதம் நாடு தழுவிய மொழி, தமிழ் அப்படி இல்ல..’ – பகீர் கிளப்பிய பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்..
தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயரின் 166-வது பிறந்தநாள் விழாவையொட்டி சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் மரியாதை செலுத்தினார். பிறகு செய்தியாளர்ககின் கேள்விக்கு பதில் அளித்த அவர் “சமஸ்கிருதம் நாடு தழுவிய மொழி. ஆனால் தமிழ் மொழி தமிழர்களால் மட்டுமே பேசப்படும் மொழி எனவே தமிழை விடவும் சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக” அவர் தெரிவித்தார். மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வருகைக்காக குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள […]
சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல் ..
ஒதிஷாவில் பிற்படுத்தப்பட்டோரின் சாதிவாரி சமூக பொருளாதார கணக்கெடுப்பு நடத்துவதற்கான சட்டத் திருத்தமும், தீர்மானமும் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. மத்திய அரசு இத்தகைய கணக்கெடுப்பு நடத்தாத நிலையில், ஒதிஷா அரசே கணக்கெடுப்பு மேற்கொள்வது பாராட்டத்தக்கது. மாநில அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒதிஷா தீர்மானித்திருப்பதற்கு என்னென்ன காரணங்கள் உண்டோ, அவை அனைத்தும் தமிழகத்திற்கும் பொருந்தும். எனவே, மாநில அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசும் முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழக […]
மோடி அரசை விமர்சித்த பிரிட்டன் எம்.பிக்கு அனுமதி மறுத்த மோடி அரசு; விமான நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட கொடூர அனுபவத்தை பகிர்ந்துள்ளார் அவர்..
காஷ்மீர் 370 வது பிரிவு நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் மோடி அரசை விமர்சித்த பிரிட்டன் நாட்டு எம்பி டெப்பி ஆபிரகாம்ஸுக்கு இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுத்துள்ளது மோடி அரசு. இ-விசா பெற்று கொண்டு இந்தியா வருவதற்கான அனைத்து தேவையான ஆவணங்களையும் கொண்டு டில்லி விமான நிலையம் அடைந்துள்ளார் டெப்பி. ஆனால் விசா நிராகரிக்கப்பட்டுவிட்டது என அவருக்கு கூறி, அங்கிருந்து வலுக்கட்டாயமாக துபாய் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பிரிட்டனில் உள்ள காஷ்மீருக்கான அனைத்து கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவரான செல்வி […]
வீதிக்கு வாங்க ரஜினி வெய்யில் குறைந்து அந்தி சாய்ந்துவிட்டது – எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்
நேற்று முன் தினம் சென்னை வண்ணாரப்பேட்டையில் அமைதியாக போராடி கொண்டிருந்த இஸ்லாமியர்கள் மீது போலீசார் நடத்திய கொடூர தாக்குதலை கண்டித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் வேளையில் இந்திய முஸ்லிம்களுக்கு ஒண்ணுன்னா நான் முதல் ஆளா வீதிக்கு வருவேன் என்ற கருத்து பட சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதை நெட்டிசன்கள் நினைவு கூர்ந்து வீதிக்கு வாங்க ரஜினி என்ற ஹாஷ்டாகை ட்ரெண்டிங் செய்து வந்தனர். இந்நிலையில் இது குறித்து எழுத்தாளர் மனுஷ்யபுத்திர கருத்து தெரிவித்துள்ளார். வீதிக்கு வாங்க […]
இந்தியாவில் 17 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் – உறுதிப்படுத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் !
டில்லி விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் வெப்பத் திரையிடல் தொடங்குவதற்கு முன்னர் (ஜனவரி மாதத்தின் நடு பகுதியில்) சீனா மற்றும் பிற கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து டெல்லிக்கு வந்த பல ஆயிரம் பேர்களில் 17 பேருக்கு, கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் அறிகுறிகள் உள்ளதாக டில்லி சுகாதாரத் துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டில்லியில் கொரோனா வைரசுக்கான விமான நிலையத் திரையிடல் செயல்முறை தொடங்குவதற்கு முன்பு டில்லிக்குத் திரும்பிய பயணிகளைக் கண்டறியும் […]
‘எனது 6ம் அறிவு சொல்கிறது டில்லியில் பாஜக தான் ஆட்சி அமைக்கும்’ – டில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி கருத்து..
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்று தனது “ஆறாம் அறிவு” தன்னிடம் கூறியதாக பாஜகவின் டெல்லி யூனியன் பிரதேச தலைவர் மனோஜ் திவாரி இன்று தெரிவித்தார். யமுனா விஹாரில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்த திவாரி, பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது அவர் “டெல்லி சட்டசபையில் குறைந்தது 50 இடங்களில் வெற்றி பெற்று நாங்கள் ஆட்சியை பிடிப்போம்.. என்னால் அனைத்து தரப்பிலிருந்தும் அதிர்வுகளை உணர முடிகிறது … இந்த முறை பாஜக அரசு தான் அமையும் […]
‘ஒரே பாலின திருமணத்திற்கு இந்தியாவில் அனுமதி உண்டா?’ என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்!
“ஒரே பாலின தம்பதிகள் தங்கள் திருமணத்தை இந்திய சட்டத்தின்படி பதிவு செய்து கொள்ள முடியுமா, அப்படியானால், அதன் விவரங்கள் அளிக்கவும். இல்லையென்றால், அதற்கான காரணங்களை கூறவும் ” என ராஜ்ய சபாவில் திரினாமுல் காங்கிரஸ் தலைவர் டெரெக் ஓ பிரையன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த பாஜக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ‘ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் திட்டங்கள் எதுவும் அரசிடம் இல்லை’ என்று விளக்கம் அளித்தார். ஓரினச்சேர்க்கையை சட்டவிரோதமாக்கும் சட்ட பிரிவு 377 ஐ ரத்து […]
சீனாவில் உள்ள பாகிஸ்தான் மாணவர்களை கைவிட்ட பாகிஸ்தான் அரசு – வலுக்கும் கண்டனம்!
சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்று கொண்டிருக்க, இந்தியா, பங்களாதேஷை சேர்ந்த மாணவர்களை அரசாங்கங்கள் அக்கறையுடன் சொந்த நாட்டிற்கு அழைத்து சென்று விட்டன, எனினும் பாகிஸ்தான் நாட்டு அரசாங்கம் தங்கள் சொந்த நாட்டு மக்களை பாதுகாக்க தவறி உள்ளது. மாணவர்களை சொந்த நாட்டிற்கு அழைத்து செல்லவும் ஏற்பாடு செய்யவில்லை. சீனாவில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் உணவு கூட கிடைக்க வழியின்றி பாகிஸ்தான் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பாகிஸ்தான் தூதரகத்தை […]
“இருட்டறையில் கருப்புப் பூனையைத் தேடும் குருட்டு பட்ஜெட்” – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
“பொருளாதார தேக்கநிலை, வேலைவாய்ப்பின்மை, நலிவடையும் கிராமப்புற வளர்ச்சி உள்ளிட்ட நாட்டின் முக்கியப் பிரச்னைகள் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல், பா.ஜ.க விரும்பும் கலாச்சாரத் திணிப்பைச் செய்யும் நிதிநிலை அறிக்கையாகவே இந்த பட்ஜெட் இருக்கிறது” என தி.மு.க தலைவரும், சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுகுறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் வருமாறு: மத்திய பா.ஜ.க அரசின் 2020-21 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை ”பொருளாதார தேக்க நிலைமை”, “கிராமப்புறப் பொருளாதார வீழ்ச்சி”, […]
“வள்ளுவரின் குரலுக்கு ஏற்ப மோடி ஆட்சி” – நிர்மலா சீதாராமனின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் !
2020- 2021-க்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். அப்போது திருக்குறல் ஒன்றை வாசித்து பிரதமர் மோடி ஒரு மாமன்னர் என்ற கருத்துப்பட நிர்மலா சீதாராமன் மோடி புகழ்ப் பாடியமைக்கு எதிர்க்கட்சிகள் குறிப்பாக தமிழக எம்பிக்கள் மத்தியிலிருந்து கடும் சலசலப்பு ஏற்பட்டது. அவரது கருத்தை கண்டிக்கும் விதமாக பல எம்.பிக்கள் பேச்சை குறுக்கிடும் விதத்தில் கோஷங்கள் எழுப்பினர். பட்ஜட் உரை வாசிப்பின் போது ஆத்திச்சூடி, திருக்குறள் மேற்கோள்காட்டி சில விஷயங்களை […]
70 வரிவிலக்கு விதிகள் நீக்கம், தனிநபர் வருமான வரி விதிப்பிலும் மாற்றம் ..
இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் ஏற்கனவே அமலில் இருந்த 70 வரிவிலக்கு விதிகளை நீக்கம் செய்துவிட்டு புதிய எளிமைப்படுத்தப்பட்ட தனிநபர் வரி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் – ரூ. 7.5 லட்சம் வரை சம்பாதிப்பவர்களுக்கு வருமான வரி 20% இல் இருந்து 10% ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ. 7.5 லட்சம் – 10 லட்சம் சம்பாதிப்பவர்களுக்கு, வருமான வரி […]
ரங்கோலி கோலம் , சாகிளட் விநியோகம் என விழாக்கோலத்துடன் கொரோனா நோயாளிகளுக்கான சிறப்பு வார்டு திறப்பு ..
சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுக்க பரவி வருகிறது. இதனையடுத்து கொரோனா வைரஸ் நோயாளிகளை சிகிச்சை அளிப்பதற்கு என்று மதுரை அரசு மருத்துவ மனையில், சிறப்பு வார்டு திறப்பு விழா நடைபெற்றது ரங்கோலி கோலம் வரைந்து, ரிப்பன் வெட்டி, சாக்லேட்டுகள் விநியோகித்து கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாபவர்களை அனுமதிக்க வென்று பிரத்யேக சிறப்பு வார்டை மதுரை அரசு மருத்துவமனை அதிகாரிகள் திறந்து வைத்தனர். ஏதோ மகிழ்சிகரமான நிகழ்வு போல சுவீட் கொடுத்து கொண்டாடி திறப்புவிழா […]
சாய்னா நேவால்: ‘நானும் உழைப்பாளி, மோடியும் உழைப்பாளி; நான் பாஜக வில் இணைகிறேன்’ ..
பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் இன்று பாஜகவில் இணைந்தார். பிப்ரவரி 8 ஆம் தேதி டெல்லி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இவர் கட்சியில் இணைந்துள்ளதால் சைனா நேவாலை பாஜக வின் பிரச்சார களத்தில் காண அதிகம் வாய்ப்புள்ளது. நானும் உழைப்பாளி, மோடியும் உழைப்பாளி: “நான் நாட்டிற்காக பதக்கங்களை வென்றுள்ளேன், நான் மிகவும் கடின உழைப்பாளி, நான் கடின உழைப்பாளிகளை நேசிக்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்காக செயல்பட்டு வருவதை என்னால் காண முடிகிறது, அவருடன் இணைந்து […]