குடியுரிமைச் சட்டத்தில் திருத்தங்களை எதிர்த்து ஜனநாயக உரிமையின் அடிப்படையில் போராடியதற்காக மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை தற்போது டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுராக் காஷ்யப், விஷால் பரத்வாஜ், மகேஷ் பட், ரத்னா பதக் ஷா உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட திரைப்பட பிரமுகர்கள் ஞாயிற்றுக்கிழமை கூட்டறிக்கை ஒன்றை கையொப்பமிட்டு வெளியிட்டுள்ளனர். குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்களை ஒருங்கிணைத்ததாகக் கூறி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களான மீரன் ஹைதர் மற்றும் சஃபூரா சர்கர் […]
Indian Judiciary
வரம்பு மீறிய உபி முதல்வர், பாடமெடுத்த அலஹாபாத் உயர்நீதிமன்றம் !
யோகி ஆதித்யநாத் என அழைத்து கொள்ளும் உபி முதல்வர் அஜய் பிஷ்த் சிங் பதவி ஏற்றது முதல் சிறும்பான்மையினர் மீது தாக்குதல், பாலியல் வன்முறைகள் என பல்வேறு விதங்களிலும் மாநில சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு புதைகுழியில் உள்ளது குறித்து அனுதினமும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் மோடி அரசின் கருப்பு சட்டங்களுக்கு எதிராக ஜனநாயக முறையில் போராடிய அப்பாவி முஸ்லிம்கள் பலரை (20க்கும் மேற்பட்டோரை) சுட்டு கொன்றது அஜய் பிஷ்த்தின் காவல்துறை. மேலும் அந்த சமயத்தில் […]
டெல்லி: பாஜக தலைவர்கள் மீது FIR பதிவு செய்ய கூறிய நீதிபதி இரவோடு இரவாக மாற்றம்..
குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் இந்தியாவை மதரீதியாக பிளவுபடுத்தும் முயற்சிக்கு எதிராக அனைத்து மக்களும் ஒன்றிணைந்து போராடி வருகின்றனர். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத பா.ஜ.க மற்றும் இந்துத்வா கும்பல் போராடுபவர்களுக்கு எதிராக தொடர்ந்து வன்முறையை கட்ட விழ்த்துவிட்டு வருகிறது. குறிப்பாக பா.ஜ.க ஆளும் உத்தரப்பிரதேசம், கர்நாடகம், அசாம் மாநிலங்களில் மட்டும் போராடுபவர்களுக்கு எதிராக நடைபெற்றிருக்கும் வன்முறையில் இதுவரை 25 பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். அதன் அடுத்த கட்டமாக தற்போது தேசத்தின் தலைநகர் டெல்லி வன்முறை வெறியாட்டத்திற்கு […]
“போராடங்களுக்கு போலீசார் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது சட்ட விரோதமானது’ – கர்நாடக உயர் நீதிமன்றம்..
பெங்களூர் மாநகரில் 3 நாள்களுக்கு (Dec 19 to Dec 21) யாரும் போராட்டம் நடத்தக்கூடாது என பெங்களூர் மாநகர காவல் துறை ஆணையர் பாஸ்கர் ராவ் உத்தரவிட்டார். இதை எதிர்த்து ராஜீவ் கவுடா, சவ்மியா ரெட்டி ஆகியோர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கடந்த வியாழ கிழமை (13-02-2020) அன்று கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அபை ஸ்ரினிவாஸ் அவர்கள், CAA எதிர்ப்பு போராடங்கள் உட்பட எந்த போராட்டங்களும் 3 […]
‘ஒரே பாலின திருமணத்திற்கு இந்தியாவில் அனுமதி உண்டா?’ என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்!
“ஒரே பாலின தம்பதிகள் தங்கள் திருமணத்தை இந்திய சட்டத்தின்படி பதிவு செய்து கொள்ள முடியுமா, அப்படியானால், அதன் விவரங்கள் அளிக்கவும். இல்லையென்றால், அதற்கான காரணங்களை கூறவும் ” என ராஜ்ய சபாவில் திரினாமுல் காங்கிரஸ் தலைவர் டெரெக் ஓ பிரையன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த பாஜக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ‘ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் திட்டங்கள் எதுவும் அரசிடம் இல்லை’ என்று விளக்கம் அளித்தார். ஓரினச்சேர்க்கையை சட்டவிரோதமாக்கும் சட்ட பிரிவு 377 ஐ ரத்து […]
குஜராத் கலவரம்: மோடி குற்றமற்றவர் என்ற எஸ்ஐடியின் அறிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் விசாரணை தேதி அறிவிப்பு..
குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி இருந்த சமயத்தில் 2002 ஆம் நடைபெற்ற கலவரத்தில் மோடி குற்றமற்றவர் என்று எஸ்ஐடி யின் “கிளீன் சிட்” ஐ எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு “பல முறைகள் ஒத்திவைக்கப்பட்டு வந்துள்ளதாகவும், என்றாவது ஒரு நாள் வழக்கை விசாரிக்க தானே வேண்டும்” என்று தெரிவித்த உச்சநீதிமன்றம் வரும் ஏப்ரல் 14ம் தேதி வழக்கை விசாரிப்பதாக தெரிவித்துள்ளது. நடந்த சம்பவம்: குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடைபெற்றது. எந்த வித […]
2002 குஜராத் : 33 முஸ்லிம்களை உயரிடன் எரித்து கொன்ற 17 பயங்கரவாதிகளுக்கு ஜாமின்; வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருமாறும் உத்தரவு!!
கடந்த 2002 ஆம் ஆண்டு, மோடி ஆட்சியின் போது நடந்த குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 17 பயங்கரவாதிகளுக்கும் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது, இன்று. அவர்கள் அனைவரும் அண்டை மாநிலமான மத்திய பிரதேசம் சென்று “சமூக சேவை” செய்ய வேண்டும் என்பது ஜாமினில் உள்ள நிபந்தனையாகும். 33 முஸ்லிம்களை உயிருடன் எரித்ததற்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 17 பயங்கரவாதிகளும் “சமூக மற்றும் ஆன்மீக சேவைகளை” செய்ய வேண்டும் என்று […]
NIA சட்டத்தை எதிர்த்து சட்டிஸ்கர் மாநிலம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு!
தேசிய புலனாய்வு அமைப்பு சட்டம், 2008 அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அறிவிக்கக் கோரி காங்கிரஸ் தலைமையிலான சத்தீஸ்கர் அரசாங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. கேரளாவை தொடர்ந்து சட்டிஸ்கர்: இதன் மூலம் NIA சட்டத்திற்கு எதிராக வழக்கு தொடரும் முதல் மாநிலமாக சட்டிஸ்கர் ஆகியுள்ளது. அதே போல கேரள அரசும் மத்திய அரசு கொண்டுவந்த சிஏஏ சட்டத்தை எதிர்க்க இந்திய அரசியலமைப்பின் 131 வது பிரிவை பயன்படுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மாநில அரசங்கத்திற்கு மத்திய அரசுடன் […]
“ஜாமா பள்ளி என்ன பாகிஸ்தானா? போராடுவதில் என்ன தவறு?” – பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி!
இன்று டெல்லி டிஸ் ஹசாரி நீதிமன்றத்தில் சந்திரசேகர் ஆசாத்தின் ஜாமீன் மனு விசாரணையின் போது, கூடுதல் அமர்வு நீதிபதி காமினி லாவ் டெல்லி காவல் துறையினரை கடுமையாக சாடினார். பீம் இராணுவத் தலைவரான ஆசாதுக்கு “போராட்டத்தின் மூலம் தனது எதிர்ப்பை தெரிவிக்க இந்திய அரசியலமைப்பில் உரிமை வழங்கப்பட்டுள்ளது ” என்று கூறினார். நீதிபதியின் சரமாரியான கேள்விகள்: “தர்ணாவில் ஈடுபடுவதில் என்ன தவறு உள்ளது ? எதிர்ப்பு தெரிவிப்பதில் என்ன தவறு? எதிர்ப்பை வெளிப்படுத்துவது அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள உரிமை […]
உபி : சமூக ஆர்வலர் சதாஃபை வயிற்றில் உதைத்து, லத்தியாலும் தாக்கிய போலீஸ்-10 நாட்கள் மேலாகியும் பெயில் இல்லை.
செத்தாலும் போராட்டத்தை கைவிட மாட்டேன்- சதாஃப் சமூக ஆர்வலரும், காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரகருமான சதாஃப் ஜாஃபர், கடந்த 19ந்தேதியன்று , லக்னோவில் நடந்த CAA எதிர்ப்பு போராட்டத்தின் போது படம்பிடித்து கொண்டிருந்த அவரை போலீசார் அநியாயமாக இழுத்து சென்று கைது செய்தனர். ஆரம்பத்தில் ஜாஃபர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்றே தெரியாமல் தவிக்கவிட்ட போலீஸ் 2நாட்கள் கழித்த பிறகே அவரது சகோதரிக்கு அவர் இருக்கும் இடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் மீரா நாயர் போன்ற திரைத்துறையினர் சமூக ஊடகத்தின் வாயிலாக […]
‘போலி தகவல்களை கொடுத்து விடுங்கள்’ -அருந்ததி ராய் கூறும் அர்த்தமுள்ள யோசனைகள்..
டெல்லி பல்கலையில் கடந்த 26ம் தேதி CAA , NRC, NPR ஆகியவற்றை எதிர்த்து போராட்ட உரையாற்றிய எழுத்தாளர் அருந்ததி ராய் கூறியதாவது , ” NRC – NPR ஆகியவற்றிற்காக அதிகாரிகள் உங்களிடம் கணக்கெடுக்க வந்தால் பொய்யான பெயரையும், போலியான தகவலையும் கொடுத்து அவர்களை விரட்டிவிடுங்கள், பிறந்த சான்றிதழ், ஆதார் கார்டு, முகவரிச்சான்று, டிரைவிங் லைசன்ஸ் என எது கேட்டு வந்தாலும் அவர்களுக்கு காண்பிக்காதீர்கள். போலீசாரிடம் லத்தி அடி வாங்கவும், புல்லட்டுகளால் துளைக்கப்படவும் நாம் இங்கே […]
நீதிபதி லோயா: “ராஜினாமா செய்து விட்டு ஊருக்கு வந்து விவசாயம் செய்வேனே தவிர தவறான தீர்ப்பு வழங்கமாட்டேன்”- இறப்பதற்கு முன்பு லோயா நண்பரிடம் கூறியவை !
தவறான தீர்ப்பு வழங்குவதற்கு பதிலாக., வேலையை ராஜினாமா செய்துவிட்டு கிராமத்திற்கு வந்து விவசாயம் செய்ய விரும்புகிறேன் – இறப்பதற்கு முன்பு தனது கல்லூரி நண்பரிடம் மனமுடைந்து பேசிய நீதிபதி லோயா! நவம்பர் 27ம் தேதி அன்று லாத்தூர் பார் கவுன்சில் உறுப்பினர்கள் லாத்துர் மாவட்ட நீதிமன்றத்திலிருந்து புறப்பட்டு லாத்துர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஒரு பேரணியை நடத்தியிருக்கின்றனர். அவர்கள் நீதிபதி லோயா வின் மரணத்தில் முறையான நீதி விசாரணை கோரி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு ஒன்றை […]
பாபர் பள்ளி:’நீதி வழக்காடிக்கு சாதகமாக இருந்தாலும், சட்டம் முரணாக இருக்கும்’- வழக்கறிஞர் பிரபு ராஜதுரை!
சில சமயங்களில் நீதி ஒரு வழக்காடிக்கு சாதகமாக இருந்தாலும், சட்டம் அதற்கு முரணாக இருக்கும். நீதிபதிகளும், ‘உங்களுக்காக நாங்கள் அனுதாபப்படுகிறோம். சாரி’ என்று வழக்கை முடித்து விடுவார்கள். கேட்டால் ‘இது கோர்ட் ஆஃப் லா நாட் கோர்ட் ஆஃப் ஜஸ்டிஸ்’ என்பார்கள். நீதிபதி பகவதி, ‘பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதகமாக சட்டம் வளைக்கப்பட வேண்டும்’ என்று வெளிப்படையாக சொல்லிச் செய்ததை பல நீதிபதிகள் சொல்லாமல் செய்வார்கள். உச்ச நீதிமன்றத்துக்கு அந்தப் பிரச்னையில்லை. முழுமையான நீதி என்ற பெயரில், சட்டத்தைப் பற்றிக் […]
ஃபாத்திமாவிற்கு ஆதரவாக ஐஐடி மாணவி அல்பியா ஜோஸ்!
நான் ஒரு ஐஐடி மெட்ராஸின் மாணவன். எனது கல்வி வளாகம் வரு ஒரு உயரடுக்கு சாதியவாத, இனவாதம் பேசும் வன்முறைகூடம். மிக முக்கியமாக அது இஸ்லாமோபோபியாவை கடைபிடிக்கிறது. நவம்பர் 8ம்தேதி ஐஐடி மெட்ராஸில் முதலாமாண்டு எம்.ஏ மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் மாணவி ஃபாத்திமா லத்தீஃப் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். (நானும் அந்த துறையைச் சார்ந்தவன் தான்). இந்த கல்வி வளாகத்தின் அலட்சியம் குறித்தும் அதன் இயல்பான ஆதிக்க தன்மை குறித்தும் குறிப்பாக இங்குள்ள மாணவர்கள் குறித்தும் […]
சென்னை ஐஐடி மாணவி பாத்திமாவின் தாயின் குமுறல்!
எங்களுக்கு பெண் பிள்ளையை வெளியூரில் உள்ள கல்விக்கூடத்திற்கு அனுப்புவதற்கு பயமாக இருந்தது. நாட்டில் நிலவிவரும் மதவெறுப்பின் காரணமாக எனது மகளை முக்காடு(சால்)அணிவதற்கு கூட வேண்டாமென மறுத்துவிட்டோம். எங்கே முக்காடு அணிந்தால் இஸ்லாமியப் பெண் என்ற அடிப்படையில் அவள் தொல்லைகளுக்கு உட்படுவாளோ என நாங்கள் அஞ்சினோம். நாங்கள் என்ன செய்ய பெயர் ஃபாத்திமா லத்தீஃப் ஆகிவிட்டதே. எல்லா பிள்ளைகளைப் போல சாதாரணமாக உடை அணிந்துகொள் என்று வலியுறுத்தினோம். ஏனெனில் நாட்டில் நிலவும் சூழல் அப்படிப்பட்டது. முதலில் அவளுக்கு பனாரஸில் […]