ஒரு அரசு சாரா நிறுவனத்தின் உதவி எண் மூலம் பெறப்பட்ட அழைப்புகளின் தரவுகளின் அடிப்படையில் இந்த ஆண்டு ஜூலை வரை கிறிஸ்தவர்கள் மீது 300-க்கும் மேற்பட்ட தாக்குதல்தல்கள் நடைபெற்றுள்ளதாக, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல். இந்த மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ‘பொய்யானவை’ ‘உள்நோக்கம் கொண்டவை’ என்றும் உச்ச நீதிமன்றத்தில் மோடி அரசு தெரிவித்துள்ளது. உபியில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்: கடந்த ஆகஸ்ட் 28 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள ஹர்சந்த்பூர் என்ற கிராமத்தில் மூன்று நபர்கள் […]
Christians
கர்நாடகா: கிறிஸ்தவ குடும்பத்தார் வீட்டிற்குள் புகுந்து பைபிளை எரித்த இந்துத்துவா கும்பல் !
பாஜக ஆளும் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள மல்லேனு கிராமத்தில் (ஹிரியூர் தாலுகா) செவ்வாய்க்கிழமை மாலை இந்துத்துவாவினர் ஒரு வீட்டுக்குள் புகுந்து பைபிளை தீ வைத்து எரித்துள்ளனர். ஏகாந்தம்மா என்ற 62 வயது மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்த நான்கு பேர் கொண்ட கும்பல், வீட்டில் ஏன் பிரார்த்தனை நடத்துகிறீர்கள் என அங்கிருந்தவர்களை மிரட்டி பைபிளை எரித்துள்ளனர். இது குறித்து இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. சித்ரதுர்கா எஸ்.பி., பரசுராமன் கூறுகையில், ” 62 வயதான மூதாட்டி […]
‘2021ல் இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 486 வன்முறை தாக்குதல் சம்பவங்கள்’ – கேரள முதல்வர் பினராயி
கொச்சி: இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டுமே, 486 கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் நினைவுகூர்ந்தார். வரவிருக்கும் திருக்காக்கரை இடைத்தேர்தலை ஒட்டி பிரச்சார கூட்டம் ஒன்றில் பங்கேற்ற முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் எம்எல்ஏ பிசி ஜார்ஜின் வெறுப்புப் பேச்சு குறித்தும், அவருக்கு பாஜக ஆதரவு அளித்து வருவது குறித்தும் அவர் குறிப்பிட்டு பேசினார். கடந்த ஆண்டு, நாட்டின் பல பகுதிகளில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான 486 தாக்குதல்கள் நடந்தன. […]
வெறுப்பு பிரச்சாரம், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு -இந்திய கத்தோலிக்க யூனியன்
புதுடெல்லி: சமீப காலமாக இந்தியாவில் மத நல்லிணக்கதிற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து மற்றும் மத சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரங்களை குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக மிகப்பெரிய மற்றும் பழமையான கிறிஸ்தவ அமைப்பான அகில இந்திய கத்தோலிக்க யூனியன் (AICU) புதன்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களை ஆரம்பத்திலேயே தக்க முறையில் கட்டுபடுத்த தவறினால், அது தேசிய அமைதி மற்றும் சேதத்திற்கு சொல்லொணாத் தீங்கு விளைவிக்கும் என்றும் கிறிஸ்தவ அமைப்பு எச்சரித்துள்ளது. இந்த போக்கை மாற்றியமைக்கவும், […]
கேரள கன்னியாஸ்திரிகள் மீதான பஜ்ரங் தள் அமைப்பினரின் தாக்குதலை கண்டிக்குமாறு கேரள முதல்வர், அமித் ஷாவுக்கு கடிதம் !
உத்தரபிரதேசத்தில் ரயில் பயணத்தின்போது கேரள கன்னியாஸ்திரிகள் குழுவை பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்கியதற்கு சிரோ மலபார்-சர்ச் கண்டன அறிக்கை வெளியிட்ட ஒரு நாளில், இந்த சம்பவத்தை கண்டித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதி உள்ளார். கடிதத்தில் இந்த தாக்குதலை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார். தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்யுமாறு உள்துறை அமைச்சரை, பினராயி கேட்டுக் கொண்டார். […]
சத்தீஸ்கர் மாநிலத்தில் கிறிஸ்துவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் ..
கடந்த மார்ச் 8ம் தேதி அன்று, இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தார் மாவட்டத்தின் சுர்குடாவில் ஒரு கிறிஸ்தவ தனியார் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது, சுமார் 70 பேர் கொண்ட ஒரு கும்பல் அங்கே சென்று வன்முறை செயலில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் சுமார் இரவு 8.30 மணியளவில் ஜாகு என்ற நபருக்கு சொந்தமான வீட்டில் நடைபெற்றுள்ளது, அவ்விடத்தில் சுமார் 30 பேர் பிரார்த்தனை செய்ய கூடியிருந்தனர். கும்பலில் இருந்த சிலர் ஆயுதங்களை வைத்திருந்தாகவும், […]
கர்நாடகா : இந்துத்துவாவினரின் புகாரின் பேரில் 12 அடி இயேசு சிலையும் 14 சிலுவைகளும் தகர்ப்பு !
பாஜக ஆளும் மாநிலமான கர்நாடகாவின் தேவநஹள்ளியில் கிறிஸ்தவர்களுக்கு சொந்தமான கல்லறை தோட்டத்தில் அமைந்துள்ள 12 அடி நீளமுள்ள இயேசு கிறிஸ்து சிலையும், 14 சிலுவைகளையும் தகர்த்தெறிய பட்டுள்ளது. இது குறித்து தி டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது. இந்துத்துவ அமைப்புகள் அராஜகம்: பிப்ரவரி 23 அன்று இந்துத்துவ அமைப்புகளான பஜ்ரங் தாள் மற்றும் இந்து ரக்ஷனா வேதிகே பல ஆண்டுகளாக கிறிஸ்துவர்கள் வழிபட்டு வரும் இடத்திற்கு சென்று கட்டாய மத மாற்றத்தில் ஈடுபடுவதாக கூறி பிரச்னை செய்துள்ளனர், மேலும் […]
கோவா: கத்தோலிக்க திருச்சபை சிஏஏ வுக்கு கடும் எதிர்ப்பு; செய்வதறியாது திகைத்து நிற்கும் கத்தோலிக்க பாஜக எம்.எல்.ஏ க்கள்!!
கடந்த பிப்ரவரி 9 அன்று, கோவாவில் உள்ள கத்தோலிக்க சமூகத்தின் பேராயர் குடியுரிமை திருத்த சட்டம், 2019 க்கு எதிராக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். “சிஏஏ சட்டத்தை உடனடியாகவும், எந்த நிபந்தனையுமின்றியும் ரத்து செய்ய வேண்டும். என்.பி.ஆர் மற்றும் என்.ஆர்.சி ஐ செயல்படுத்துவதை கைவிட வேண்டும்” என்று அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கிறது அந்த அறிக்கை. எனினும் அறிக்கை பரவலாக மீடியாக்களால் கொண்டு செல்லப்படவில்லை. இந்த திருச்சபையின் நிலைப்பாடானது, கோவாவின் சட்டமன்றத்தின் எட்டு கத்தோலிக்க உறுப்பினர்களின் அரசியல் செல்வாக்கில் மோசமான […]
பெங்களூரு : தேவாலயத்தை சூறையாடிய பாசிச கும்பல் !
கடந்த ஜனவரி 20 திங்கள் நள்ளிரவில் பாஜக ஆளும் மாநிலமான கர்நாடகாவில் உள்ள பெங்களூரு தேவாலயம் ஒன்றிற்குள் புகுந்த பாசிச கும்பல் ஒன்று தேவாலயத்தை சூறையாடியுள்ளது. அடையாளம் காணப்படாத சிலர் கெங்கேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செயின்ட் பிரான்சிஸ் ஆஃப் அசிசி தேவாலயத்தை சூறையாடியுள்ளனர். எனினும் இது பரவலாக மீடியாக்களில் வெளியாகாமல் மூடி மறைக்கப்பட்டுள்ளது. “இது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. தேவாலயத்தின் புனிதத்தை அழிக்கும் நோக்கிலும், இயேசுவை இழிவுபடுத்தும் நோக்கி லும் இப்படி செய்யப்பட்டுள்ளது எனக்கு மிகுந்த […]
பாதிரியார் மற்றும் அவரது 2 மகன்களும் பாசிச பயங்கவாதிகளால் உயிரோடு எரித்து கொல்லப்பட்ட நாள் இன்று!
வரலாற்றில் இன்று கிரஹாம் ஸ்டேன்ஸ் பாதிரியாரும் அவரது இருகுழந்தைகளும் பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகளால் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட நாள் ஜனவரி 22, 1999 என்ற விஷயம் எத்தனை நபர்களுக்கு தெரியும் ..! ஒரிசா மாநிலத்தில் கடந்த 1999-ஆம் ஆண்டு பஜ்ரங் தள்ளைச் சேர்ந்த தாரா சிங் என்ற இந்துத்துவ பயங்கரவாதியின் தலைமையில் வந்த கும்பலொன்று… அம்மாநிலத்தில் கிறித்துவ மதத்தையும் பரப்பி கொண்டு பல்வேறு மக்கள் தொண்டுகளையும் செய்து கொண்டிருந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறித்துவப் […]
இயேசு கிறிஸ்து சிலை கூடாது; சங்பரிவார கூட்டத்தினர் ஆர்ப்பாட்டம்!
இந்துத்துவாவினர் ஆர்ப்பாட்டம்: நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பாஜக ஆளும் கர்நாடகாவின் கனகாபுராவில் உள்ள கபாலா பெட்டாவில் 114 அடி உயர இயேசு கிறிஸ்துவின் சிலை நிறுவ திட்டமிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக, இந்து ஜாக்ரன் வேதிகே, விஸ்வ இந்து பரிஷத் மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகிய அமைப்பை சேர்ந்தவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிலை கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள நிலத்தில் முனீஷ்வராவுடன் (இந்து தெய்வ சிவனின் ஒரு வடிவம்) ஒரு பழங்கால தொடர்பு (!) […]
மே.வங்கம் :”ஆர்எஸ்எஸ்/ பாஜக வினர் தேவாலயத்தின் மீது குண்டு வீச்சு, அனைத்து பொருட்களையும் அடித்து உடைத்தனர்”- தேவாலய ஆயர் குற்றச்சாட்டு..
நேற்று (29-12-19) ஆர்எஸ்எஸ் /பாஜக வை சேர்ந்த 8 நபர்கள் அடங்கிய கும்பல் ஒன்று மேற்கு வங்கத்தில் உள்ள கிருஸ்துவ தேவாலயதில் கையெறி குண்டுகளை வீசியும் அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளதாகவும் தேவாலய நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர். சம்பவம் நடைபெற்ற சமயத்தில் தேவாலயத்திற்குள் மக்கள் இருந்ததாகவும் குண்டு சப்தத்தை கேட்டு பயந்த ஓடிய பிறகு அங்குள்ள பொருட்களை அடித்து உடைத்ததாகவும் நிர்வாகிகள் கூறியுள்ளனர். கொல்கத்தாவிலிருந்து 120 கி.மீ தூரத்தில் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் பகவான்பூரில் மதியம் 2 மணியளவில் […]
கேரள தேவாலயத்திற்குள் முஸ்லிம்களை போல் ஆடை அணிந்து CAA எதிர்ப்பு: விழித்தெழும் பழைய இந்தியா!
சுமார் 62 லட்சம் கிறுஸ்தவ ஜனத்தொகையை உடையது கேரளம். 3.34 கோடி மக்களில் அவர்கள் மூன்றாவது பெரிய மக்கட்தொகையுடைய குடிமக்களாக அங்கு வாழ்கின்றனர். இந்திய அரசு அறிவித்திருக்கும் குடியுரிமை சட்டத்திருந்த்த்திற்கு தங்களது ஆதரவு இல்லை என்பதை அவர்கள் வித்யாசமான முறையில் வெளிப்படுத்தி தங்களது தொப்புள்கொடி உறவுகளான முஸ்லிம்களுக்கு அனுசரணை செய்துள்ளனர். கடந்த வாரம் 22ந்தேதி- Catholic Bishops’ Conference of India (CBCI) சார்பாக ஒரு நிகழ்ச்சியில், “ஒருவரது குடியுரிமை அவரது சாதி,மதம் சார்ந்த அடையாளப்படுத்தப்பட கூடாது” […]
பாலியல் தொழிலில் ஈடுபடுத்த கடத்தப்படும் பாகிஸ்தான் நாட்டு பெண்கள்!
கடந்த 2018 ஆண்டு மட்டும் சுமார் 629 பாகிஸ்தானிய பெண்களை திருமணம் முடித்து அழைத்துப்போகிறோம் என்கிற பெயரிலும், வேலை வாங்கித்தருகிறோம் என்கிற பெயரிலும் சீனர்கள் வந்து பணம் கொடுத்து அழைத்துச்சென்றுள்ளனர். பாகிஸ்தான் நீதிமன்றம் இதனை ஆட்கடத்தல் புகாராக பதிவு செய்து தற்போது விசாரணையை துவக்கியுள்ளது. குறிப்பாக பாகிஸ்தானில் இருக்கும் கிறுஸ்தவப்பெண்களே இதற்கு பலியாகியுள்ளனர். அவர்களை சீனர்களுக்கு விற்க உதவியது அந்நாட்டு திருச்சபை ஊழியர்களில் சிலரும், கடத்தப்பட்ட பெண்களின் உறவினர்களுமே ஆவர். கடந்த 2015ம் ஆண்டு முதல் பாக்-சீன […]
ஜார்கண்டில் பழங்குடியின கிறிஸ்தவர்கள் அடித்து கொல்லப்பட்டதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்!
பரவலான வெறுப்பு குற்றங்கள் காரணமாக ஜார்கண்ட் மாநிலம் சிறுபான்மையினருக்கு திகில் பிரதேசமாகி வருகிறது. பா.ஜ.க. அரசாங்கத்தின் கீழ் கும்பல் கொலைகாரர்கள் தண்டனையில் இருந்து பாதுகாப்பு பெற்று வருகின்றனர்