குடியுரிமை சட்டத்திருத்த மசோதா என்பது இந்தியாவின் மதச்சார்பின்மைக்கும் அதன் ஜனநாயகத்திற்கும் எதிரானது என கருத்து தெரிவித்துள்ளார் கேரள முதல்வர் பிணராயி விஜயன். இந்திய ஜனநாயகச்சட்டங்கள் தனிமனிதருக்கு கொடுத்திருக்கும் சாதி,மத,மொழி,கலாச்சார,பாலின மற்றும் அவரது தொழில் சார்ந்த அத்தனை உரிமைகளுக்கான மதிப்பினையும் சுதந்திரத்தினையும் குழிதோண்டி புதைக்கும் விதமான இச்சட்டம் நாட்டில் மதரீதியான பிரிவினைகளை உருவாக்கிடவே திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. மூன்று நாடுகளை சேர்ந்த குறிப்பிட்ட ஆறு மதம் சார்ந்தவர்களை மட்டும் ஏற்றுக்கொண்டு மற்றுமுள்ள ஒரு குறிப்பிட்ட மதத்தை (இஸ்லாம்) பிரித்து வைத்து […]
CAA
சிஎபி யை எதிர்த்து 25,000 மாணவர்கள் போராட்டம் – AMU பல்கலைக்கழக மாணவர்கள் அறிவிப்பு !
அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் 25,000 மாணவர்கள் சேர்ந்து மத அடிப்படையிலான குடியுரிமை மசோதாவுக்கு எதிராக நாளை முதல் உண்ணாவிரதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர், இது மக்களவையில் திங்கள்கிழமை நள்ளிரவு நிறைவேற்றப்பட்டது, குடிமக்களின் தேசிய பதிவு (என்.ஆர்.சி)யை எதிர்த்தும் மாணவர்கள் கோஷங்களை எழுப்பினர். நாளை முதல் எல்லா கேண்டீன்களும் பூட்டப்படும் மொத்தம் 25000 ஹாஸ்டல் மாணவர்கள் உண்ணாவிரதத்தில் அமரப் போகிறார்கள், ”என்று அமைப்பாளர்களில் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறினார்.“ முஸ்லிம்களை மசோதாவில் இருந்து விலக்குவதும், நாடு தழுவிய என்.ஆர்.சி.யின் அரசாங்கத்தின் திட்டமும் […]
பிரபல அஸ்ஸாம் மாநில நடிகர் பாஜக வில் இருந்து விலகல்;வலுக்கும் சிஎபி எதிர்ப்பு!
மத அடிப்படையிலான குடியுரிமை திருத்த மசோதாவை (சிஎபி ) அமித் ஷா தாக்கல் செய்த ஒரு சில நிமிடங்களில் மத்திய பாஜக அரசின் நடவடிக்கையை எதிர்க்கும் விதமாக பிரபல நடிகர் ரவி ஷர்மா அஸ்ஸாம் மாநில பாரதீய ஜனதா கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சமீபத்தில் தான் பாஜக வில் இணைந்தார். சிஎபி குறித்து பேசிய அவர். “நான் முதலில் ஒரு நடிகன், பிறகு தான் ஒரு அரசியல்வாதி. இன்றைக்கு நான் இந்த நிலைக்கு உயர்வதற்கான காரணம் அஸ்ஸாம் […]
மத அடிப்படையிலான குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு!
மத அடிப்படையிலான குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். மசோதா மீதான விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது. அப்போது பாஜக வுக்கு விலைபோய்விட்டதாக கடுமையாக விமர்சிக்கப்படும் அதிமுக மத அடிப்படையிலான குடியுரிமை திருத்த மசோதாவை ராஜ்யசபாவில் ஆதரித்து வாக்களித்துள்ளது. பாஜக வின் மசோதாவுக்கு ஆதரவு அளிப்பதாக அதிமுக எம்பி எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் அறிவித்துள்ளார். இது இஸ்லாமியர்கள் மற்றும் இலங்கையை சேர்ந்த தமிழ் அகதிகள் மத்தியில் கடும் […]
‘முஸ்லிம்களுக்கு அநீதியிழைத்தால் நானும் முஸ்லிமாக மாறுவேன்’ – சூளுரைத்த ஹர்ஷ் மந்தர்!
பிரபல எழுத்தாளரும் ,உலகறிந்த சமூக சேவகருமான ஹர்ஷ் மந்தர் ஒரு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் கூட. மத்தியப்பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுப்பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்ற பெருமையை விட இவர், கலவரங்களில் அனாதைகளாக்கப்பட்ட முஸ்லிம்,தலித் மற்றும் பழங்குடியினருக்காவும் , மனநல காப்பகங்களில் பிள்ளைகளாலும் உறவினர்களாலும் கைவிடப்பட்ட மனநோய் பாதித்தவர்களை காப்பக கொடுமைகளில் இருந்து மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளித்து வருபவர் என்கிற பெருமதிப்பு உண்டு. “உணவு எனது உரிமை”- என்ற பெயரில் […]